எது...? எது...?
எது...? எது...?
அரசர் கிருஷ்ண சந்திரர் அரியணையில்வீற்றிருந்தார். அப்போது நவாபின் தூதன்அங்கு வந்தான். அரசர் அவனை வரவேற்றார்.
அந்த தூதன் இரண்டு வாத்துக்குஞ்சுகளை அவர் முன் வைத்தான்.
அரசர் வாத்துக் குஞ்சுகளைக் கவனித்தார். இரண்டும் ஒரே நிறம்; ஒரேஅளவுடையதாக இருந்தது. அவற்றிற்குள் எந்த வேறுபாடும் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஒன்றும் புரியாமல் தூதனைபார்த்தார் அரசர்.
“அரசே! நவாப் அவர்கள் இந்த வாத்துக்குஞ்சுகளை அனுப்பி உள்ளார். இவற்றில்எது ஆண் வாத்து என்பதைத்தாங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
அப்படிக் கண்டுபிடித்ததற்கான காரணத்தையும் சொல்ல வேண்டும். அப்படிச்செய்தால், இந்த ஆண்டு நீங்கள்கப்பம் கட்ட வேண்டாம். செய்யஇயலாவிட்டால் உங்கள் சிற்றரசை எங்கள்நாட்டுடன் இணைத்துக் கொள்வோம்,'' என்றான் தூதன்.
அப்படிக் கண்டுபிடித்ததற்கான காரணத்தையும் சொல்ல வேண்டும். அப்படிச்செய்தால், இந்த ஆண்டு நீங்கள்கப்பம் கட்ட வேண்டாம். செய்யஇயலாவிட்டால் உங்கள் சிற்றரசை எங்கள்நாட்டுடன் இணைத்துக் கொள்வோம்,'' என்றான் தூதன்.
அரசர் மீண்டும், அந்த வாத்துக் குஞ்சுகளைஉற்றுக் கவனித்தார். கடினமான சோதனைதான் தனக்குவைக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொண்டார்.
“இவற்றில்எது ஆண் வாத்து என்பதைக்கண்டுபிடிக்க முடியுமா?'' என்று அமைச்சர்களை பார்த்துக்கேட்டார்.
அமைச்சர்கள்எல்லாரும் அமைதியாக இருந்தனர்.
எப்படிகண்டுபிடிப்பது என்று கவலையில் ஆழ்ந்தார்அரசர்.
அங்கு வேலை செய்துக் கொண்டிருந்தகோபால் இதை கவனித்தான். அவன்அரசனிடம் சென்று, “அரசே! கவலைப்பட வேண்டாம்... எது ஆண் வாத்து என்பதைநான் கண்டுபிடிக்கிறேன்!'' என்றான்.
“எப்படிக்கண்டுபிடிப்பாய்?'' என்று கேட்டார்.
“அரசே! அந்த இரண்டு வாத்துக் குஞ்சுகளையும்அரண்மனைக் குளத்திற்கு எடுத்து வரச் சொல்லுங்கள்தூதனை. நாம் அனைவரும் அரண்மனைகுளத்திற்கு செல்வோம்,'' என்றான்.
எல்லாரும்அரண்மனை குளத்தை அடைந்தனர்.
தூதனிடமிருந்துஇரண்டு வாத்துக் குஞ்சுகளையும் வாங்கினான் கோபால். அவற்றை அரண்மனைக்குளத்தில் விட்டான்.
இரண்டும்மகிழ்ச்சியாக நீந்தத் தொடங்கின. அவற்றில்முன்னால் சென்ற வாத்தை சுட்டிக்காட்டி, “இதுதான் ஆண் வாத்து!'' என்றான்.
“எப்படிஅவ்வளவு உறுதியாக சொல்கிறாய்?'' என்றார் அரசர்.
“அரசே! முன்னால் செல்கிற வாத்து ஆண்வாத்து. பின்னால் செல்கிற வாத்து பெண்வாத்து. எப்போதும் ஆண் வலிமை மிகுந்ததாகஇருக்கும். பெண் மென்மையானதாக இருக்கும். அதனால், முன்னால் நீந்திச் சென்றது ஆண் வாத்தாகத்தான்இருக்க வேண்டும்,'' என்றான்.
“கோபால்! உனக்கு எப்படி நன்றி சொல்வதுஎன்றே எனக்குத் தெரியவில்லை,'' என்ற அவர் அவனைக்கட்டித் தழுவிக் கொண்டார்.
அந்த வாத்துக் குஞ்சுகளை எடுத்துக் கொண்ட தூதன் அங்கிருந்துஏமாற்றத்துடன் புறப்பட்டான்.
Source : தினமலர்
எது...? எது...?
Reviewed by haru
on
August 10, 2012
Rating:
No comments