Ads Below The Title

தெனாலிராமன் கதைகள் : ராஜகுருவை பழிக்குப் பழி வாங்குதல்

ராஜகுருவை பழிக்குப் பழி வாங்குதல்:

ஒரு நாள் அதிகாலை நேரம்ராஜகுரு குளத்துக்குக் குளிக்கச் சென்றார். அப்போது அவரை அறியாமலேயேதெனாலிராமன் பின் தொடர்ந்தான். குளக்கரையைஅடைந்ததும் ராஜகுரு துணிமணிகளை எல்லாம்களைந்து கரையில் வைத்துவிட்டு நிர்வாணமாககுளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்ததார். மறைந்திருந்த தெனாலிராமன் ராஜகுருவின் துணிமணிகளை எடுத்துக்கொண்டு மறைந்து விட்டான்.

குளித்து முடித்து கரையேறிய ராஜகுரு துணிமணிகளைக் காணாதுதிடுக்கிட்டார். உடனே தெனாலிராமன் அவர்முன் தோன்றினான்.

தெனாலிராமனிடம் ராஜகுரு எனது துணிமணிகளைக்கொடு என்று கெஞ்சினார். அதற்குத்தெனாலிராமனோ உன் துணிமணிகளை நான்பார்க்கவில்லை. நானும் குளிக்கவே இங்குவந்துள்ளேன். என்னிடம் வம்பு செய்யாதீர்கள் என்றான்.

ராமா.. என் துணிமணிகளைக் கொடுத்துவுடு. இன்னும் சிறிது நேரத்தில் நன்குவிடியப்போகிறது. இக்குளத்துக்கு பெண்கள் குளிக்க வந்துவிடுவார்கள். உடனே என் துணிமணிகளைக்கொடு என்று மீண்டும் மீண்டும்கெஞ்சினார்.

அவர் கெஞ்சுதலைக் கேட்ட தெனாலிராமன் என்நிபந்தனைக்கு உட்பட்டால் உம் துணிமணிகளைத் தருகிறேன். இல்லையேல் தர முடியாது என்றுகூறி விட்டான். என்னை அரண்மனை வரை உன்தோளில் சுமந்து செல்ல வேண்டும். அப்படியென்றால் தருகிறேன், இல்லையென்றால் தரமுடியாது என்று கூறி விட்டான்.

தெனாலிராமன் மிகப் பொல்லாதவன் எனஅறிந்து கொண்ட ராஜகுரு சம்மதித்தார். பின் துணிமணிகளை ராஜகுருவிடம் கொடுத்தான். உடையணிந்து கொண்ட ராஜகுரு தெனாலிராமனைதன் தோள் மீது சுமந்துசென்று கொண்டிருந்தார். இதை ஊர் மக்கள்அனைவரும் வேடிக்ககை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதை மன்னர் கிருஷ்ண தேவராயரும்உப்பரிகையிலிருந்து பார்த்து விட்டார். உடனே தனது காவலாளிகட்குஉத்தரவிட்டார். அதாவது தோள் மேல்இருப்பவனை நன்கு உதைத்து என்முன்நிற்பாட்டுங்கள் என்று.

உப்பரிகையிலிருந்து மன்னன் பார்த்து விட்டதைஅறிந்த தெனாலிராமன், அவர் தோளிலிருந்து இறங்கிஅவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் ஐயா என்னை மன்னியுங்கள். ராஜகுருவை அவமானப்படுத்திய பாவம் என்னைச் சும்மாவிடாது. ஆகையால் என் தோள் மீதுதாங்கள் அமருங்கள். நான் உங்களை சுமந்துசெல்கிறேன் என்றான். அவன் பேச்சை உண்மையென்றுநம்பிய ராஜகுரு தெனாலிராமன் தோள்மீதுஉட்கார்ந்து கொண்டான். தெனாலிராமன் ராஜகுருவை சுமந்து சென்று கொண்டிருக்கையில்காவலாட்கள் அருகில் வந்துவிட்டனர். ராஜகுருவைநையப்புடைத்து மன்னர் முன் நிற்பாட்டினார்கள்.

