Adolf Hitler History in Tamil | ஹிட்லரின் வரலாறு
ஹிட்லரின் வரலாறு
இரண்டாம்உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும்ஒருவரே. அவர்தான் ஹிட்லர். முதல் உலகப் போரின்போதுஜெர்மனி படையில் ராணுவ வீரராகஇருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாகவிளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலேஉலகம் நடுங்கியது.
இரண்டாம்உலகப்போர் மூள்வதற்கும், அதன் மூலம் 5 கோடிபேருக்கு மேல் சாவதற்கு காரணமாகஇருந்த ஹிட்லரின் வாழ்க்கை, பல திருப்பங்களும், திடுக்கிடும்சம்பவங்களும் நிறைந்தது.
வட ஆஸ்திரியாவில் உள்ள பிரானவ் என்றஊரில் 1889-ம் ஆண்டு ஏப்ரல்20-ந்தேதி பிறந்தவர் ஹிட்லர். இவருடைய தந்தையின் பெயர்அலாய்ஸ் ஷிக்கிள் கிரப்பர் ஹிட்லர். இவர் சுங்க இலாகாஅதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மூன்று மனைவிகள். மூன்றாவதுமனைவியான கிளாராவின் நான்காவது மகன் ஹிட்லர். பிறந்ததுமுதலே ஹிட்லர் நோஞ்சானாக இருந்தார். அடிக்கடி காய்ச்சல் வரும். கிட்டத்தட்ட ஒருவருடத்துக்குப் பிறகுதான் உடம்பு தேறியது.
அலோய்ஸ்கண்டிப்பான தந்தை. தந்தைசுங்க அதிகாரியாகப் பணியாற்றியதால், அடிக்கடி வெளிஊர் சென்றுவிடுவார். அதனால், ஹிட்லருக்கு அம்மாவிடம் செல்லம் அதிகம். தாய்மீது மிகுந்த பக்தியும், பாசமும்கொண்டவர் ஹிட்லர். பள்ளியில் படிக்கும்போது, ஹிட்லர்தான் வகுப்பில் முதல் மாணவர். அலோய்ஸ் ஹிட்லரையும் அரசுப்பணியில்சேர்க்க விருப்பப்பட்டார். ஆனால் ஹிட்லரின் விருப்பமோஓவியராக வேண்டும் என்பது.
அலோய்ஸ்கண்டிப்பான தந்தை. தந்தைசுங்க அதிகாரியாகப் பணியாற்றியதால், அடிக்கடி வெளிஊர் சென்றுவிடுவார். அதனால், ஹிட்லருக்கு அம்மாவிடம் செல்லம் அதிகம். தாய்மீது மிகுந்த பக்தியும், பாசமும்கொண்டவர் ஹிட்லர். பள்ளியில் படிக்கும்போது, ஹிட்லர்தான் வகுப்பில் முதல் மாணவர். அலோய்ஸ் ஹிட்லரையும் அரசுப்பணியில்சேர்க்க விருப்பப்பட்டார். ஆனால் ஹிட்லரின் விருப்பமோஓவியராக வேண்டும் என்பது.
ஹிட்லர் படிப்பில்ஆர்வம் குறைந்தது. படம் வரைவதில் ஆர்வம்ஏற்பட்டது. விரைவிலேயே அழகாக படங்கள் வரையும்ஆற்றல் பெற்றார். மாணவப் பருவத்திலேயே நிறையநாவல்கள் படித்தார். போர்கள் பற்றிய கதைகள்என்றால் நாட்டம் அதிகம்.
குடிப்பழக்கம்கொண்ட தந்தை, ஹிட்லரின் தாயைபோதையில் ஏசுவது ஹிட்லருக்கு அவரின்மேல் வெறுப்பை அதிகரித்தது. நிதானமாகஇருந்தாலும் குடும்பத்தினரை அடிமையாக நடத்துவார். ஹிட்லரையும், வீட்டில் உள்ள நாயையும் ஒரேமாதிரிதான் நடத்துவார். “அடால்ப்,” என்றுபெயர் சொல்லி ஹிட்லரை கூப்பிடமாட்டாராம். அலோய்ஸ்ஒரு விசிலை எடுத்து ஊதியதும், ஹிட்லர் ஓடிவந்து 'அட்டென்ஷ'னில் நிற்க வேண்டும்.
1903-ம்ஆண்டு, ஹிட்லரின் தந்தை இறந்து போனார். தந்தையின் கண்டிப்பு இல்லாமல் வளர்ந்த ஹிட்லர், நாளுக்குநாள் முரடனாக மாறினார். மாணவர்களுடன்சண்டை போடுவதுடன், ஆசிரியர்களுடனும் மோதுவார்.
தனது17-வது வயதில், பள்ளி இறுதித்தேர்வில் தேறினார். ஹிட்லர் அதற்காகக் கொடுத்தசான்றிதழை வாங்கிக்கொண்டு வருகிற வழியில் நண்பர்களோடுசேர்ந்து மது அருந்தினார். சர்டிபிகேட்டைக்கிழித்தெறிந்தார்.
இதை அறிந்த ஆசிரியர், அவரைக்கூப்பிட்டுக் கண்டித்தார். "இனி என் வாழ்நாளில்சிகரெட்டையும், மதுவையும் தொடமாட்டேன்" என்று சபதம் செய்தார், ஹிட்லர். அதன்படி, கடைசி மூச்சு உள்ளவரைசிகரெட்டையும், மதுவையும் அவர் தொடவில்லை.
மாதாமாதம்வரும் அரசாங்க உதவிப்பணத்தில் குடும்பம்ஓடியது. பதினெட்டுவயதானவுடன் அம்மாவிடம் பணம் வாங்கிக்கொண்டு, ஓவியராகபோகிறேன் என்று சொல்லி, ஆஸ்திரியாவின்தலைநகர் வியன்னாவுக்கு ரயிலேறி விட்டார்.
பிற்காலத்தில்ஜெர்மனிய வரலாற்று புத்தகங்களில், புதியதொரு சித்தாந்தத்தை உருவாக்க வேண்டும் என்று ஹிட்லர் தாயைபிரிந்ததாக கூறப்பட்டது. ஆனால்உண்மையிலேயே அவர் வியன்னாவின் 'Art Academy' யில் சேரவேதாயை பிரிந்தார். ஆனால்அதற்கான நுழைவுத்தேர்வில் தோல்வி அடைந்தார்.
அடுத்தவருடமும் ஓவியப் பள்ளியில் சேர முயற்சிசெய்தார். ஆனால் இம்முறை தேர்வில்கலந்து கொள்ளவே அனுமதியில்லை. அந்த ஆண்டின் இறுதியில் ஹிட்லரின்தாயார் இறந்து போனார்.
அவமானங்களும்தோல்விகளுமே மிகப்பெரிய சாதனையாளர்களின் இளமைக்காலத்தை நிரப்புகிறது. தாயின்சேமிப்பும், ஒரு வீடும் ஹிட்லருக்குவந்து சேர்ந்தது. மாணவராக இல்லையெனில் உதவிப்பணம்நின்றுவிடும் என்பதால், தான் ஒரு மாணவர்எனப் பொய்யான சர்ட்டிபிகேட் தயாரித்துஉதவிப்பணம் தொடர்ந்து வருமாறு பார்த்துக்கொண்டார். ஹிட்லரின்கில்லாடித்தனம் இங்குதான் முதன்முதலாக வெளிப்பட்டது.
