Abraham Lincoln History in Tamil | ஆப்ரஹாம் லிங்கன் வாழ்க்கை வரலாறு
ஆப்ரஹாம் லிங்கன் வாழ்க்கை வரலாறு
கடந்த இரு நூற்றாண்டுகளில் உலகிலேயே அதிக பலம் வாய்ந்த நபர் யார் என்று கேட்டால் பெரும்பாலோர் அந்தந்த காலகட்டத்தின் அமெரிக்க அதிபர்களைக் குறிப்பிடுவர். ராணுவ பலமும் பொருளியல் வளப்பமும் அமெரிக்க அதிபர்களுக்கு அப்படியொரு தகுதியைத் தந்திருக்கின்றன. உலகம் இதுவரை கண்டிருக்கும் 44 அமெரிக்க அதிபர்களும் வெவ்வேறு விதங்களில் தங்கள் முத்திரையைப் பதித்திருந்தாலும் அவர்களில் ஒரு சிலர்தான் உலகுக்குத் தேவைப்பட்ட முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்தனர்; மனுக்குலத்துக்கு மகிமையைத் தேடித் தந்தனர். அவர்களுள் தலையாயவர் ஆப்ரஹாம் லிங்கன்.
ஆப்ரஹாம் லிங்கன் எளிய குடும்பத்தில் பிறந்து, சுயமாகக் கல்வி கற்று, வழக்கறிஞராகப் பட்டம் பெற்று மாநில, மத்திய சட்ட சபையில் உறுப்பினராகி இறுதியில் 16 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப் பட்டவர். அவரே அமெரிக்காவின் உன்னத ஜனாதிபதியாக வரலாற்று அறிஞர் பலரால் கருதப்படுபவர்.
எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்து விட்டுப் போவோம் அல்லது கண்டு கொள்ளாமல் இருப்போம் என்று லிங்கன் நினைத்திருந்தால் அவர் சரித்திரத்தில் இடம் பிடித்திருக்க முடியாது.
Also Read: Adolf Hitler (அடால்ஃப் ஹிட்லர்) History in Tamil
இன்று அமெரிக்கா ஒரு சுதந்திர தேசம் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் ஆப்ரஹாம் லிங்கன்.
1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி கெண்டக்கி (Kentucky) - ல் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார் ஆப்ரஹாம் லிங்கன் (Abraham Lincoln). அவரது தந்தை ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. அவருடைய தாய் நான்ஸி இறந்துவிட, சாரா என்கிற விதவையை மணந்துகொண்டார் ஆப்ரஹாமின் தந்தை தாமஸ்.
தாமஸ் லிங்கன் இரண்டாம் தாரமாக மணந்த மாற்றாந் தாய் லிங்கனைப் பரிவோடும் கனிவோடும் வளர்த்தார். குடும்ப ஏழ்மை காரணமாக லிங்கனால் சரியாகப் படிக்க முடியவில்லை.
Also Read: Bill Gates (பில் கேட்ஸ்) History in Tamil
1809ம் வருடம் அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை, “தோல்விகளின் செல்லக் குழந்தை” என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொடர் தோல்விகள் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. பிறந்த சில வருடங்களிலேயே தாயை இழந்தார். ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டே இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார்.
வேலைக்கு நடுவில் படிப்பு:
ஆப்ரஹாமின் ஒன்பது வயதில் அவருடைய தாய் நான்ஸி இறந்துவிட்டார். அதன்பிறகு சாரா என்கிற விதவையை மணந்துகொண்டார் ஆப்ரஹாமின் தந்தை தாமஸ். உறுதியும் அன்பும் நிறைந்த சாராவுடன் மிக எளிதாக ஒட்டிக்கொண்டான் சிறுவன் ஆப்ரஹாம். தாமஸ், சாரா இருவருமே படிப்பு வாசனையற்றவர்கள் என்றாலும் தன் மகனைப் படிக்கச் சொல்லி உற்சாகமூட்டினார் சாரா.
அந்தக் காட்டுப் பகுதியில் புத்தகங்கள் கிடைப்பதே அரிதாக இருந்தது. பல மைல்கள் நடந்து சென்று புத்தங்களை இரவல் வாங்கிப் படித்தார் ஆப்ரஹாம். ராபின்சன் க்ரூசோ, பில்கிரிம்ஸ் ப்ராக்ரஸ், ஈசாப் கதைகளை விரும்பிப் படித்தார்.
