பாம்பும் விவசாயியும் | The Farmer and the Snake in Tamil

Ads Below The Title

பாம்பும் விவசாயியும்

(The Farmer and the Snake Story in Tamil)

அது ஒரு அழகிய குளிர்காலம். ஒரு நாள் பாம்பு ஒன்று பனியில் விரைந்து உயிர் போய்விடுமோ என்ற நிலையில் சுருண்டு கிடந்தது. 

அந்த நேரத்தில் அவ்வழியே வந்த விவசாயி ஒருவன் அந்த பாம்பினைப் பார்த்தான். இரக்க குணமுள்ள அந்த விவசாயி அப்பாம்புக்கு உதவிட நினைத்தான்.

The Farmer and the Snake 1 - Aesop Moral Story

பாம்பினை எடுத்து தன் மார்போடு அணைத்து அதனைச் சூடேற்றினான். விவசாயியின் உடல் சூடு பட்டதும், பாம்பு மெள்ள மெள்ள உணர்வு பெற்றது.

The Farmer and the Snake 2 - Aesop Moral Story

அதற்கு நன்றாக உணர்வு வந்ததும், அது தன்னைக் காப்பாற்றிய விவசாயியை பலமாகக் கடித்துவிட்டது. பாம்பின் நஞ்சு ஏறி உயிர் போகும் நிலையில் இருந்த அந்த விவசாயி தன் செய்கைக்காக வருந்தினான்.

The Farmer and the Snake 3 - Aesop Moral Story

பாம்பைப் பார்த்து "ஏ நன்றி கெட்ட நாகமே! உன்னைக் காப்பாற்றிய என்னையே கடித்துவிட்டாயே!! உன் குணம் தெரிந்தும் நான் உனக்கு உதவி செய்தேன் அல்லவா? அதற்கு இது சரியான தண்டனை தான்" என்று கூறிவிட்டு இறந்தான்.

The Farmer and the Snake 4 - Aesop Moral Story

நீதி: தீயவர்களுக்குச் செய்யும் உதவி தீமையாகவே முடியும்.


பாம்பும் விவசாயியும் - ஈசாப் நீதிக் கதைகள். Aesop's Fables - The Farmer and the Viper (Snake). Read Snake (பாம்பு) And The Farmer (விவசாயி) Story Online In Tamil Language With Pictures For Kids.
பாம்பும் விவசாயியும் | The Farmer and the Snake in Tamil பாம்பும் விவசாயியும் | The Farmer and the Snake in Tamil Reviewed by haru on January 27, 2014 Rating: 5

No comments