ஹிட்லர் அதன்பின்ஓவிய அட்டைகள் தயாரித்து, பிழைப்பு நடத்தினார் ஹிட்லர். இரவில் கூட மண்ணெண்ணைவிளக்கு வெளிச்சத்தில் ஓவியங்கள் வரைவார். சில மாடல் அழகிகளைவைத்து ஹிட்லர் வரைந்த படங்கள், நல்ல விலைக்குப் போயின. அதனால் சொந்தமாகஒரு ஓவியக்கூடம் அமைத்தார். இந்தச் சமயத்தில், சிந்தியாஎன்ற பெண்ணை ஹிட்லர் காதலித்தார். காதல் தோல்வி அடைதார்,
இக்காலக்கட்டத்தில்ஹிட்லர் நாடோடியாக திரிந்தார். தெருவோரடீக்கடைகளில் நாளிதழ்களை ஒருவரி விடாமல் படிக்கும்பழக்கம் அப்போதுதான் தோன்றியது. அவருக்குஅரசியல் ஈடுபாடு உருவானதும் அப்போதுதான்தான் வரைந்த ஓவியங்களை விற்றுகாலத்தை ஓட்டினார். இது வரையிலும் அவருக்குஒரு நண்பன் கூட கிடைக்கவில்லை. ஏனெனில்யாரிடமும் அவர் பேசாமல் அவர்எப்போதும் இறுக்கமாகவே இருப்பது தான் காரணம்.
பணம் கரைந்தது. பிழைக்கவழி தேடி ஜெர்மனிக்கு வந்தார். வாழ்வில்எதாவது சாதித்து சிறிய அளவிலாவது 'ஹீரோ' ஆகவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது அப்போதுதான். ஓவியராகமுடியவில்லை. ராணுவத்திலாவதுசேரலாம் என்றெண்ணி ஜெர்மனிய ராணுவத்தில் சேர்ந்தார். அப்போதுஅவருக்கு வயது இருபத்தைந்து. முதல் உலகப்போர் தொடங்கிய சமயம் அது.
1914-ல்தொடங்கி, 1918 வரை நடந்த முதல்உலகப் போரின் போது ஜெர்மனிராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். அடிமைத்தனமான குழந்தை பருவத்தை தாண்டிஓவியராகும் முயற்சியிலும் தோல்வியுற்று நாடோடியாகத் திரிந்த ஹிட்லர் முதல்உலகப்போரின் சமயத்தில் ராணுவத்தில் சோல்ஜராக சேர்ந்தார். அங்கேஅவருக்கு 'ரன்னர்' பணி தரப்பட்டது.
முன்னணியில்போரிடும் வீரர்களுக்கு தகவல்களையும் கட்டளைகளையும் சுமந்து ஓடிச் சென்றுதருவதுதான் 'ரன்னர்' பணி. துப்பாக்கிக்குண்டுகள் பொழிய, வெடிகுண்டுகள் முழங்கிடும்போர்க்களத்தில், தனது வீரத்தை வெளிக்காட்டஇதுதான் சமயம் என்று ஹிட்லர்வெறி பிடித்ததை போல ஓடினார். ஆச்சரியம் என்னவென்றால் ஒரு குண்டு கூடஅவர் மேல் படவில்லை என்பதுதான். அவர்துணிவையும் கடமை உணர்வையும் பாராட்டி, ராணுவம் அவருக்கு 'Iron Cross' என்னும் பதக்கம் அணிவித்துக்கௌரவம் செய்தது.
ஆனால், உலகப்போரின் போது எதிரிகளால் 'மஸ்டர்ட்' வாயு வீசப்பட்டதால் ஹிட்லரின் ஒரு கண் தற்காலிகமாகபாதிக்கப்பட்டது. நுரையீரலும் பாதிக்கப்பட மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்தசமயத்தில் ஜெர்மனி முதலாம் உலகப்போரில்சரண் அடைந்தது. மருத்துவமனையில் இருந்த ஹிட்லர் 'துரோகம்இது' என்று ஓலமிட்டவாறு கதறிஅழுதார். "கம்யூனிஸ்ட்களும் யூதர்களும் தான் ஜெர்மனியின் தோல்விக்குரகசியமாக வேலை செய்தார்கள். அவர்களைஅழிக்காமல் விடமாட்டேன்!" என்று தனது மனதில்அவர்களின் மேல் உள்ள வெறுப்பைமுதன்முறையாக வெளிப்படுத்தி கர்ஜித்தார் ஹிட்லர்.
மருத்தவமனியில்இருந்து வெளிவந்த ஹிட்லர் புதிதாக தொடங்கப்பட்டிருந்த'தேசிய சோசியலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சி' யில் உறுப்பினராகச் சேர்ந்தார். அப்போது அந்த கட்சியின்உறுப்பினர் பலமே சில நூறுதான். அந்தகட்சியின் ஜெர்மனி மொழியின் சுருக்கமே'நாஜி'. இதுவே உலக சரித்தரத்தின்சக்தி வாய்ந்த இரு எழுத்தாகபின்னாளில் மாறியது. மாலை நேரங்களில் யார்வீட்டு மாடியிலாவது கூடி, அரசை திட்டித்தீர்ப்பதுதான் அந்தக் கட்சியின் பொழுதுப்போக்காகஇருந்தது.
1920, பிப்ரவரி29 ம் தேதி, அந்தக்கட்சியின் முதல்பொதுக்கூட்டம் நடந்தது. ஹிட்லர் தனது முதல்உரையை தொடங்கினார். உணர்ச்சிப் பிழம்பாய், உடல் நடுங்க, கண்கள்கலங்க, ஆவேசப் பெருக்கோடு அவர்ஆற்றிய உரையில் மொத்த மக்கள்கூட்டமும் உணர்ச்சிவசப்பட்டு பரவசத்துடன் ஆராவாரம் செய்தது. அன்று அந்த பெருங்கூட்டத்தைமுழுமையாக ஆக்கிரமித்தார் இளம் தலைவர் ஹிட்லர். அவரின் சக்தியை அவரே உணர்ந்ததினம் அது.
அடுத்தஓரிரு ஆண்டுகளில் ஹிட்லரின் உரையை கேட்பதற்காகவே பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டனர். உலகின் மிகச்சிறந்தவர்கள் ஜெர்மனியர்கள்என்ற பெருமிதத்தை அவர்களிடம் விதைத்தார் ஹிட்லர். 'ஸ்வஸ்திகா' சின்னத்தை கட்சியின் சின்னமாக பயன்படுத்தினார்.
அரசாங்கத்தின்நிர்வாகத்திறமை இன்மையால்தான் நாட்டில் வறுமையும், வேலை இல்லாத்திண்டாட்டமும் பெருகிவிட்டதாகப் பிரசாரம்செய்தார். அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு, ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார். ஆனால், அந்த முயற்சியில்தோல்வி அடைந்தார்.
1923 -ல், அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி செய்ததாக ஹிட்லரையும்அவரது சகாக்களையும் சிறையில் அடைத்தது ஜெர்மன் அரசு. ஹிட்லருக்கு முதலில் 5 ஆண்டு ஜெயில் தண்டனைவிதிக்கப்பட்டது. பிறகு அது ஓராண்டுதண்டனையாகக் குறைக்கப்பட்டது. முதல் பொதுக் கூட்டம்நடத்திய மூன்று ஆண்டுகளில் ஒருகட்சி ஆளும் அரசையே பயமுறுத்தும்அளவிற்கு உயர்ந்தது ஹிட்லரால் தான் என்றால் அதுமிகை இல்லை. சித்தாந்தமில்லாத தனதுகட்சிக்கு ஹிட்லர் சித்தாந்தத்தை உருவாக்கியதுஅப்போதுதான்.
சிறையில் இருந்தவாறு 'எனது போராட்டம்' ( Mein kampf ) என்ற நூலைசிறையில் இருந்தபோது எழுதினார். இது உலகப் புகழ்பெற்ற நூல். 'இனம்' என்றவிஷயத்தை மூலதனமாக பயன்படுத்த தொடங்கியதும் அப்போதுதான்.
