பயமுறுத்தலைவிட நயவஞ்சகம் பலமானது | தமிழ் அறிவு கதைகள்

Ads Below The Title
ஒரு மதிய வேளையில் மரப்பொந்தில் ஆந்தை தூங்கிக் கொண்டிருந்தது. கீழே புல்தரையில் வெட்டுக்கிளி பாட்டுப்பாடி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தது. ஆந்தையால் சகித்துக் கொள்ள முடியவில்லை. கொஞ்சம் பாடுவதை நிறுத்தும்படி ஆந்தை கேட்டது. வெட்டுக்கிளியோ கொஞ்சம் கூட கேட்கவில்லை. கேட்காததோடு மட்டுமல்ல, ஆந்தையைப் பார்த்து திட்டவும் செய்தது . 

"நீ குருட்டுக் கழுதை! பகலில் வெளியே தலை நீட்டுவதில்லை யோக்கியமானவர்கள் எல்லாரும் இரவில் தூங்கிய பின்புதான் நீ வெளியே வருவாய்"என்று துரித்தது.

ஆந்தை சிறிதுநேரம் யோசனை செய்தது. கோபபட்டால் இவனை வெல்ல முடியாது, தந்திரத்தால் தான் வெட்டுக்கிளியை அடக்க வேண்டும் என்று தீர்மானித்து, 

ஆந்தை வெட்டுக்கிளியை நோக்கி "ஏ நண்பனே, என்னைத் தூங்கவிடாமல் நீ செய்ய விரும்பினால் செய்துவிட்டுப் போ. ஆனால் விழித்துக் கொண்டிருப்பதற்கு இனிமையாய் இருப்பதற்காகவாவது உன் சங்கீதம் உபயோகப்படட்டுமே! என்றது 

வெட்டுகிளியோ "என் குரல் இப்படி தான் இருக்கும் இப்படி தான் பாடமுடியும் போ என்றது" 

உன் சாரீரம் இனிமையானது. அதைத் தேவகானம் மாதிரி செய்வதற்கு என்னிடம் ஓர் அருமையான மருந்து இருக்கிறது. அதில் இரண்டு துளி நீ சாப்பிட்டால் போதும். உன் குரலும் அருமையாக மாறிவிடும். மேலே வா தருகிறேன்" என்றது.

ஆந்தை பேச்சைக் கேட்டு ஏமாந்த வெட்டுக்கிளி மரத்தில் ஏறிய ஆந்தையிடம் போயிற்று. பக்கத்தில் வந்ததும்  ஆந்தை வெட்டுக்கிளியை பிடித்து ஒரு கூண்டுக்குள் அடைத்து மூடியது.
பயமுறுத்தலைவிட நயவஞ்சகம் பலமானது | தமிழ் அறிவு கதைகள் பயமுறுத்தலைவிட நயவஞ்சகம் பலமானது | தமிழ் அறிவு கதைகள் Reviewed by haru on October 04, 2011 Rating: 5

No comments