மாற்றம் மலரட்டும் | தமிழ் அறிவு கதைகள்

Ads Below The Title
வீட்டு சுவரில் மாட்டியிருந்த ஓலைப்பெட்டியை பார்த்ததும் ஆச்சரியப்பட்டு, அதை எடுத்து தரும்படி தனது தாத்தா ரெங்கனிடம் கேட்டான் சிவா,
தாத்தா எடுத்து தந்தார்.
 
 தாத்தா... இது மாதிரி புதுசு எனக்கு வாங்கி குடுங்க தாத்தா... ஆர்வமாய் கேட்டான் சிவா.

இது இப்போ கிடைக்கிறதில்லப்பா... அந்த காலத்துல பனை மரம் ஏறி ஓலை வெட்டி போட்டு அந்த ஒலையில பெட்டி செய்தாங்க. இப்போ பனை மரம் ஏறுறவங்க கிடைக்காததனால ஓலைப்பெட்டி முடையிற தொழில யாரும் செய்றதில்ல. விளக்கம் சொனானார் ரெங்கன்.

அந்த தொழில் செஞ்சவங்க இப்போ வருமானத்துக்கு என்ன செய்வாங்க... மறு கேள்வி கேட்டான் சிவா.

வேறு ஏதாவது தொழில் செஞ்சு பொழைச்சுக்குவாங்க...

இது மாதிரிதானே தாத்தா பட்டாசு தொழிலும் வயிற்று பொழைப்புக்கு பட்டாசு தொழில் செய்யறாங்க. இந்த தொழிலே இல்லாம போனா அவங்க வேற தொழில் செஞ்சு பொழைச்சுக்குவாங்க. உயிருக்கு ஆபத்தான பட்டாசு தொழில் மூலமா பல பேருக்கு வேலை கொடுக்கிறதா நினைச்சுக்கிட்டு பட்டாசு தொழில நடத்தறீங்களே. அத நிறுத்த கூடாதா....

அவனது கேள்வியில் ஒரு நிமிடம் மௌனமாகி பட்டாசு தொழில் நடத்தும் எண்ணத்தை கைவிடத் தீர்மானித்தார் ரெங்கன்.

நன்றி:குமுதம்
மாற்றம் மலரட்டும் | தமிழ் அறிவு கதைகள் மாற்றம் மலரட்டும் | தமிழ் அறிவு கதைகள் Reviewed by haru on January 09, 2013 Rating: 5

No comments