அந்த புத்தகத்தில் உலகை வழிநடுத்தும் தகுதிஉடையவர்கள் ஜெர்மானியர்கள் மட்டும்தான் என்று முழங்கினார் ஹிட்லர். யூதர்களையும் கம்யூனிஸ்ட்களையும் மிகக் கேவலமாக தனதுபுத்தகத்தில் சாடினார். யூதர்கள், ரஷ்யர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இல்லாதஒரு புது யுகத்தை உருவாக்கவேண்டும் என்ற ஆபத்தான கருத்தைமுன்வைத்தார். மற்றவர்களையும் தனது கருத்திற்கு உடன்படவைத்தார். அந்த சமயம், இந்தியாபிரிட்டனின் காலனியாக அடிமைபடுத்தப் பட்டிருந்தது. ஹிட்லர் தனது புத்தகத்தில், ரஷ்யா ஜெர்மனியின் இந்தியாவாக இருக்க வேண்டும் என்றுகுறிப்பிட்டு இருக்கிறார்.
1928-ல்நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வி அடைந்தது. ஆனால் ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை. தன்னுடைய கட்சியின் பெயரை "நாஜி கட்சி" என்றுமாற்றி நாடு முழுவதும் தீவிரவாதத்தில்ஈடுபட்டார். அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்குவழிவகுத்தார். அவருடைய இடைவிடாத உழைப்பும், பேச்சுவன்மையும், ராஜதந்திரமும் வெற்றி பெற்றன. ஆட்சிக்குஎதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து, பெரும்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹிட்லரின்பேச்சாற்றலால் கட்சி வியக்கத்தக்க வேகத்தில்வளர்ந்தது. ஆயினும் ஜனாதிபதி தேர்தலில்ஹிண்டன்பெர்க் என்னும் மூத்த தலைவருக்குஎதிராக போட்டியிட்டு தோற்றார். ஆனால் ஹிண்டன்பெர்க் கட்சியினருக்குஆட்சியமைக்க நாஜி கட்சியினரின் ஆதரவுதேவைப்பட்டது. எனவே கூட்டணி அரசில், ஹிட்லருக்கு 'சான்சலர்' பதவி கிடைத்தது. அதிபருக்குஅடுத்த அதிகாரம் கொண்ட பதவி. ஆனால்ஹிட்லரிடம் இருந்த பயத்தின் காரணமாகஅதிகாரங்கள் குறைக்கப்பட்டே தரப்பட்டது.
அந்த சமயம் பாராளுமன்றக் கட்டிடம்கொளுத்தப்பட்டது. ஜனாதிபதியாக இருந்த ஹிண்டன்பர்க், மக்கள்போராட்டத்திற்கு அடிபணிந்தார். 1933-ஜனவரி 30-ந்தேதி ஹிட்லரை அழைத்துப்பிரதமராக நியமித்தார். கம்யூனிஸ்ட்களே இதற்கு காரணம் என்றுமுழங்கி, அவர்களை அடக்க அதிகாரங்களைபெற்றுக் கொண்டார்.
அன்று முதல் ஹிட்லருக்கு ஏறுமுகம்தான். பிரதமராக இவர் பதவி ஏற்ற1 வருடத்தில் ஜனாதிபதி ஹிண்டன்பர்க் மரணம் அடைந்தார். அவ்வளவுதான். ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக் கொண்டு, எதிர்ப்பாளர்களை எல்லாம்ஒழித்துவிட்டு, ஜெர்மனியின் சர்வாதிகாரி ஆனார் ஹிட்லர்.
ராணுவ இலாகாவையும், ராணுவ தளபதி பதவியையும்தானே எடுத்துக்கொண்டார். அரசியல் கட்சிகளை எல்லாம்தடை செய்தார். பாராளுமன்றத்தைக் கலைத்தார்.
எதிரிகளைச்சிறையில் தள்ளினார். "இனி ஜெர்மனியில் ஜனநாயகம்என்ற பேச்சுக்கே இடம் இல்லை" என்றுஅறிவித்தார். யூதர்களை அடியோடு அழிக்கவேண்டும் என்றுமுடிவு செய்து, ஒரு பாவமும்அறியாத யூதர்களைக் கைது செய்து, சிறையில்பட்டினி போட்டுச் சித்திரவதை செய்து கொன்றார். பலர்இருட்டறைகளில் அடைக்கப்பட்டு, விஷப் புகையால் கொல்லப்பட்டனர். தினமும் சராசரியாக 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம்பேர் விஷப்புகையிட்டுச் சாகடிக்கப்பட்டனர்.
ஹிட்லரால்கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம். முதல் உலகப்போரில்ஜெர்மனியின் தோல்விக்குக் காரணமான பிரிட்டன், பிரான்ஸ்ஆகிய நாடுகளைப் பழிவாங்க வேண்டுமென்று திட்டமிட்டார். ராணுவத்தைப் பலப்படுத்தினார்.
ஜெர்மனியின் தரைப்படை, கப்பல் படை, விமானப்படை மூன்றும் உலகின் சிறந்த படைகளாகஉருவெடுத்தன. உலகத்தையே தன் ஆதிக்கத்தின் கீழ்கொண்டுவர நேரம் நெருங்கிவிட்டதாக நினைத்தார்ட்லர். 1939-ம் ஆண்டு செப்டம்பர்1-ந்தேதி, எந்தவிதப் போர்ப் பிரகடனமும் வெளியிடாமல்போலந்து நாட்டின் மீது படையெடுத்தார் ஹிட்லர்.
ஜெர்மனியின் தரைப்படை, கப்பல் படை, விமானப்படை மூன்றும் உலகின் சிறந்த படைகளாகஉருவெடுத்தன. உலகத்தையே தன் ஆதிக்கத்தின் கீழ்கொண்டுவர நேரம் நெருங்கிவிட்டதாக நினைத்தார்ட்லர். 1939-ம் ஆண்டு செப்டம்பர்1-ந்தேதி, எந்தவிதப் போர்ப் பிரகடனமும் வெளியிடாமல்போலந்து நாட்டின் மீது படையெடுத்தார் ஹிட்லர்.
பிரிட்டனும், பிரான்சும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துபோர்ப் பிரகடனம் வெளியிட்ட போதிலும், போரில் நேரடியாக குதிக்கவில்லை. இதனால், இரண்டே வாரங்களில் போலந்தைக்கைப்பற்றிக் கொண்டது ஜெர்மன் ராணுவம். இந்தச் சமயத்தில் ஹிட்லருடன் நட்புக் கொண்டார் இத்தாலிசர்வாதிகாரி முசோலினி.
ஜப்பான்உள்பட வேறு சில நாடுகளும்ஜெர்மனியுடன் கைகோர்த்துக் கொண்டன. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும்ஒரு ரகசிய ஒப்பந்தத்தைச் செய்துகொண்டன. ஆசியப் பகுதிகளை ஜப்பானும், ஆப்பிரிக்காவை இத்தாலியும், ஐரோப்பிய பகுதிகளை ஜெர்மனியும் தாக்கிக் கைப்பற்றவேண்டும் என்பதே அந்த ரகசியஒப்பந்தம்.
ஹிட்லரின்போர் வெறி, அவருடைய நாஜிகட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பை உண்டாக்கியது. அதனால், அவரை கொலைசெய்ய அவருடைய தளபதிகளே சதித்திட்டம்தீட்டினார்கள். இவர்களுக்குத் தலைவர் கர்னல் வான் ஸ்டப்பன்பர்க்.
1944 ஜுலை20-ந்தேதி தன்னுடைய தலைமை அலுவலகத்தில் தளபதிகளுடன்ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார், ஹிட்லர். அவர் முன் இருந்தமேஜை மீது தேசப்படம் விரிக்கப்பட்டிருந்தது. எந்தெந்த இடத்தை எப்படித் தாக்கவேண்டும்என்று ஹிட்லர் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஹிட்லரின் கால்களுக்கு அருகே ஒரு "சூட்கேஸ்" இருந்ததை மெய்க்காவலர் ஒருவர் பார்த்தார். "இதுஇங்கு எப்படி வந்தது? யார்வைத்தது?" என்று அவர் மனதில்கேள்விகள் எழுந்தது. சந்தேகம் தோன்றியது. பெட்டியை தள்ளிவிட்டார்.