இதைப் பார்த்த மன்னர் ராஜகுருவைஏன் அடித்தீர்கள் என வினவினார் அதற்குகாவலாட்கள் தெனாலிராமன் தோள் மீது அமர்ந்துஇருந்தவர்தான் இந்த ராஜகுரு. தாங்கள்தானே தோள் மீது அமர்ந்திருப்பவரைஅடித்து உதைக்கச் சொன்னீர்கள். அதன்படியே செய்துள்ளோம் என்றனர்.

மன்னர் ராஜகுருவை அழைத்து விவரத்தைக் கேட்டார். ராஜகுருவும் தன் தவறை உண்மையென்றுஒத்துக்கொண்டார். தெனாலிராமன் செய்கை மன்னருக்கு நகைச்சுவையுண்டுபண்ணினாலும் அவன் செய்த தவறுக்குதக்க தண்டனை வழங்க விரும்பினார்.

ஆகையால்தெனாலிராமனை அழைத்து வர அரண்மனைகாவலாட்களை அனுப்பினார். காவலாட்களும் தெனாலிராமனை சிறிது நேரத்தில் மன்னர்முன் கொண்டு வந்து நிற்பாட்டினார்கள்.

தெனாலிராமன் நீ ராஜகுருவை அவமானப்படுத்திவிட்டாய். மேலும் அவரை உதையும் வாங்கவைத்துவிட்டாய். இது மன்னிக்க முடியாதகுற்றமாகும். ஆகவே உன்னை சிரத்தேசம்செய்ய உத்தரவு இடுகிறேன் என்றார்மன்னர்.

இதைக் கேட்ட தெனாலிராமன் தன்உயிருக்கு ஆபத்து வந்ததை எண்ணிவருந்தினார். அவன் தன் இஷ்டதேவதையான காளி தேவியை தன்னைக்காப்பாற்றும்படி மனதிற்குள் துதித்தான்.

காவலாட்களும் அவனை கொலை செய்யஅழைத்துச் சென்றார்கள். அப்போது அவர்களிடம் தன்னைவிட்டுவிடும்படியும் பணமும் தருவதாகவும் வேண்டினான். காவலாட்களும் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவனது வேண்டுகோளுக்குஇணங்கி கொலை செய்யாமல் விட்டுவிட்டனர்.
இனி இவ்வூரில் இருக்காதே, வேறு எங்காவது போய்விடுஎன்று சொன்னார்கள். அவர்களிடம் அப்படியே செய்கிறேன் என்று சொல்லிய தெனாலிராமன்தன் வீட்டிலேயே ஒளிந்து கொண்டான்.

காவலாட்களும் ஒரு கோழியை அறுத்துஅதன் இரத்தத்தை வாளில் தடவி மன்னரிடம்தெனாலிராமனை கொலைசெய்து விட்டோம் என்று சொல்லி விடடனர். மன்னரும் இதை உண்மை என்றுநம்பினார்.

தெனாலிராமன் கொலை செய்யப்பட்ட செய்திஊர் முழுவதும் தீ போல் பரவியது. அப்போது சில அந்தணர்கள் மன்னரைச்சந்தித்தனர். நியாயமாக ஒரு பார்ப்பனரைக் கொன்றதுமிகக்கொடிய பாவமாகும். அவனது ஆவி தங்களுக்கும்நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என்றனர். இதைக்கேட்ட மன்னர் கலங்கினார்.

இதற்குப் பரிகாரம் என்னவென்று மன்னர் கேட்டார். அதற்குஅந்தணர்கள் அவன் ஆவி சாந்திஅடைய அமாவாசை அன்று நள்ளிரவுசுடுகாட்டிற்குச் சென்று பூஜை செய்தால்நலம் என்றனர்.

உடனே மன்னர் ராஜகுருவை அழைத்துஅமாவாசையன்று நள்ளிரவு சுடுகாட்டில் தெனாலிராமன் ஆவிக்கு பூஜை செய்யஉத்தரவு விட்டார்.