சமூக அக்கறை:
1830ல் இல்லினாய்ஸுக்குக் குடியேறியபோது சிறுவன் ஆப்ரஹாம், இளைஞனாக வளர்ந்திருந்தார். ஆறடி உயரமும் ஆஜானுபாகுவான உடலமைப்பும் கொண்ட லிங்கனுக்கு வேலை எளிதில் கிடைத்தது. தபால்காரர், நிலமதிப்பீட்டாளர், கடை உரிமையாளர் எனப் பலவித வேலைகளை அங்கே செய்தார். அவருடைய சமூக ஈடுபாடும் அக்கறையும் அந்தப் பகுதி மக்களிடையே லிங்கனுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
அவர் New Orleans-ல் வசித்த போது அடிமைகள் என்ற பெயரில் கறுப்பினத்தவர் விலைக்கு விற்கப்படுவதையும், இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டிருப்பதையும், சாட்டையால் அடிக்கப்படுவதையும், ஒட்டுமொத்தமாகக் கொடுமைப் படுத்தப் படுவதையும் கண்டார். அப்போது அவருக்கு வயது பதினைந்துதான். அந்த கணமே இந்த அடிமைத் தனத்தை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
தமது 22வது வயதில் அவர் ஓர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் கடனுக்கு ஒரு கடையை வாங்கி வியாபாரத்தில் தோற்றுப் போனார். அடுத்து தபால்காரரானார்.
அதன் பிறகு அவர் தாமாகவே படித்து வழக்கறிஞரானார். 1834ம் ஆண்டு தமது 25வது வயதில் Illinois மாநில சட்டமன்றத்துக்காகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1833ல் Ann Rutledge என்ற பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் Ann விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33வது வயதில் mary todd என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார், பின்னர் இவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகள் சிறுவயதிலேயே மரணமடைந்தார்கள். மனைவிக்கு மனநோய் இருந்தது. இத்தனைத் தோல்விகளையும் மன உறுதியோடு கொண்டார்.
Also Read: Che Guevara (சே குவேரா) History in Tamil
விநோதப் பழக்கங்கள்:
கம்பீரமும் கண்ணியமும் நிறைந்த லிங்கனின் இன்னொரு முகம் குறும்புத்தனங்கள் நிறைந்தது. ‘ஹானஸ்ட் ஆப்’ என்று பிரியமாக அழைக்கப்படும் லிங்கன்தான் அமெரிக்காவின் உயர்ந்த அதிபர். உயரம் ஆறு அடி 4 அங்குலம். அவர் மிகச்சிறந்த கதைசொல்லி. அவருடைய கதை சொல்லும் பாங்குதான் ஆரம்ப காலத்தில் மக்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
லிங்கன், சிறந்த நகைச்சுவை மன்னனும்கூட. தாடி வைத்த முதல் அமெரிக்க அதிபரும் லிங்கன்தான். முக்கியமான கடிதங்கள், ஆவணங்களைத் தன்னுடைய நீண்ட தொப்பிக்குள் வைத்துக்கொள்ளும் பழக்கமும் இவருக்கு இருந்ததாம்.
அரசியல் அறிமுகம்:
அமெரிக்காவில் உள்நாட்டு கலவரம் மூண்டபோது, இல்லினாய்ஸ் பகுதி மக்கள் தங்கள் தலைவராக லிங்கனை முன்னிறுத்தினார்கள். அதுதான் அவரது அரசியல் நுழைவுக்கான முதல் துருப்புச்சீட்டாக அமைந்தது. அதன் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். அடிமைத்தனத்துக்கு எதிரான தனது குரலைப் பதிவு செய்தார். அவருடைய இந்த அரசியல் பார்வை, மற்றவர்களிடம் இருந்து லிங்கனை வித்தியாசப்படுத்தியது.
இதற்கிடையே தானாகவே புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துச் சட்டக் கல்வி பயின்றார். பார் கவுன்சில் தேர்வில் வெற்றிபெற்று, சில காலம் ஸ்பிரிங்ஃபீல்டு பகுதியில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். வேலையுடன் காதலும் வந்தது லிங்கனுக்கு. டைபாய்டு காய்ச்சலால் அவருடைய காதலி அன்னா ரட்லெஜ், திருமணத்துக்கு முன்பே இறந்துவிட்டார். அந்தத் தனிமையும், துயரமும் லிங்கனை வெகுவாகப் பாதித்தன. ஆனால், அதுதான் அவருக்கு ஆன்மப் பலத்தையும் தந்தது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
1834-லிருந்து எட்டு ஆண்டுகள் Illinois சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். லிங்கன். அதன் பிறகு அரசியலை விட்டு விலகி ஐந்து ஆண்டுகள் அவர் தனியார் துறையில் வழங்கறிஞராகப் பணியாற்றினார். 1854ல் அவரை அரசியல் மீண்டும் அழைத்தது.