தரையில்'சர்' என்று சரிந்து சென்றபெட்டி, பயங்கர சத்தத்துடன் வெடித்தது. ஹிட்லர் இருந்த கட்டிடம் இடிந்துவிழுந்தது. நாலாபுறமும் புகை மண்டலம் சூழ்ந்தது. புகை அடங்கியவுடன் பார்த்தால், இடிபாடுகளுக்கு இடையே 4 அதிகாரிகள் செத்துக்கிடந்தனர்.
மயிரிழையில்உயிர் தப்பிய ஹிட்லருக்கு காயங்கள்ஏற்பட்டிருந்தன.
குண்டுவெடித்த இடத்துக்கும், ஹிட்லருக்கும் இடையே ஒரு மேஜைஇருந்ததால் அவர் தப்பினார். மெய்க்காவலர்சந்தேகப்பட்டு பெட்டியை தள்ளி விடாமல் இருந்திருந்தால், நிச்சயம் ஹிட்லர் பலியாகியிருப்பார். இந்தசதியையொட்டி, 5 ஆயிரம் பேருக்கு மேல்கைது செய்யப்பட்டனர். அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இவ்வளவுபேருக்கு தூக்கு மேடை கிடைக்காததால், விளக்குக் கம்பங்களிலும், மரங்களிலும் பலர் தூக்குக் கயிற்றில்தொங்கவிடப்பட்டனர்.
கறிக்கடையில்மாமிசத்தை தொங்கவிடப்படுவதற்காக உள்ள கொக்கிகளில், வயர்களைக்கட்டி, அதில் பலர் தூக்கில்மாட்டப்பட்டனர். கர்னல் ஸ்டப்பன்பர்க்குக்கும் மரண தண்டனைவிதிக்கப்பட்டது. இன்னொரு தளபதியான ரோமெல்என்பவரும் இந்த சதியில் சம்பந்தப்பட்டிருந்தார். குண்டு வெடிப்பில் அவரும் படுகாயம் அடைந்துஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். குணம்அடைந்ததும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் கடைசி காலத்தில் இப்படிஹிட்லருக்கு எதிராகத் திரும்பினாலும், முதலில் ஹிட்லருக்கு பக்கபலமாகஇருந்தவர். ஆகவே ஹிட்லரின் மனதில்இரக்கம் ஏற்பட்டது. "அவரை தூக்கில் போடவேண்டாம்" என்றார், கருணை தேய்ந்த குரலில். ரோமெல் அதிர்ஷ்டசாலி, அவரை விடுதலை செய்யஉத்தரவிடப்போகிறார் ஹிட்லர் என்று எல்லோரும்நினைத்தனர். "அவருடைய பழைய சேவையைநினைத்துப் பார்த்து கருணை காட்டுகிறேன். அவரைசுட்டுக் கொல்லவேண்டாம்; தூக்கிலிடவேண்டாம். விஷம் குடித்து தற்கொலைசெய்து கொள்ள அனுமதியுங்கள்!" என்று கூறினார், ஹிட்லர்! அதன்படி அவர் விஷம்அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரை ராணுவ மரியாதையுடன் அடக்கம்செய்ய உத்தரவிட்டார் ஹிட்லர்.
சர்வதிகாரிகளின்ஆட்சிக் காலத்தில் ஆபாச அத்துமீறல்கள் அதிகமாகவேஇருக்கும். ஆனால்ஹிட்லர் அத்தகைய ஆபாசங்களை ஒருபோதும்அனுமதிக்கவில்லை. ஒருவிபசார விடுதி கூட அவரின்ஆட்சிக்காலத்தில் இல்லை என்பதே மிகப்பெரிய சாதனை அல்லவா..!
"விபச்சாரம்பிளேக் நோய் போன்றது. சிறிதும்தயவு காட்டாமல் அது அழிக்கப்பட வேண்டும். சமுதாயத்தின் அழுகிப் போன பகுதிகளைநாம் சுத்தப்படுத்த வேண்டும். இலக்கியம், சினிமா, கலை, பத்திரிக்கைகள், சுவரொட்டிகள், கடைகளின் 'ஷோகேஸ்'கள் அதிலும்ஆபாசம் இருக்க, நான் அனுமதிக்கமாட்டேன்!" என்று எச்சரித்தார் ஹிட்லர்.
வெள்ளைத்துணியில்உள்ள கறுப்புக் கரைகளே நம் கண்களைஈர்க்கும். அதே போன்று, ஹிட்லரின்தவறுகளால், அவரை பற்றிய நினைவுகள்உலக சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட போது, அவரின் சாதனைகளும்கூடவே மறக்கப்பட்டுவிட்டன.
1035 பக்கங்கள்கொண்ட 'அடால்ப் ஹிட்லர்' என்றபுத்தகத்தை எழுதிய பேராசிரியர் ஜான்டோலேன்ட், "ஹிட்லர் ஆட்சிக்கு வந்தநாலாவது ஆண்டில் எதாவது காரணத்தால்இறந்திருந்தால், உலகமே ஹிட்லரை "ஜெர்மனியின்சரித்தரத்தில் தோன்றிய மிகச் சிறந்தமாமனிதன் என்று பாராட்டியிருக்கும்!" என்று கூறுகிறார். அவரின் சாதனைகளில் சிலவற்றை பார்ப்போம்.
முதல் உலகப்போரால் வாடி வதங்கி போயிருந்தஜெர்மனியின் பொருளாதாரத்தை ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில்தூக்கி நிறுத்தியவர் ஹிட்லர். ஹிட்லர் பதவியேற்ற 1933ல்ஜெர்மனியில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை60 லட்சம். ஆனால் 1936 ல், அதாவது மூன்றேஆண்டுகளில், ஜெர்மனியில் வேலையில்லாதவர் என்று ஒருவர் கூடஇல்லை என்ற நிலை உருவானது. இத்தனைக்கும்பொருளாதார அறிவு சிறிதும் ஹிட்லருக்குஇல்லை. இந்த சாதனைக்கு காரணம், ஹிட்லரால் தேடிக் கண்டுப்பிடிக்கப்பட்ட ஜால்மர் ஷ்ஹாக்ட்என்ற பொருளாதார ஜீனியஸ் ஆவார்.
ஜால்மர்ஷ்ஹாக்ட் ஒன்றும் முன்னணித் தலைவரில்லை. ஆயினும்அவரது திறமையை உணர்ந்திருந்த ஹிட்லர்அவரை பொருளாதார அமைச்சராக நியமித்து இத்தகைய சாதனையை புரிந்தார். திறமைக்கு மரியாதை கொடுத்து பதவியைகொடுப்பவனே சிறந்த தலைவன். நமக்குஎப்போது அத்தகைய தலைவன் கிடைப்பான்என்று யூகிக்க கூட முடியவில்லை.
ஹிட்லரின்ஆட்சியில் வேலைக்கேற்ற ஊதியம், போனஸ், விலைவாசிஎல்லாம் கட்சிதமாக நிர்ணயிக்கப்பட்டது. படு வேகமாக கார்கள்போவதற்கு மிக நீண்ட 'ஹைவேஸ்' (Auto Bahn) உலகில் முதலில் கட்டப்பட்டது, ஜெர்மனியில்ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில்தான்.
முதியவர்களுக்குபென்ஷன் மற்றும் இலவச வைத்தியம், எல்லோருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள்எல்லாம் படுவேகமாக நடைமுறைக்கு வந்தன.
"சாமான்யர்களும்காரில் பயணிக்க வேண்டும். அவர்களுடையபட்ஜெட்டுக்கு ஏற்றவாறு கார்கள் தயாரிக்கப்பட வேண்டும். ஒரு காலன் பெட்ரோலுக்கு அதுநாற்பது மைல் போக வேண்டும்" என்று Porsche கார் நிறுவனத்தின் அதிபர்'பெர்டினான்ட் பொர்ஷ்'-ஐ கூப்பிட்டுசொன்னார் ஹிட்லர். பின் பகுதியில் இஞ்சின்அமைப்புடன் தயாரிக்கப்பட்ட அந்த மினி கார்களுக்கு'வோக்ஸ்வேகன்' என்று பெயரிடப்பட்டது. பிற்காலத்தில்அந்தக் கார்கள் உலகப் புகழ்பெற்றது.
