தொழில் - முல்லா கதைகள் | Thozhil - Mulla Stories
தொழில் (Thozhil)
(முல்லா கதைகள்)
ஒருமுறை அக்பர் பீர்பாலிடம், "நமது நாட்டில் மக்கள் அதிகமாக மேற்கொண்டிருக்கும் தொழில் எது?'' என்று கேட்டார்.
"வைத்தியத் தொழில்தான்,'' என்றார் பீர்பால்.
"என்ன விளையாடுகிறாயா? போதுமான மருத்துவர்கள் இல்லாததால், மக்கள் நோயால் வருந்திக் கொண்டிருப்பதாக அபுல் பசல் கூறினாரே. அப்படியிருக்க, நம் நாட்டில் மக்கள் அதிகமாக மேற்கொண்டிருக்கும் தொழில் வைத்தியத் தொழில் என்று கூறுகிறாயே, இதை உன்னால் நிரூபிக்க முடியுமா?'' என்றார் அக்பர்.
"நிச்சயம் நிரூபிக்கிறேன்,'' என்ற பீர்பால் மறுநாள் கையில் ஒரு பெரிய கட்டு போட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.
வழியில் ஒருவர் பீர்பாலிடம், "கையில் என்ன கட்டு?'' என்று கேட்டார்.
"உடனே அந்த மனிதர் அதற்கு ஒரு வைத்தியம் சொல்லி, உடனடியாக அந்த வைத்தியத்தைச் செய்து கொள்ள வேண்டுமென்றும், தாமதப்படுத்தினால் கையையே இழக்க நேரிடும்,'' என்றார்.
இவ்வாறு போகிற வழியெல்லாம் பார்க் கிறவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாக வைத்தியம் சொன்னனர். ஒருவாறு அரண்மனைக்குப் போய்ச் சேருவதற்குள் முப்பத்து ஆறு விதமான வைத்தியங்கள் சொல்லி விட்டனர்.
அக்பர் பீர்பாலின் கட்டைப் பார்த்து, என்னவென்று கேட்க, பீர்பால் அவரிடமும் வழுக்கி விழுந்து விட்டதாகவும், கை வீங்கி விட்டது என்றும் கூறி வழியில் பார்த்தவர்கள் சொல்லிய வைத்திய முறைகளையெல்லாம் சொன்னார்.
"அவர்கள் கிடக்கிறார்கள் முட்டாள்கள். அவர்கள் பேச்சைக் கேட்காதே! நான் ஓர் அற்புதமான வைத்தியம் சொல்லுகிறேன். அதை செய்து பார். பட்டென்று வீக்கம் ஒரு நொடியில் போய்விடும்,'' என்றார்.
அதைக் கேட்ட பீர்பால் சிரித்தார்.
"பீர்பால் நான் என்ன சொல்லி விட்டேன். நீ எதற்காக சிரிக்கிறாய்?'' என்று சற்று கோபமாக கேட்டார் அக்பர்.
"அரசே மன்னிக்க வேண்டும். எல்லாருக்கும் பிடித்தமான தொழில் எது என்று நேற்று என்னிடம் கேட்டீர்களே... அதற்கு பதில் இதுதான்,'' என்றார் பீர்பால்.
அதைக் கேட்ட அக்பர், பீர்பாலை பாராட்டினார்.
தொழில் - முல்லா கதைகள். Read and download mulla 's famous story "thozhil" in tamil language.
Source: Dinamalar.com
தொழில் - முல்லா கதைகள் | Thozhil - Mulla Stories
Reviewed by haru
on
November 22, 2013
Rating:
No comments