குடிப்பழக்கம், புகைக்கும் பழக்கம் எதுவும் இல்லாத லிங்கன் அரசியலில் கடுமையாக உழைத்தார். 1859ம் ஆண்டு “நீங்கள் ஏன் அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிடக்கூடாது” என ஒரு நண்பர் கேட்ட போது “அந்தத் தகுதி எனக்குக் கிடையாது” என்று பணிவாகப் பதில் கூறினார் லிங்கன். ஆனால் அப்படிக் கூறியவர் அடுத்த ஆண்டே அமெரிக்காவின் பதினாறாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பதினைந்து வயதில் தாம் எடுத்த தீர்மானத்தை நிறைவேற்றும் தருணம் வந்து விட்டதாக அப்போது அவர் எண்ணியிருக்கக் கூடும். ஏனெனில் பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் அதாவது 1862ல் அவர் “அடுத்த ஆண்டு ஐனவரி முதல் தேதியிலிருந்து அனைத்து அடிமைகளும் விடுவிக்கப்படுவர், அதன் பின் அமெரிக்காவில் அடிமைத் தனம் இருக்கக் கூடாது” என்று பிரகடனம் செய்தார்.
அமெரிக்காவின் தெற்கு மாநிலங்கள் விவசாயத்தை நம்பியிருந்ததால் பொருளியல் வளர்ச்சிக்கு அடிமைகள் தேவை என்று அடம் பிடித்தன. மேற்கு மாநிலங்களோ தொழிலியல் பகுதிகளாக இருந்ததால் தங்களுக்கு அடிமைகள் தேவையில்லை என்று கருதின. இவையிரண்டுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு உள்நாட்டுக் கலகமாக வெடித்தது.
அடிமைத் தளையை அறுத்தெறியவும் அமெரிக்காவை ஒன்றுபடுத்தவும் போர் அவசியம் என்று துணிந்தார் லிங்கன். நான்கு ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரில் தென் மாநிலங்கள் தோற்கடிக்கப்பட்டன. லிங்கனின் உயரிய சிந்தனைக்கு வெற்றி கிடைத்தது.
1863 ஜனவரி முதல் தேதி ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்கக் கூட்டு மாநிலங்களில் (Confederacy) அடிமைகளை நிரந்தரமாய் விடுவிக்கப் புரட்சிகரமான “விடுதலைப் பிரகடனம்” (Emancipation Proclamation) ஒன்றை வெளியிட்டார். அதை எதிர்த்து நிராகரித்த 11 தென்பகுதி மாநிலங்களுக்கும், வரவேற்ற மற்ற வடபகுதி மாநிலங்களுக்கும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது !
அடிமைகள் ஒழிப்புப் பிரச்சனையில் பிளவுபட்ட ஐக்கிய மாநிலங்களை போரிட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பது ஆப்ரஹாம் லிங்கனின் பெரும் பிரச்சனையாகி, நீண்ட போராட்டமாகி விட்டது. 1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிஸ்பர்க் பேருரையில் (Gettysburg Speech) கூறியது : “விடுதலை உணர்ச்சியுள்ள ஐக்கிய அமெரிக்காவைப் பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப் படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப் பட்டவர் என்னும் உன்னத வாசகம் மேற்கொள்ளப் படுகிறது. மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் இந்தப் பூதளத்திலிருந்து அழிந்து போகா.”
Also Read: Alexander (அலெக்சாண்டர்) History in Tamil
1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் 400,000 ஓட்டுகள் மிகையாகப் பெற்று இரண்டாம் தடவைப் போர் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் தேர்ந்தெடுக்கப் பட்டு வெள்ளை மாளிகை வேந்தராக நீடித்தார். அடுத்த ஒரு மாதத்தில் போர் நின்றது. உள்நாட்டுப் போரில் மகத்தான் வெற்றி பெற்று தென்பகுதி மாநிலங்களின் போர்த் தளபதி ராபர்ட் லீ (Robert Lee) வடப்பகுதி இராணுவத் தளபதி கிரான்ட் (General Grant) முன்பு சரணடைந்த ஐந்தாம் நாள், ஆப்ரஹாம் லிங்கனை வாஷிங்டன் நாடகத் தியேட்டரில் ஜான் வில்கிஸ் பூத் (John Wilkes Booth) சுட்டுக் கொன்றான். பிரிந்து போன வடதென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன ! தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது ! ஆனால் வரலாற்று முக்கியத்துவம் உள்ள அந்த மகிழ்ச்சிகரமான வெற்றியைக் கண்டுகளிக்க அவற்றின் ஆக்க மேதை ஆப்ரஹாம் லிங்கன் அப்போது உயிரோடில்லை !
ஜனவரி 1865ல் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்க மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டு இரண்டாவது தவணைக்கு அமெரிக்க அதிபராகத் தேர்வு பெற்றார் லிங்கன்.