தொழிற்சாலைகளால்சுற்றுச்சூழல் மாசு அடையக் கூடாதுஅன்று ஹிட்லர் சட்டம் கொண்டுவர, அத்தனை தொழிற்ச்சாலைகளும் அதற்கான Anti - Pollution சாதனங்களையும் ஃபில்டர்களையும் பொருத்திக் கொண்டது. அதனால் ஜெர்மனியில் ஓடியநதிகள் அத்தனையும் படு சுத்தமாக இருந்தது.
பல வலி நிவாரணிகளும், போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து வெளிவர உதவும் மருந்துகளும், ஹிட்லர்-இன் கடும் முயற்சியால்கண்டுப் பிடிக்கப்பட்டன. ஹைபோதேர்மியா என்னும் உடல் வெப்பத்தைகுறைத்திடும் ஒரு நோயிற்கு தீர்வைக்கண்டது ஹிட்லர்-இன் ஜெர்மனியமருத்துவர்கள் தான். இவ்வாறு மருத்துவத்துறையில்வியத்தகு முன்னேற்றம் அடைந்தது ஜெர்மனி.
பெண்களுக்குராணுவத்தில் பலப் பணிகளில் இடம்தந்து பெண்ணுரிமை காப்பதில் தலை சிறந்து விளங்கினார். பெண்களைஎப்போதும் தாழ்வாக நினைத்தது இல்லைஹிட்லர். இப்போதுள்ள மிருகவதை தடுப்பு சட்டத்தை அமல்படுத்துவதில்முன்னோடியாக திகழ்ந்தவர் ஹிட்லர். தன் தாயிடமும், மனைவியிடமும், குழந்தைகளிடமும் அன்புக் காட்டும் மனிதராகதிகழ்ந்தார். குழந்தைகளுக்கு பிடித்த மனிதராக திகழ்ந்தார்ஹிட்லர்.
பல எதிரி நாடுகளை, கத்தியும்இன்றி, உயிர் சேதமும் இன்றி, தனது சமயோசிதப் புத்தியாலும், தந்திரத்தாலும் வெற்றிக் கொண்டவர் ஹிட்லர். அதற்கு அவரின் குறுக்குபுத்தியும், எதிரியை கணித்திடும் ஆற்றலும்பெரிதும் உதவி செய்தன.
ஹிட்லர்-இன் காலத்தில் அவரின்பெரும் முயற்சியால் ஜெர்மனி ராணுவத் தொழில்நுட்பத்திலும்விஞ்ஞானத்திலும் மிகப் பெரிய முன்னேற்றம்அடைந்திருந்தது. போரில் ஜெர்மனி தோல்வியடைந்தபின் ஜெர்மனியின் ராணுவத்தொழில்நுட்ப வல்லுனர்களையும், விஞ்ஞானிகளையும், அமெரிக்கர்களும் ரஷ்யர்களும் பங்குப் போட்டு பிரித்துக்கொண்டனர். அவர்களே இப்போதைய 'நாசா' வின் இத்தகைய வளர்ச்சிக்கு காரணமாகஇருந்தனர் எனக் கூறுவோரும் உளர்.
ஒரு தலைவனின் கடமை நாட்டின் பொருளாதாரத்தைஉயர்த்துவதும், வேலையில்லாமையை ஒழிப்பதும், இந்நாட்டை சேர்ந்தவன் நான் என்று பெருமிதமாககூறிகொள்ளும் நிலைமையை உருவாக்குவதுவுமே ஆகும். ஹிட்லர் தனதுஆட்சிக் காலத்தில் அத்தகைய தலைவனாக திகழ்ந்தார்என்பதில் சந்தேகமே இல்லை.
ஹிட்லர்காலத்தில் எந்த தொழிற்ச்சாலையிலும் சம்பளப்பிரச்னை, வேலைநிறுத்தம் என்பதெல்லாம் கிடையவே கிடையாது. முதலாளிபக்கமும் அவர் செயவில்லை. தொழிற்ச்சங்கங்களுக்கும் அவர் ஆதரவு தரவில்லை. முதலாளி பிரச்னை செய்தாலும், தொழிலாளிகள்தவறு செய்தாலும், இரு தரப்பினரையும் சிறையில்தள்ளினார்.
சர்வாதிகாரியாகஇருந்தததால் ஹிட்லரால் இந்தக் கண்டிப்பைச் சுலபமாககாட்டி, பிரச்னையை முடிக்க முடிந்ததது என்பதும்உண்மைதான்.
ஹிட்லர்ஆட்சிப் பொறுப்பை ஏற்றப் போது, ஜெர்மனியின்ராணுவ வீரர்களின் மொத்த எண்ணிக்கை சுமார்ஒரு லட்சம் தான். அப்போது, உருப்படியான, நவீனரகத் துப்பாகிகள் கூட ராணுவத்தில் கிடையாது. ஆனால் ஹிட்லர் ஆட்சியேற்ற நான்கேஆண்டுகளில் ஐரோப்பாவின் மிகப் பிரம்மண்டாமான 'ஆர்மி'யாக அது மாறியது. 'நவீன போர் விமானங்கள், பீரங்கிகள், துப்பாக்கிகள், டாங்கிகள் கொண்ட அசுர சக்தியாகஜெர்மனியின் ராணுவம் மாறிய வேகம், உலக வரலாற்றிலேயே அதுவரை நிகழ்ந்திடாத பெரியஆச்சரியம்' என்று உலகப் பெரும்ராணுவ ஆராய்ச்சியாளர்கள் இன்னும் வியந்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஹிட்லரின்மொத்த பன்னிரண்டு கால ஆட்சிக் காலத்தைபார்த்தால் அவரின் தவறுகளே நம்கண் முன்னே விரிந்திருக்கும். ஆனால்அவரின் முதல் ஐந்தாண்டு காலசாதனைகள் மகத்தானவை.
ஒரு புத்திசாலி சாடிஸ்ட் ஆக மாறினால் மிகவும்ஆபத்தான ஒன்றுதான். ஆனால் ஹிட்லர் என்னும்சாதனையாளன் செய்த சாதனை என்னதெரியுமா. 'ஜெர்மனி' என்ற ஓர் நாட்டையே 'சாடிஸ்ட்நாடு' ஆக மாற்றினான் என்றால்அது மிகையில்லை.
அரசு அதிகாரிகள் யாவரும் மனிதாபிமானம், இரக்கம், குற்ற உணர்வு யாவும் மறந்துமிருகங்களாக, கொலைக் கருவியாக மாறிமும்முரமாக இயங்கினார்கள். யூதர்களை அழித்தொழிக்கும் இலாகாவிற்கு தலைவராக பணியாற்றிய 'ஐக்மன்' பின்னாளில் கைது செய்யப்பட்டபோது நிருபர்களிடம்கூறியது என்ன தெரியுமா. 'ஐம்பது லட்சம் யூதர்களைநாங்கள் கொலை செய்தபோது, இனம்புரியாதஆழ்ந்த திருப்தி ஏற்பட்டது. மரணதண்டனை கொடுத்தாலும் விஷப் பூச்சிகளை ஒலித்துக்கட்டிய திருப்தியோடு செத்துப் போவேன்' என்றானாம். இவ்வாறு பலர் ஹிட்லரைகண்மூடித்தனமாக நம்பினார்கள்.
நாஜி அதிகாரிகள், 'விஷவாயுக் குளியலறைகளை' சொர்கத்தின் பாதை என்று வர்ணித்தனர். ஒவ்வொரு ஆயிரம் யூதர்களை கொன்றபின்னரும்'அறுவடை திருவிழா' என்ற பெயரில் ஷாம்பெயின்பாட்டில்களுடன் கொண்டாடினார்கள் அரசு அதிகாரிகள். யூதர்களைநிற்க வைத்து நெற்றியில் சுட்டால்பரிசு என்கிற ரீதியில் 'துப்பாக்கிசுடும் போட்டி' கூட நடத்தினார்கள், கொலை செய்வதில் புதுமையை விரும்பிய சில அதிகாரிகள்.
