நூலகம் சிறப்பு கதை - அச்சுவும், சச்சுவும் | சிந்தனை கதை

Ads Below The Title
அச்சுவும், சச்சுவும்  வேலை தேடித் தேடி அலுத்துப்போனார்கள். இருவரும் உள்ளூர் நாலகத்தில் சந்தித்தபோது, சொந்தமா நகல் (ஜெராக்ஸ்) எடுக்கும் கடை வைப்பது பற்றியும் . நீ பாதி பணம் போடறதா இருந்தா உன்னையும் பங்குதாரா சேர்த்துக்கறேன்” என்றும் கூறினான் அச்சு.


சரி என்றான் சச்சு.

ஆச்சு ஆர்வத்துடன் ஒரு வார இதழை எடுத்து அதில் வந்திருந்த நகல் இயந்திர (ஜெராக்ஸ் மிஷின்) விற்பனை செய்யும் நிறுவனத்தின் விளம்பரத்தைக் காட்டினான்.

அந்தக் கம்பெனியின் விலாசத்தை எழுத பேனாவை எடுத்தான் சச்சு.

அதற்குள் அச்சு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு விளம்பரம் வந்த பக்கத்தை அப்படியே கிழித்து பாக்கெட்டில் திணித்துக் கொண்டான்.

”வா, வெளியே போய் பேசலாம்” என்றான் அச்சு

சச்சுக்குவுக்கு  மனசு உறுத்தியது. பலர் படிக்க வேண்டிய நூலகப் புத்தகத்தில் இருந்து அக்கறை இன்றி கிழிக்கிறானே, இவனை நம்பி பணம் போட்டு பங்குதாரராய் சேர்ந்தால்…?

வெளியே வந்த்தும், ”மன்னிக்கவும், நான் பங்குதாரராய் சேரலை” என்றான் சச்சு.

கவனிக்க
அச்சுவை போல் நூலகத்தில் உள்ள நூல்களில் ஏடுகளை கிழிக்காதீர்: இன்று உங்களுக்கு பயன்பட்டது போல் வரும் காலங்களில் எல்லோருக்கும் பயன்பட தேவை அந்த புத்தகங்கள்.
நூலகம் சிறப்பு கதை - அச்சுவும், சச்சுவும் | சிந்தனை கதை நூலகம் சிறப்பு கதை - அச்சுவும், சச்சுவும் | சிந்தனை கதை Reviewed by haru on July 03, 2012 Rating: 5

No comments