இரண்டாவது முறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதே ஆண்டு, அதாவது 1865ம் ஆண்டு ஆக்ஸ்ட் 14ம் தேதி பெரிய வெள்ளிக்கிழமையன்று தனது மனைவியுடன் Our American Cousin என்ற நாடகம் பார்க்கச் சென்றிருந்தார் ஆப்ரஹாம் லிங்கன். அவர் நாடகத்தை ரசித்துக் கொண்டிருந்த போது John Wilkes Booth என்ற ஒரு நடிகன் அதிபரைக் குறிவைத்துச் சுட்டான். மறுநாள் காலை அதிபரின் உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது ஐம்பத்து ஆறுதான்.
இரண்டாவது தவணை முழுமைக்கும் அவர் அதிபராக இருந்திருத்தால் அமெரிக்கா மேலும் அமைதி பெற்றிருக்கும்; உலகம் மேலும் உய்வு கண்டிருக்கும். ஆனால் வரலாற்றின் நோக்கம் வேறாக இருந்தது.
தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார் ஆப்ரஹாம் லிங்கன்.
அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. அதற்கு பதிலாக அந்த பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!
தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும்
என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள்
இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று
அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.
மென்மையானவர்களிடம் மென்மையாகவும்,
உறுதியானவர்களிடம் உறுதியாகவும்
நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.
குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம்
அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை
அவன் துணிந்து நின்று
போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.
இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்.
அவர் சொன்ன அந்த அறிவுரை எந்த காலத்திலும் பொருந்தும்.
பிள்ளைகளின் எதிர்காலமே ஆசிரியர்களிடம்தான் இருக்கிறது.
எனவே இந்த பதிவு ஆசிரியர்களுக்குத்தான் நன்றி...
Abraham Lincoln. Start school with her son.
He did not give his son advice. Instead,
he wrote letters to the editor of the few areas of the school!
Accept defeat, to teach my son to celebrate the success.
Let him away from envy.
Vanapparavaikal, bees, the sun, green plants, flowers, teach him to enjoy them.
Cheating than others, to teach him that losing dignity.
Give thought to the self-confidence.
A soft and nice, tough and determined to teach me how to behave.
Reduce crime kurupavarkalai ignore him.
He has more than enough warning to those who have to be sweet.
He appears confident that his heart stopped
fighting for the right to fulfill palakkunkal him.
Abraham Lincoln wrote to his father.
He advised that he may at any time.
Children are the future of the Teacher.
So thank you for this post s Teachers...
வெற்றி தோல்விகள்
ஆபிரகாம் லிங்கனின் ஒரு வாரம்
எல்லோரும் கையைத் தூக்க, ஆபிரஹாம் லிங்கன் மட்டும் பேசாமல் நின்றார். “ஆபிரஹாம்! நீ எங்கே போவதாக உத்தேசம்?” என பாதிரியார் கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும், “நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்” என்று உறுதியான குரலில் சொன்னார் அபிரஹாம்.
“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்” என புன்னகையுடன் ஆசி வழங்கினார் பாதிரியார்.
லிங்கன் ஒருமுறை ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவரை அவமானப்படுத்த எண்ணிய ஒருவர், "திரு. லிங்கன் அவர்களே... உங்களைப் பற்றி மிகவும் பெருமையாக நினைத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் அப்பா தைத்த செருப்பைத்தான் நான் அணிந்து கொண்டிருக்கிறேன்'' என்று உரத்த குரலில் கூறினார்.
அதாவது லிங்கனை அவர் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன்தானே என்று அவமானப்படுத்த எண்ணினார்.
ஆப்ரஹாம் லிங்கன் சிறிது கூடக் கோபமில்லாமல், "நண்பரே! உங்களுக்கு நன்றி. இன்னும் நீங்கள் என் தந்தை தைத்த செருப்பை அணிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்றால் என் தந்தையின் தொழில் நேர்த்தி எவ்வளவு என்பது எனக்குப் புரிகிறது. ஒரு வேளை அந்தச் செருப்புப் பழுதாகிப் போனால் ஜனாதிபதி மாளிகைக்கு தயங்காமல் கொண்டு வாருங்கள். நான் சரியாகத் தைத்துக் தருகிறேன்'' என்று கூறினாராம்!
அந்த அளவு உழைப்பின் பெருமையை அவர் உணர்ந்திருந்த காரணத்தினால்தான் மிக மிகப் பின்தங்கிய ஏழைக் குடும்பத்தில் பிறந்து 11 மாதமே பள்ளிக் கல்வியைப் பெற்ற லிங்கன் அமெரிக்க நாட்டுக் குடியரசுத் தலைவர் ஆனவர் ஆப்ரஹாம் லிங்கன்.
“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக மாறுவாய்” என்பது ஆபிரஹாம் லிங்கனுக்கு மட்டுமல்ல நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக விடாப்பிடியாக போராடும் நம்மைப்போன்ற ஒவ்வொருவருக்கும் அது வெற்றி திருமந்திரம்.