இறந்தவர்களின்பற்கள், எலும்புகள் துகள்கள் ஆக்கப்பட்டு நாஜிகளால் உரமாகவும், சிமெண்ட் கலவையோடு கலக்க பட்டு, நடைபாதைகள்அமைக்கவும் பயன் படுத்தப்பட்டன.
'யூதர்கள்மனிதர்கள் அல்ல. அழிக்கப்படவேண்டிய விலங்கினங்கள்!' என்று அதிகாரிகள் மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தனர். 'ஆடு மாடுகளின் தோலைக்கொண்டு பைகள் செய்வதைப் போன்றஒரு செயல் தான் இதுவும்' என எல்லோரும் நம்பினார்கள். இரும்பு இதயத்துடன் செயல்படுவது பெருமையான விஷயம் என்று அதிகாரிகளுக்குதிரும்ப திரும்ப ஹிட்லரால் எடுத்துசொல்லப்பட்டது.
ஒருமுறைஅனைத்து அதிகாரிகளையும் தங்கள் செல்ல நாய்களைகூட்டி வரச்செய்தார் ஹிட்லர். அவற்றை தன் கைகளால்சுட்டுத் தள்ளவேண்டும் என்று அந்த அதிகாரிகளுக்குஆணையிட்டார். காரணம், 'weakness' என்பதே கூடாது என்பதுதான் நாஜி தத்துவமாம். இத்தனையும்மீறி பல அதிகாரிகள் குற்றஉணர்வினால் அவதிப் பட்டார்கள் என்பதும்உண்மை.
நியாயம்- அநியாயம் பற்றிய சுய நினைவோடு, பகுத்தறிவோடு எடை போடும்போது தான், மிருகத்தன்மை அகன்று, 'மனிதன்' தலை எடுக்கிறான்! அப்படி ஓர் சம்பவமும் ஆவ்ச்விட்ஸ்சிறைச் சாலையில் நிகழ்ந்தது. விஷவாயு செலுத்தப் பட்டுஇறந்துப் போன ஆயிரக் கணக்கானவர்களின்உடல்களை நாஜி அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள். அப்போது 'Gas Chamber' இல் பல உடல்களுக்குக்கீழே பதினாலு வயதுப் பெண்கிடந்தாள், உயிரோடு.
பல உடல்கள் அவள் மேல்விழுந்து, விஷவாயு வீச்சிலிருந்து அவளைக்காப்பாற்றி இருக்க வேண்டும். உடனேஅதிகாரிகள் பரபரப்பு அடைந்தனர். ஒருவர் தேனீர் தயாரித்துக்கொண்டு வந்தார். பிறந்த மேனியோடு கிடந்தஅந்த பெண்ணை தூக்கிவந்து, போர்வையால்ஆதரவோடு மூடினார் ஒருவர். சரேலென்று அனைவரிடமும்ஒரு மாற்றம். மிருகம் அழிந்து மனிதம்துளிர்த்தது. அந்தப் பெண்ணை தங்கள்குழந்தை போல் பாவித்து சிலர்கண் கலங்கினார்கள். அப்போது அங்கே நுழைந்தார், சிறைச் சாலையின் தலைவர் மஸ்பெல்டு.
விஷயத்தை மற்றவர்கள்விவரிக்க, நடுங்கியவாறு அமர்ந்திருந்த பெண்ணைப் பல நிமிடங்கள் தீர்க்கமாகப்பார்த்தார். அவரது உதடுகள் லேசாகத்துடித்தன. விரல்கள்நடுங்க, கைத்துப்பாக்கியை எடுத்து, எல்லோரும் வேண்டாம் வேண்டாம் எனக் கெஞ்சியதை காதில்வாங்காமல், அந்தப் பெண்ணை நெற்றிப்பொட்டில் சுட்டுக் கொன்றார். கொன்றதும் அவர்க் கூறியது என்ன தெரியுமா.
'இந்தத்தகவல் தெரிந்தால் தலைவரால் நம் அத்தனை பேரின்கதியும் என்னவாகும் என்று தெரியுமா உங்கள்அனைவருக்கும்' என்றானாம்.
ஆம். இரக்கமும், மனிதமும் துளிர்த்த சில இடங்களிலும், ஹிட்லர்பற்றிய பயம் அதிகமாக இருந்ததால், அதிகாரிகள் அனைவரும் எமத தூதர்களாக செயல்பட்டனர். அந்த அளவுக்கு, ஹிட்லர்ஏதோ நெருக்கமாக நின்று தங்களை உற்றுகவனிப்பது போன்ற அச்சமும் நடுக்கமானநம்பிக்கையும் அனைவரிடமும் பீடித்து இருந்தது.
ஹிட்லரின்காதலி:-
ஜெர்மனித்தலைநகரான பெர்லினில் ஒரு சுரங்கம் அமைத்துஅதில் தங்கியிருந்தார் ஹிட்லர். பாதாள அறையின் கூரைமட்டும் 16 அடி பருமனுக்கு இரும்பும், சிமெண்டும் கொண்டு, குண்டு வீச்சினால்சேதம் அடைய முடியாத அளவுக்குமிக உறுதியாகக் கட்டப்பட்டிருந்தது. ஹிட்லரின் அலுவலகமும், படுக்கை அறையும் அங்கேதான்இருந்தன. 15 அடி நீளமும், 10 அடிஅகலமும் கொண்டது. குளியலறையும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
1945 ஜனவரி16-ந்தேதி முதல், ஹிட்லர் இங்குவசிக்கலானார். 1804-ல் மாவீரன் நெப்போலியன்பயன்படுத்திய நாற்காலி ஒன்று ஹிட்லரிடம் இருந்தது. அதில் அமர்ந்து ராணுவத்தினருக்கு உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டு இருந்தார். 1945 ஏப்ரல்பின்பகுதியில் பெர்லின் நகரம் மீது ரஷியவிமானங்கள் குண்டுமாரி பொழிந்தன.
ஹிட்லர்தங்கியிருந்த பாதாளச் சுரங்கத்துக்கு அருகிலும்குண்டுகள் விழுந்தன. ஈவா பிரவுன் என்றபெண் 1930-ம் ஆண்டு முதல்ஹிட்லருடைய மனம் கவர்ந்த காதலியாகஇருந்து வந்தாள். ஹிட்லரின் நண்பர் ஒரு போட்டோஸ்டூடியோ வைத்திருந்தார். அங்கு உதவியாளராகப் பணியாற்றியவள்ஈவா பிரவுன். நண்பரின் போட்டோ ஸ்டூடியோவுக்கு ஹிட்லர்அடிக்கடி போவார். அப்போது அவருக்கும்ஈவாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாககனிந்தது. ஈவாபிரானும், ஹிட்லரை உயிருக்கு உயிராகநேசித்தாள். அதனால் மனைவி என்றஅந்தஸ்து கிடைக்காவிட்டாலும் ஹிட்லருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தாள்.
முசோலினியின்கோர முடிவு:
முசோலினிசிறை வைக்கப்பட்ட சம்பவம் ஹிட்லருக்கு அதிர்ச்சிஅளித்தது. தன் ஆத்ம நண்பரைவிடுவிக்க முடிவு செய்தார். பகிரங்கமாகபடையெடுத்துச் சென்று முசோலினியை விடுவிப்பதுமுடியாத காரியம் என்பதை போர்க்கலையில்வல்லவரான ஹிட்லர் அறிந்திருந்தார். முசோலினியைமீட்க தனது ரகசியப்படையை அனுப்பினார். ரகசிய படையினர் முசோலினி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து முசோலினியையும்அவர் குடும்பத்தையும் மீட்டனர். வடக்கு இத்தாலியில் முசோலினிக்குஓரளவு ஆதரவு இருந்தது.
