முல்லா கதைகள் - புதுப்பானை | Mulla Stories in Tamil
முல்லா கதைகள் - புதுப்பானை
முல்லாவின் வீட்டில் சிறுவன் ஒருவன் வேலை செய்து கொண்டிருந்தான். முல்லா ஒருநாள் புதுப்பானை ஒன்றை வாங்கி வந்தார்.
"பையா! இந்தப் பானையை எடுத்து கொண்டு கிணற்றுக்குப் போய் நிறைய நீர் கொண்டு வா" எனக் கூறினார்.
பையன் பானையை எடுத்துக் கொண்டு கிணற்றுக்குப் புறப்பட்டான்.
முல்லா சற்று தூரம் சென்ற பையனைக் கூப்பிட்டார்.
பையன் திரும்பி வந்து, "என்ன எஜமானே" என்று கேட்டான்.
இந்தப் பானை புத்தம் புதியது. அதிகப் பணம் கொடுத்து வாங்கியிருக்கிறேன். இதை நீ அஜாக்கிரதையாகக் கையாண்டு உடைத்தாயானால் அடி கொடுப்பேன் என்று கூறிய முல்லா பையன் முதுகில் ஒங்கி அறைந்தார்.
பையன் திடுக்கிட்டுத் திரும்பி, "எஜமானே, பானையை உடைத்தால்தானே அடி கொடுப்பேன் என்று கூறினீர்கள். நான் பானையை உடைக்கவில்லையே என்னை எதற்காக அடித்தீர்கள்?" என்று கேட்டான்.
அதற்கு முல்லா, "பையா! பானையை நீ உடைத்து விட்ட பிறகு உன்னை அடித்து என்ன பயன் உடைந்து போன பானை திரும்பியா வரும்? அதற்காகத்தான் எச்சரிக்கை அடியாக முன்னதாகவே அடித்தேன். இந்த அடியை நினைவில் வைத்தக் கொண்டு நீ பானை விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பாய் அல்லவா?" என்று பதிலளித்தார்.
Mulla ( முல்லா ) nasruddin stories (கதைகள்) in tamil. முல்லாவின் ( mullah ) கதைகள் - புதுப்பானை (Puthu Paanai). Download mulla nasruddin ( முல்லாவின் ) stories in tamil pdf.
முல்லா கதைகள் - புதுப்பானை | Mulla Stories in Tamil
Reviewed by haru
on
August 29, 2013
Rating:
No comments