ஆப்ரஹாம் லிங்கன் எளிய குடும்பத்தில் பிறந்து, சுயமாகக் கல்வி கற்று, வழக்கறிஞராகப் பட்டம் பெற்று மாநில, மத்திய சட்ட சபையில் உறுப்பினராகி இறுதியில் 16 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப் பட்டவர். அவரே அமெரிக்காவின் உன்னத ஜனாதிபதியாக வரலாற்று அறிஞர் பலரால் கருதப்படுபவர்.
எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்து விட்டுப் போவோம் அல்லது கண்டு கொள்ளாமல் இருப்போம் என்று லிங்கன் நினைத்திருந்தால் அவர் சரித்திரத்தில் இடம் பிடித்திருக்க முடியாது.
Also Read: Adolf Hitler (அடால்ஃப் ஹிட்லர்) History in Tamil
இன்று அமெரிக்கா ஒரு சுதந்திர தேசம் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் ஆப்ரஹாம் லிங்கன்.
Abraham Lincoln Life History in Tamil
பிறப்பு:1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி கெண்டக்கி (Kentucky) - ல் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார் ஆப்ரஹாம் லிங்கன் (Abraham Lincoln). அவரது தந்தை ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. அவருடைய தாய் நான்ஸி இறந்துவிட, சாரா என்கிற விதவையை மணந்துகொண்டார் ஆப்ரஹாமின் தந்தை தாமஸ்.
தாமஸ் லிங்கன் இரண்டாம் தாரமாக மணந்த மாற்றாந் தாய் லிங்கனைப் பரிவோடும் கனிவோடும் வளர்த்தார். குடும்ப ஏழ்மை காரணமாக லிங்கனால் சரியாகப் படிக்க முடியவில்லை.
Also Read: Bill Gates (பில் கேட்ஸ்) History in Tamil
1809ம் வருடம் அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை, “தோல்விகளின் செல்லக் குழந்தை” என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொடர் தோல்விகள் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. பிறந்த சில வருடங்களிலேயே தாயை இழந்தார். ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டே இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார்.
வேலைக்கு நடுவில் படிப்பு:
ஆப்ரஹாமின் ஒன்பது வயதில் அவருடைய தாய் நான்ஸி இறந்துவிட்டார். அதன்பிறகு சாரா என்கிற விதவையை மணந்துகொண்டார் ஆப்ரஹாமின் தந்தை தாமஸ். உறுதியும் அன்பும் நிறைந்த சாராவுடன் மிக எளிதாக ஒட்டிக்கொண்டான் சிறுவன் ஆப்ரஹாம். தாமஸ், சாரா இருவருமே படிப்பு வாசனையற்றவர்கள் என்றாலும் தன் மகனைப் படிக்கச் சொல்லி உற்சாகமூட்டினார் சாரா.
அந்தக் காட்டுப் பகுதியில் புத்தகங்கள் கிடைப்பதே அரிதாக இருந்தது. பல மைல்கள் நடந்து சென்று புத்தங்களை இரவல் வாங்கிப் படித்தார் ஆப்ரஹாம். ராபின்சன் க்ரூசோ, பில்கிரிம்ஸ் ப்ராக்ரஸ், ஈசாப் கதைகளை விரும்பிப் படித்தார்.
சமூக அக்கறை:
1830ல் இல்லினாய்ஸுக்குக் குடியேறியபோது சிறுவன் ஆப்ரஹாம், இளைஞனாக வளர்ந்திருந்தார். ஆறடி உயரமும் ஆஜானுபாகுவான உடலமைப்பும் கொண்ட லிங்கனுக்கு வேலை எளிதில் கிடைத்தது. தபால்காரர், நிலமதிப்பீட்டாளர், கடை உரிமையாளர் எனப் பலவித வேலைகளை அங்கே செய்தார். அவருடைய சமூக ஈடுபாடும் அக்கறையும் அந்தப் பகுதி மக்களிடையே லிங்கனுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
அவர் New Orleans-ல் வசித்த போது அடிமைகள் என்ற பெயரில் கறுப்பினத்தவர் விலைக்கு விற்கப்படுவதையும், இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டிருப்பதையும், சாட்டையால் அடிக்கப்படுவதையும், ஒட்டுமொத்தமாகக் கொடுமைப் படுத்தப் படுவதையும் கண்டார். அப்போது அவருக்கு வயது பதினைந்துதான். அந்த கணமே இந்த அடிமைத் தனத்தை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
தமது 22வது வயதில் அவர் ஓர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் கடனுக்கு ஒரு கடையை வாங்கி வியாபாரத்தில் தோற்றுப் போனார். அடுத்து தபால்காரரானார்.