மனைவியுடனும்காதலி கிளாராவுடனும் அங்கு தப்பிச் சென்றார். அங்கு ஒரு பொம்மை அரசாங்கத்தைஅமைத்துக் கொண்டார். இத்தாலியின் உண்மையான அதிபர் நானே என்றுபிரகடனம் செய்தார். அப்போது இத்தாலி விடுதலைஇயக்கம் என்ற புரட்சிக்கர இயக்கமேதோன்றியது. இத்தாலி முழுவதும் புரட்சிக்காரர்கள்கலவரத்தில் ஈடுபட்டனர். முசோலினியை பிடித்து கொலை செய்வது என்றுபுரட்சிக்காரர்கள் சபதம் எடுத்துக் கொண்டனர். புரட்சிக்காரர்களால் தனக்கு ஆபத்து ஏற்படும்என்பதை உணர்நது கொண்ட முசோலினிஅண்டை நாடான சுவிட்சர்லாந்திற்கு தப்பிஓட முடிவு செய்தார்.
ரானுவ லாரிகளில் தனதுஇரண்டு குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். ஆனால்வழியிலே அந்த லாரிகளை புரட்சிக்காரர்கள்மடக்கினார்கள். முசோலினியை கைது செய்தார்கள். இதைக்கண்டமுசோலினியின் காதலி கிளாரா அலறிக்கொண்டு லாரியிலிருந்து குதித்தாள். அவளையும் புரட்சிக்காரர்கள் பிடித்துக் கொண்டனர். முசோலினியின் மனைவி லாரிக்குள் பதுங்கிக்கொண்டதால் அவள் புரட்சிக்காரர்கள் கண்ணில்படவில்லை.
இது நடந்தது 1945 -ம் ஆண்டு ஏப்ரல்27-ந்தேதி. அன்று டோங்கா நகரில்ஒரு அறையில் முசோலினியும், கிளாராவும்அடைத்து வைக்கப்பட்டனர். மறுநாள் அவர்களை புரட்சிக்காரர்கள்ஒரு காரில் அழைத்துச் சென்றனர். மலைப்பகுதியிலிருந்து கார் கீழே இறங்கியதும்முசோலினியையும் காதலி கிளாராவையும் கீழேஇறங்கச் சொன்னார்கள்.
கீழே இறங்கியதும் அவர்களை நடுரோட்டில் நிற்கவைத்தார்கள். தங்களை சுடப்போகிறார்கள் என்பதைஉணர்நது கொண்ட கிளாரா முசோலினியின்முன்னால் வந்து நின்று முதலில்என்னைச்சுடுங்கள் என்றாள். இயந்திர துப்பாக்கிகளால் புரட்சிக்காரர்கள்சரமாரியாகச் சுட்டார்கள். இருவர் உடல்களும் துளைக்கப்பட்டுரத்த வெள்ளத்தில் மிதந்தன. முசோலினிக்கு உதவியாக இருந்த வேறுசிலரையும் சுட்டுக் கொன்றார்கள். முசோலினியின் உடலையும், மற்றவர்களின் உடல்களையும் புரட்சிக்காரர்கள் மிலான் நகருக்கு கொண்டுசென்றார்கள். அங்கு விளக்கு கம்பத்தில்தலைகீழாகத் தொங்கவிட்டார்கள். அன்று மாலை உடல்கள்இறக்கப்பட்டு அடையாளம் தெரியாத இடத்துக்கு கொண்டுச்செல்லப்பட்டு புதைக்கப்பட்டன.
ஹிட்லரின்கடைசி நிமிடங்கள்:
1945 ஏப்ரல்30-ந்தேதி இரவு 9 மணி. "இன்றுமாலை 4 மணிக்கு இத்தாலிய சர்வாதிகாரிமுசோலினியும், அவர் மனைவியும் எதிர்ப்பாளர்களால்சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று சுவீடன் நாட்டுரேடியோ அறிவித்தது. ரேடியோச் செய்தியை ஹிட்லர் நேரடியாகக் கேட்டார். முசோலினியின் முடிவு, ஹிட்லருக்கு மிகுந்தவேதனையை உண்டாக்கியது. அன்றிரவு 12 மணி, பெர்லின் நகரம்முற்றிலுமாக ரஷியப் படைகள் வசமாகிவிட்டதுஎன்றும், எந்த நேரத்திலும், சுரங்கமாளிகை தகர்க்கப்படலாம் என்றும், ஹிட்லருக்குத் தகவல் கிடைத்தது. ஹிட்லரின்முகம் இருண்டது. மவுனமாக எழுந்து, தன்தோழர்களுடன் கை குலுக்கினார்.
1945-ம்ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பெர்லின் நகரைரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டுவிட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டுஇருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப்படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. எதிரிகளிடம் யுத்தக் கைதியாகப் பிடிபட்டால்தன் நிலை என்னவாகும் என்பதைஉணர்ந்தார் ஹிட்லர். எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதேமேல் என்ற முடிவுக்கு வந்தார். தன் முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம் தெரிவித்தார். ஹிட்லரின் முடிவைக் கேட்டு, ஈவாபிரவுன் திடுக்கிடவில்லை. "வாழ்விலும் உங்களுடன் இருந்தேன். சாவிலும் உங்களுடன்தான் இருப்பேன். உங்களுடன் நானும் தற்கொலை செய்துகொள்வேன்" என்றாள்.
ஏப்ரல்27-ந்தேதி ஹிட்லரின் பிறந்த நாளையொட்டி பாதாளஅறையில் விருந்து நடந்தது. ஹிட்லரின் உயிர் நண்பனான கோயபல்ஸ்மற்றும் ராணுவ தளபதிகள் வந்திருந்தனர். ஹிட்லருக்கு பிறந்த நாள் வாழ்த்துப்பாடலை ஈவாபிரவுன் பாடினாள். மறுநாள், ஏப்ரல் 28-ந்தேதி ஹிட்லர் ஈவாபிரவுன்திருமணம் நடந்தது. அன்று காலையிலேயே, தன்அறையை அலங்கரிக்குமாறு உதவியாளர்களுக்கு ஹிட்லர் உத்தரவிட்டார். அதன்படிஅறை அலங்கரிக்கப்பட்டது.
சட்டப்படிதிருமணப் பதிவு செய்ய நகரசபைஅதிகாரி அழைக்கப்பட்டார். திருமணப் பதிவு பத்திரத்தில் ஹிட்லரும், ஈவாபிரவுனும் கையெழுத்திட்டனர். கோயபல்சும், மற்றொருவரும் சாட்சிகளாக கையெழுத்திட்டனர். பிறகு விருந்து நடந்தது. ஹிட்லரின் நண்பர்கள் மது அருந்தினார்கள். ஹிட்லர்தேனீர் அருந்தினார். தங்கள் வாழ்க்கை இன்னும்சில நாட்களில் முடியப்போகிறது என்பதை அறிந்திருந்த அவர்கள், கவலையை மறக்க ஆடிப் பாடினார்கள். விடிய விடிய கேளிக்கைகள் நடந்தன. காலை 6 மணிக்குத்தான் ஹிட்லரும், ஈவாவும் படுக்கச்சென்றனர்.
காலை11 மணிக்கு, தன் உயிலை எழுதும்படிமனைவி ஈவாவிடம் கூறினார் ஹிட்லர். அவர் கூறக்கூற ஈவாஎழுதிய உயில் வருமாறு: "வாழ்விலும், தாழ்விலும் என்னோடு இருந்து என்இன்பதுன்பங்களில் எல்லாம் பங்கு கொண்டஈவா பிரவுனை என் வாழ்வின்கடைசிக் கட்டத்திலாவது மணந்து கொண்டு கவுரவிக்கவேண்டுமென்றுமுடிவு செய்தேன். அதன்படி மணந்து கொண்டேன். நாங்கள் இறந்த பிறகு, எந்தஜெர்மன் நாட்டு மண்ணுக்காகக் கடந்த12 ஆண்டு காலமாகப் பாடுபட்டு வந்தேனோ, அந்த ஜெர்மன் மண்ணிலேயேஎன்னையும், ஈவாவையும் உடனே எரித்துவிடவேண்டும். இதுவேஎன் கடைசி ஆசை. என்சொத்துக்கள் எல்லாம் எனக்குப்பிறகு என்கட்சிக்கு சேரவேண்டும். கட்சி அழிந்து விட்டால்நாட்டுக்குச் சேர வேண்டும்." இதுவேஹிட்லரின் உயில்.
