Ads Below The Title

பஞ்சதந்திர கதைகள் - பேராசையால் உயிரிழந்த கொக்கு

பேராசையால் உயிரிழந்த கொக்கு

வசந்தபுரம்என்றொரு ஊர்இருந்தது. அழகியவனாந்தரமும் நீர்நிலைகளும் இருக்கும் அந்தஊரில்ஒருபெரியகுளம்இருந்தது.

அதில்ஒருகொக்குதினசரிமீன்பிடித்து உண்பதைவழக்கமாகக் கொண்டிருந்தது. தினசரிஅதிகநேரம்காத்திருந்து மீனைப்போராடிப் பிடிப்பதால் கொக்குசலிப்புற்றிருந்தது.

ஒருநாள்கொக்கின் மூளையில் ஒருயோசனைதோன்றியது. இந்தமீன்களை அவைகளின் சம்மதத்தோடே நாம்விரும்பிய இடத்தில் கொண்டுபோய்திண்றால் எப்படிஇருக்கும் என்றுயோசித்தது. அதற்குஒருவஞ்சகமான திட்டமும் தயாரித்தது.

ஒருநாள்கொக்குவருத்தமுடன் ஒற்றைக் காலில்நின்றுகொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “கொக்குநம்மைப் பார்த்தவுடன் கவ்விக் கொள்ளுமே. சும்மாவிடாதே, ஆனால்இதுசெயலற்று நிற்கின்றதே என்னவாக இருக்கும்என்று, யோசித்தவாறே அதன்முன்வந்தது.

என்ன கொக்காரே! உன்ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மாநிற்கிறீர்”? என்றது. அதற்குகொக்குகூறிற்று "நான் மீனைகொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்றுஎனக்குமனசுசரியில்லை" என்றது.

மனசு சரியில்லையா ஏன்”? என்றதுமீன்.

அதையேன் கேட்கிறாய்..” என்றுஅலட்டியது கொக்கு.

"பரவாயில்லை சொல்லுங்களேன்' என்றதுமீன். சொன்னால் உனக்குஅதிர்ச்சியாக இருக்கும் என்றதுமீன்.

மீனுக்குப் பரபரத்தது. “சொன்னால்தான் தெரியும்என்றது.

வற்புறுத்திக் கேட்பதால் சொல்கிறேன். இப்போது ஒருமீனவன்இங்கேவரப்போகிறான்”, என்றுஇழுத்தது கொக்கு.

"வரட்டுமே" என்றது மீன்.. “என்னவரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்என்றதுகொக்கு.

இதைக்கேட்டமீன்கள் அனைத்தும் அதிர்ச்சியடைந்தன. அவைதங்களைக் காப்பாற்று மாறுகொக்கிடமே வேண்டின.

ஆனால்கொக்கு"நான்என்னசெய்வேன்? என்னால் மீனவனோடு சண்டைபோடமுடியாது. கிழவன்நான், வேண்டுமானால் உங்களைஇக்குளத்திலிருந்து வேறொருகுளத்துக்குக் கொண்டுபோகிறேன். அதனால்எனக்கும் நல்லபெயர்வரும். நீங்களும் பிழைத்திருப்பீர்கள்", என்றது மிகவும் இறக்கம் கசிய.

மீன்கள் எல்லாம் தம்உயிரைக் காப்பாற்றிக் கொள்ளஅதன்பேச்சைநம்பின.

எங்கள் உயிரைக் காக்கநீங்களே உதவிசெய்கிறேன் என்கிறீர்கள். அதன்படியே செய்யுங்கள்”, என்றனமீன்கள் எல்லாம் ஒருமித்த குரலில்.

கொக்குக்குக் கசக்குமா காரியம்?. நடைக்கு ஒவ்வொன்றாக குலத்திலிருக்கின்ற மீன்களை யெல்லாம் கௌவ்விக் கொண்டுபோய் சிலமீன்களைத் தின்று, மற்றமீன்களை ஒருபாறையில் உலரவைத்து.

குளத்திலிருந்த நண்டுஒன்றுஇதைப்பார்த்துக் கொண்டேஇருந்தது. அதற்கும் வேறுகுளத்திற்குச் செல்லஉள்ளுக்குள் ஆசைசுரந்தது.

அந்தநண்டுகொக்கிடம் வந்துவயோதிகக் கொக்கே! இந்தமீன்களையெல்லாம் எங்கேகொண்டுபோகிறீர்களோ அங்கேயே என்னையும் கொண்டுபோங்கள், என்னையும் மீனவனிடமிருந்து காப்பாற்றுங்கள்”, என்றுகெஞ்சியது. நண்டுகெஞ்சுவதைப் பார்த்த கொக்குஅதன்மேல்இறக்கப்பட்டு நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது. பறக்கும் போதுவழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதை கண்டதுநண்டு.

அதைப்பார்த்த நண்டுக்கு ஒரேஅதிர்ச்சி.

வேறுநீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறிமீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் சட்டென்று புரிந்துவிட்டது. தன்நிலையும் அப்படித்தானா? என்றுநண்டுபயப்படத் துவங்கியது.


உயிரைக் காப்பாற்றிக் கொள்ளநண்டுக்கு ஒருஉபாயம்தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பது போல்அதற்குமூளைவேலைசெய்தது. கொக்காரே! நீங்கள் என்மேல் இறக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். ஆனால்அங்கேஎன்உறவினர்கள் பலர்வரப்போகும் ஆபத்துதெரியாமல் இருப்பதால், என்னைமீண்டும் அங்கேகொண்டுசென்றால் அவர்களிடம் விஷயத்தைச் சொல்லிஅவர்களையும் உங்களுடன் வரத்தயார்செய்வேன்" என்றது நண்டு.

கொக்குக்கு ஒரேசந்தோஷம். இன்னும் நிறையநண்டுகள் கிடைக்கப் போவதைநினைத்து மகிழ்ச்சி அடைந்து.

அப்படியா, இன்னும் இருக்கிறதா நண்டுகள்?”. என்றுகேட்டுக் கொண்டேபழையகுளத்திற்கு மீண்டும் நண்டைக் கொண்டுபோனது.

குளத்துக்கு நேராகவரும்போதும் அதுவரைஅமைதியாக இருந்தநண்டுதன்கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டுதுண்டாக்கிவிட்டுக் குளத்து நீரில்வீழ்ந்து உயிர்பிழைத்துக் கொண்டது.

குளத்தில் மிச்சம் இருந்தமீன்கள் பிழைத்துக் கொண்டன.



பாடம்:மீனைத் தின்பது தான் கொக்கின்குணமே என்னும் போது, கொக்குமீன்களைக் காப்பதாகச் சொன்னதை மீன்கள் நம்பியிருக்கக்கூடாது. வாஞ்சக மனத்தான் உதவிசெய்தாலும் அது அபாயத்தில் முடியும்ஆபத்துண்டு. எனவே ஒருவரை நம்பும்முன்பாக அவரது இயல்பான குணத்தைநன்கறிந்தே நம்புதல் வேண்டும் என்ற கதையை மந்திரியார்இளவரசர்களுக்கு எடுத்துச் சொன்னார்.
பஞ்சதந்திர கதைகள் - பேராசையால் உயிரிழந்த கொக்கு பஞ்சதந்திர கதைகள் - பேராசையால் உயிரிழந்த கொக்கு Reviewed by haru on July 30, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]