அதன் பிறகு அவர் தாமாகவே படித்து வழக்கறிஞரானார். 1834ம் ஆண்டு தமது 25வது வயதில் Illinois மாநில சட்டமன்றத்துக்காகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1833ல் Ann Rutledge என்ற பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் Ann விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33வது வயதில் mary todd என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார், பின்னர் இவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகள் சிறுவயதிலேயே மரணமடைந்தார்கள். மனைவிக்கு மனநோய் இருந்தது. இத்தனைத் தோல்விகளையும் மன உறுதியோடு கொண்டார்.
Also Read: Che Guevara (சே குவேரா) History in Tamil
விநோதப் பழக்கங்கள்:
கம்பீரமும் கண்ணியமும் நிறைந்த லிங்கனின் இன்னொரு முகம் குறும்புத்தனங்கள் நிறைந்தது. ‘ஹானஸ்ட் ஆப்’ என்று பிரியமாக அழைக்கப்படும் லிங்கன்தான் அமெரிக்காவின் உயர்ந்த அதிபர். உயரம் ஆறு அடி 4 அங்குலம். அவர் மிகச்சிறந்த கதைசொல்லி. அவருடைய கதை சொல்லும் பாங்குதான் ஆரம்ப காலத்தில் மக்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
லிங்கன், சிறந்த நகைச்சுவை மன்னனும்கூட. தாடி வைத்த முதல் அமெரிக்க அதிபரும் லிங்கன்தான். முக்கியமான கடிதங்கள், ஆவணங்களைத் தன்னுடைய நீண்ட தொப்பிக்குள் வைத்துக்கொள்ளும் பழக்கமும் இவருக்கு இருந்ததாம்.
அரசியல் அறிமுகம்:
அமெரிக்காவில் உள்நாட்டு கலவரம் மூண்டபோது, இல்லினாய்ஸ் பகுதி மக்கள் தங்கள் தலைவராக லிங்கனை முன்னிறுத்தினார்கள். அதுதான் அவரது அரசியல் நுழைவுக்கான முதல் துருப்புச்சீட்டாக அமைந்தது. அதன் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். அடிமைத்தனத்துக்கு எதிரான தனது குரலைப் பதிவு செய்தார். அவருடைய இந்த அரசியல் பார்வை, மற்றவர்களிடம் இருந்து லிங்கனை வித்தியாசப்படுத்தியது.
இதற்கிடையே தானாகவே புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துச் சட்டக் கல்வி பயின்றார். பார் கவுன்சில் தேர்வில் வெற்றிபெற்று, சில காலம் ஸ்பிரிங்ஃபீல்டு பகுதியில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். வேலையுடன் காதலும் வந்தது லிங்கனுக்கு. டைபாய்டு காய்ச்சலால் அவருடைய காதலி அன்னா ரட்லெஜ், திருமணத்துக்கு முன்பே இறந்துவிட்டார். அந்தத் தனிமையும், துயரமும் லிங்கனை வெகுவாகப் பாதித்தன. ஆனால், அதுதான் அவருக்கு ஆன்மப் பலத்தையும் தந்தது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
1834-லிருந்து எட்டு ஆண்டுகள் Illinois சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். லிங்கன். அதன் பிறகு அரசியலை விட்டு விலகி ஐந்து ஆண்டுகள் அவர் தனியார் துறையில் வழங்கறிஞராகப் பணியாற்றினார். 1854ல் அவரை அரசியல் மீண்டும் அழைத்தது.
குடிப்பழக்கம், புகைக்கும் பழக்கம் எதுவும் இல்லாத லிங்கன் அரசியலில் கடுமையாக உழைத்தார். 1859ம் ஆண்டு “நீங்கள் ஏன் அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிடக்கூடாது” என ஒரு நண்பர் கேட்ட போது “அந்தத் தகுதி எனக்குக் கிடையாது” என்று பணிவாகப் பதில் கூறினார் லிங்கன். ஆனால் அப்படிக் கூறியவர் அடுத்த ஆண்டே அமெரிக்காவின் பதினாறாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பதினைந்து வயதில் தாம் எடுத்த தீர்மானத்தை நிறைவேற்றும் தருணம் வந்து விட்டதாக அப்போது அவர் எண்ணியிருக்கக் கூடும். ஏனெனில் பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் அதாவது 1862ல் அவர் “அடுத்த ஆண்டு ஐனவரி முதல் தேதியிலிருந்து அனைத்து அடிமைகளும் விடுவிக்கப்படுவர், அதன் பின் அமெரிக்காவில் அடிமைத் தனம் இருக்கக் கூடாது” என்று பிரகடனம் செய்தார்.