இதைக்கேட்ட ராஜகுரு நடுநடுங்கினார். நடுகாட்டில்நள்ளிரவு நேரத்தில் பூஜை செய்வது என்றால்எனக்குப்பயமாக இருக்கிறது என்றார். அப்படியென்றால் துணைக்கு சில புரோகிதர்களையும் அழைத்துச்செல்லுங்கள் என மிகக் கண்டிப்புடன்மன்னர் கட்டளையிட்டார்.

மன்னர் கட்டளையை மீற முடியாத ராஜகுருபூஜைக்கு ஒத்துக்கொண்டார்.

அமாவாசை அன்று நள்ளிரவு புரோகிதர்கள்சகிதம் சுடுகாட்டிற்குச் சென்று பூஜை நடத்தினார்கள். ராஜகுரு பூஜையின் இறுதியில் அங்கிருந்த மரத்தை மேல் நோக்கிப்பார்த்து தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்மராட்சசனே என்று பலத்த குரலில்அழைத்து எங்களுக்கு ஒரு தீங்கும் செய்யாதே... உன் ஆன்மா சாந்தியடைய பூஜைசெய்துள்ளோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதேமரத்திலிருந்து ஓர் உருவம் பயங்கரசத்தத்தோடு கீழே குதித்தது.

இதைப்பார்த்த ராஜகுருவும் புரோகிதர்களும் பயத்தால் நடு நடுங்கி அலறிஅடித்துக்கொண்டு அரண்மனைக்கு ஓடினார்கள்.

அப்போது நடுநிசி நேரமாதலால் மன்னர்ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். இருப்பினும் மன்னரை எழுப்பினார். நடந்தவற்றைநடுக்கத்தோடு கூறினார்.

இதைக் கேட்ட மன்னர் இதற்குபரிகாரம் காண ஆழ்ந்த யோசனைசெய்தார். பின் ஒரு முடிவுக்குவந்தார்.
தெனாலிராமன் ஆவியாகிய பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்டி நாட்டிற்கு நன்மை உண்டாகச் செய்பவர்களுக்குஆயிரம் பொன் பரிசளிக்கப்படும் என்றுபறைசாற்றி அறிவிக்கச் செய்தார்.

இதைக் கேட்ட நாட்டு மக்கள்யாரும் பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்ட முன் வரவில்லை.

சில நாட்களுக்குப்பின் ஒரு துறவி மன்னரைக்காணவந்தார். மன்னரும் அந்தத்துறவியிடம் தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்ம ராட்சசனை ஒழித்துக்கட்டும்படி வேண்டினார்.

இதைக்கேட்ட துறவியர், மன்னர் பெருமானே, கவலையைவிடுங்கள், பிரம்மராட்சசனை என்னல் முடிந்தளவு ஒழித்துக்கட்டமுயற்சிக்கிறேன். இது நிரந்தரமான ஏற்பாடாகஇருக்காது. மீண்டும் தெனாலிராமன் உயிர் பெற்று வந்தால்தான் பிரம்மராட்சசனுடைய அட்டகாசம் சுத்தமாக குறையும் என்றார்.

அப்படியானால் தங்களால் மீண்டும் தெனாலிராமனை உயிர்ப்பிக்க முடியுமா? என வினவினார் மன்னர். ! தாராளமாக என்னால் முடியும் என்றார்துறவு.

மன்னர் மகிழ்ந்து தாங்கள் தெனாலிராமனை உயிர்ப்பித்துக்காட்டுங்கள். அதுவே எனக்குப் போதும்என்றார்.

உடனே துறவியார் தான் அணிந்திருந்த வேடத்தைக்கலைத்தார். நான்தான் தெனாலிராமன். துறவி வேடத்தில் வந்தேன்என்றார்.

இதையறிந்த மன்னர் மகிழ்ந்து தெனாலிராமனைக்கட்டித் தழுவிக் கொண்டார். பின்ஆயிரம் பொன் பரிசளித்தார்.
தெனாலிராமன் கதைகள் : ராஜகுருவை பழிக்குப் பழி வாங்குதல் தெனாலிராமன் கதைகள் : ராஜகுருவை பழிக்குப் பழி வாங்குதல் Reviewed by haru on July 20, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]