அன்று மாலை தன் தளபதிகள், அமைச்சர்கள், அந்தரங்க உதவியாளர்கள் கூட்டத்தை ஹிட்லர் கூட்டினார். அந்தக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: "ஜெர்மனிநாட்டு மக்கள் எப்போதும் போராடிக்கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குக்கொஞ்சமும் கிடையாது. சமாதானத்தையே விரும்புகிறேன். போருக்குக் காரணம் நானல்ல. ïதர்கள்தான். ஜெர்மனி நாட்டு மக்களின் வீரத்திற்கும், தேசபக்திக்கும் இந்தப்போர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இன்று இல்லாவிட்டாலும் நாளைஜெர்மனி வெற்றிபெறும். இந்தப் போரில் நான்இறக்க நேர்ந்தால், மகிழ்ச்சியுடன் மரணத்தைத் தழுவுவேன். ஒரு போதும் எதிரிகளின்கையில் சிக்கி அவமானம் அடையமாட்டேன். இது உறுதி". இவ்வாறுஹிட்லர் கூறினார். பின்னர், நாட்டுத் தலைவர் என்ற முறையில்மக்களுக்கு இறுதிச் சாசனம் ஒன்றைஎழுதினார். அந்தச் சாசனம் வருமாறு: "முதல் உலகப்போரில் ஒரு சாதாரணப்போர் வீரனாககலந்து கொண்டவன் நான். அது நடந்து30 ஆண்டுகள் ஓடிவிட்டன.
ஜெர்மனிமண்ணின் மீதும், மக்கள் மீதும்நான் கொண்ட பற்றும், பாசமும்தான்என்னை வழிநடத்தின. கடந்த 30 ஆண்டுகளாக என்சக்தி முழுவதையும் என் தாய் நாட்டின்மேன்மைக்காகச் செலவிட்டிருக்கிறேன். இந்தப் போருக்கு நானேமூலகாரணம் என்று யாரும் நினைக்கவேண்டாம். ஏனென்றால் போர் வெறி கூடாது. ஆயுதக் குறைப்புச் செய்ய வேண்டும் என்றுநானே வலியுறுத்தி இருக்கிறேன். முதல் உலகப்போருக்குப் பிறகுஇப்படி இரண்டாவது உலகப்போர் மூளும் என்று நான்சற்றும் நினைக்கவில்லை. எப்படியோ போர் மூண்டுவிட்டது. இந்தப்போரினால் நம் நாடு சந்தித்தபயங்கர விளைவுகள், நாசமாக்கப்பட்ட பிரமாண்டமான மாளிகைகள், தரைமட்ட மாக்கப்பட்ட கலையம்சம்மிக்கநினைவுச் சின்னங்கள் யாவும் நம் மீதுஉலக நாடுகள் நடத்திய கோரத்தாக்குதலை நம்முடைய பிற்கால சந்ததியினருக்கு உணர்த்திக்கொண்டுஇருக்கும். இந்தப்போருக்குக் காரணமானவர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஒவ்வொரு ஜெர்மன் இளைஞனுக்கும்உணர்ச்சியும், எழுச்சியும் ஏற்படும்". இவ்வாறு இறுதிச் சாசனம்எழுதிக் கையெழுத்திட்டார் ஹிட்லர்.
பிறகு தன் அந்தரங்க உதவியாளரைஅழைத்து, "நானும் ஈவாவும் ஒன்றாகஇறந்துவிடப்போகிறோம். நாங்கள் இறந்தபின், எங்கள்உடல்களை ஒரு போர்வையில் சுருட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்துச் சாம்பலாக்கிவிடுங்கள். எங்கள் அறையில் உள்ளகடிதங்கள், டைரிகள், என் உடைகள், என்பேனா, கண்ணாடி முதலிய பொருள்களைசேகரித்து, ஒன்றுவிடாமல் எரித்துவிடுங்கள்" என்று கூறிவிட்டு, மனைவியையும்அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றார். அறைக்கதவு சாத்தப்பட்டது. வெகு நேரமாகியும் கதவுதிறக்கப்படவில்லை.
ஹிட்லரும்ஈவாவும் என்ன ஆனார்கள் என்றுவெளியே இருந்தவர்களுக்குத் தெரியவில்லை. வெளியே நீண்ட நேரம்காத்திருந்த மந்திரிகளும், தளபதிகளும் கதவைத் திறந்து கொண்டுஉள்ளே சென்றனர்.
காதலியுடன்ஹிட்லர் தற்கொலை:-
ஒரு சோபாவில், உட்கார்ந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற உடல். அவர்காலடியில் ஒரு துப்பாக்கி கிடந்தது. அதன் நுனியிலிருந்து புகை வந்து கொண்டிருந்ததால், அவர் சற்று நேரத்துக்கு முன்தான்தன்னைச் சுட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிந்தது. அவருடைய வலது காதுக்கு கீழ்அரை அங்குல அளவுக்கு துவாரம்விழுந்து, அதிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. ஹிட்லர், துப்பாக்கி முனையை வாய்க்குள் வைத்துசுட்டதால்தான், குண்டு காதுக்கு அருகேதுளைத்துக் கொண்டு சென்றிருக்கவேண்டும் என்றுதளபதிகள் கருதினார்கள்.
ஹிட்லரின்வலது கரம் ஒரு புகைப்படத்தைமார்போடு அணைத்தபடி இருந்தது. அந்தப்படம், ஹிட்லரின் தாயாரின் புகைப்படம். தாயின் மீது ஹிட்லர்கொண்டிருந்த பாசத்தை எண்ணி அவர்நண்பர்கள் கண்ணீர் சிந்தினர். ஹிட்லர்உடல் இருந்த சோபாவில் சாய்ந்தபடிபிணமாகியிருந்தாள் அவருடைய மனைவி ஈவா. வெள்ளைப் புள்ளிகளோடு கூடிய கருநீல "மாக்சி" உடை அணிந்திருந்தாள். அவள் உடல் நீலம்பாய்ந்திருந்தது. எனவே அவள் சயனைடுவிஷம் சாப்பிட்டிருக்க வேண்டும் என்பது புலனாகியது.
ஹிட்லர்உடலையும், ஈவா உடலையும் உதவியாளர்கள்ஒரு கம்பளிப் போர்வையில் சுற்றினார்கள். பிறகு அந்த உடல்களைஅந்த அறையிலிருந்து தலைமைச் செயலகத் தோட்டத்திற்குதூக்கிக் கொண்டு போனார்கள். அங்கே, பெட்ரோலையும், எரிவாயுவையும் கொண்டு இரு உடல்களையும்எரித்துச் சாம்பலாக்கினார்கள். சில மணி நேரம்கழித்து அங்கு வந்த ரஷியப்படையினர்ஹிட்லரைக் காணாமல் திகைத்துப் போனார்கள். அவர் தற்கொலை செய்து கொண்டதும், பிணம் எரிக்கப்பட்டதும் பிறகுதான் தெரிந்தது. எனினும் ஹிட்லர் சாகவில்லை, தலைமறைவாக இருக்கிறார் என்று நீண்ட காலம்நம்பியவர்கள் ஏராளம்!
Similar Search keywords:-
hitler history in tamil | Adolf Hitler Biography History in Tamil | Hitler Biography History in Tamil | hitler death | Adolf hitler history in tamil PDF | hitler history in tamil pdf | hitler biography | hitler biography in tamil | adolf hitler biography in tamil | adolf hitler biography for kids | hitler short biography | adolf hitler biography video | hitler biography pdf | hitler biography book | hitler biography for kids
Adolf Hitler History in Tamil | ஹிட்லரின் வரலாறு
Reviewed by haru
on
December 18, 2012
Rating:
No comments