அமெரிக்காவின் தெற்கு மாநிலங்கள் விவசாயத்தை நம்பியிருந்ததால் பொருளியல் வளர்ச்சிக்கு அடிமைகள் தேவை என்று அடம் பிடித்தன. மேற்கு மாநிலங்களோ தொழிலியல் பகுதிகளாக இருந்ததால் தங்களுக்கு அடிமைகள் தேவையில்லை என்று கருதின. இவையிரண்டுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு உள்நாட்டுக் கலகமாக வெடித்தது.
அடிமைத் தளையை அறுத்தெறியவும் அமெரிக்காவை ஒன்றுபடுத்தவும் போர் அவசியம் என்று துணிந்தார் லிங்கன். நான்கு ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரில் தென் மாநிலங்கள் தோற்கடிக்கப்பட்டன. லிங்கனின் உயரிய சிந்தனைக்கு வெற்றி கிடைத்தது.
1863 ஜனவரி முதல் தேதி ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்கக் கூட்டு மாநிலங்களில் (Confederacy) அடிமைகளை நிரந்தரமாய் விடுவிக்கப் புரட்சிகரமான “விடுதலைப் பிரகடனம்” (Emancipation Proclamation) ஒன்றை வெளியிட்டார். அதை எதிர்த்து நிராகரித்த 11 தென்பகுதி மாநிலங்களுக்கும், வரவேற்ற மற்ற வடபகுதி மாநிலங்களுக்கும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது !
அடிமைகள் ஒழிப்புப் பிரச்சனையில் பிளவுபட்ட ஐக்கிய மாநிலங்களை போரிட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பது ஆப்ரஹாம் லிங்கனின் பெரும் பிரச்சனையாகி, நீண்ட போராட்டமாகி விட்டது. 1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிஸ்பர்க் பேருரையில் (Gettysburg Speech) கூறியது : “விடுதலை உணர்ச்சியுள்ள ஐக்கிய அமெரிக்காவைப் பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப் படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப் பட்டவர் என்னும் உன்னத வாசகம் மேற்கொள்ளப் படுகிறது. மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் இந்தப் பூதளத்திலிருந்து அழிந்து போகா.”
Also Read: Alexander (அலெக்சாண்டர்) History in Tamil
1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் 400,000 ஓட்டுகள் மிகையாகப் பெற்று இரண்டாம் தடவைப் போர் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் தேர்ந்தெடுக்கப் பட்டு வெள்ளை மாளிகை வேந்தராக நீடித்தார். அடுத்த ஒரு மாதத்தில் போர் நின்றது. உள்நாட்டுப் போரில் மகத்தான் வெற்றி பெற்று தென்பகுதி மாநிலங்களின் போர்த் தளபதி ராபர்ட் லீ (Robert Lee) வடப்பகுதி இராணுவத் தளபதி கிரான்ட் (General Grant) முன்பு சரணடைந்த ஐந்தாம் நாள், ஆப்ரஹாம் லிங்கனை வாஷிங்டன் நாடகத் தியேட்டரில் ஜான் வில்கிஸ் பூத் (John Wilkes Booth) சுட்டுக் கொன்றான். பிரிந்து போன வடதென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன ! தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது ! ஆனால் வரலாற்று முக்கியத்துவம் உள்ள அந்த மகிழ்ச்சிகரமான வெற்றியைக் கண்டுகளிக்க அவற்றின் ஆக்க மேதை ஆப்ரஹாம் லிங்கன் அப்போது உயிரோடில்லை !
ஜனவரி 1865ல் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்க மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டு இரண்டாவது தவணைக்கு அமெரிக்க அதிபராகத் தேர்வு பெற்றார் லிங்கன்.
இரண்டாவது முறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதே ஆண்டு, அதாவது 1865ம் ஆண்டு ஆக்ஸ்ட் 14ம் தேதி பெரிய வெள்ளிக்கிழமையன்று தனது மனைவியுடன் Our American Cousin என்ற நாடகம் பார்க்கச் சென்றிருந்தார் ஆப்ரஹாம் லிங்கன். அவர் நாடகத்தை ரசித்துக் கொண்டிருந்த போது John Wilkes Booth என்ற ஒரு நடிகன் அதிபரைக் குறிவைத்துச் சுட்டான். மறுநாள் காலை அதிபரின் உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது ஐம்பத்து ஆறுதான்.
இரண்டாவது தவணை முழுமைக்கும் அவர் அதிபராக இருந்திருத்தால் அமெரிக்கா மேலும் அமைதி பெற்றிருக்கும்; உலகம் மேலும் உய்வு கண்டிருக்கும். ஆனால் வரலாற்றின் நோக்கம் வேறாக இருந்தது.
ஆப்ரஹாம் லிங்கனின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
ஆப்ரஹாம் லிங்கன் பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார் ஆப்ரஹாம் லிங்கன்.
அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. அதற்கு பதிலாக அந்த பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!
தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும்
என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள்
இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று
அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.
மென்மையானவர்களிடம் மென்மையாகவும்,
உறுதியானவர்களிடம் உறுதியாகவும்
நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.
குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம்
அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை
அவன் துணிந்து நின்று
போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.
இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்.
அவர் சொன்ன அந்த அறிவுரை எந்த காலத்திலும் பொருந்தும்.
பிள்ளைகளின் எதிர்காலமே ஆசிரியர்களிடம்தான் இருக்கிறது.
எனவே இந்த பதிவு ஆசிரியர்களுக்குத்தான் நன்றி...
Abraham Lincoln. Start school with her son.
He did not give his son advice. Instead,
he wrote letters to the editor of the few areas of the school!
Accept defeat, to teach my son to celebrate the success.
Let him away from envy.
Vanapparavaikal, bees, the sun, green plants, flowers, teach him to enjoy them.
Cheating than others, to teach him that losing dignity.
Give thought to the self-confidence.
A soft and nice, tough and determined to teach me how to behave.
Reduce crime kurupavarkalai ignore him.
He has more than enough warning to those who have to be sweet.
He appears confident that his heart stopped
fighting for the right to fulfill palakkunkal him.
Abraham Lincoln wrote to his father.
He advised that he may at any time.
Children are the future of the Teacher.
So thank you for this post s Teachers...
வெற்றி தோல்விகள்
- 1831-வியாபாரத்தில் தோல்வி
- 1832- சட்டசபைத்
- தேர்தலில் தோல்வி
- 1833- வியாபாரத்தில்
- மீண்டும் தோல்வி
- 1834- சட்டசபைத்
- தேர்தலில் தோல்வி
- 1836-சட்டசபைத் தலைவர் தேர்தலில் தோல்வி
- 1840- எலக்டர் தேர்தலில் தோல்வி
- 1843- காங்கிரஸ் தேர்தலில் தோல்வி
- 1848- காங்கிரஸ் தேர்தலில் மீண்டும் தோல்வி
- 1855- செனட் தேர்தலில் தோல்வி
- 1856- உதவி ஜனாதிபதி தேர்தலில் தோல்வி
- 1858- செனட் தேர்தலில் தோல்வி
- இறுதியாக 1860-ல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஆபிரகாம் லிங்கனின் ஒரு வாரம்
- ஆபிரகாம் லிங்கன் பிறந்தது - ஞாயிறு
- முதல் முறையாக அமெரிக்க ஜெனாதிபதி ஆனது - திங்கள்
- இரண்டாவது முறையாக ஜெனாதிபதி ஆனது - செவ்வாய்
- வழக்கறிஞராக தம்மை பதிவு செய்து கொண்டது - புதன்
- பிரசித்தி பெற்ற கெட்டிஸ்பர்க்கில் உரையாற்றியது - வியாழன்
- லிங்கன் சுடப்பட்டது - வெள்ளி
- லிங்கன் உயிர் நீத்தது - சனி
எல்லோரும் கையைத் தூக்க, ஆபிரஹாம் லிங்கன் மட்டும் பேசாமல் நின்றார். “ஆபிரஹாம்! நீ எங்கே போவதாக உத்தேசம்?” என பாதிரியார் கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும், “நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்” என்று உறுதியான குரலில் சொன்னார் அபிரஹாம்.
“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்” என புன்னகையுடன் ஆசி வழங்கினார் பாதிரியார்.
லிங்கன் ஒருமுறை ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவரை அவமானப்படுத்த எண்ணிய ஒருவர், "திரு. லிங்கன் அவர்களே... உங்களைப் பற்றி மிகவும் பெருமையாக நினைத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் அப்பா தைத்த செருப்பைத்தான் நான் அணிந்து கொண்டிருக்கிறேன்'' என்று உரத்த குரலில் கூறினார்.
அதாவது லிங்கனை அவர் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன்தானே என்று அவமானப்படுத்த எண்ணினார்.
ஆப்ரஹாம் லிங்கன் சிறிது கூடக் கோபமில்லாமல், "நண்பரே! உங்களுக்கு நன்றி. இன்னும் நீங்கள் என் தந்தை தைத்த செருப்பை அணிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்றால் என் தந்தையின் தொழில் நேர்த்தி எவ்வளவு என்பது எனக்குப் புரிகிறது. ஒரு வேளை அந்தச் செருப்புப் பழுதாகிப் போனால் ஜனாதிபதி மாளிகைக்கு தயங்காமல் கொண்டு வாருங்கள். நான் சரியாகத் தைத்துக் தருகிறேன்'' என்று கூறினாராம்!
அந்த அளவு உழைப்பின் பெருமையை அவர் உணர்ந்திருந்த காரணத்தினால்தான் மிக மிகப் பின்தங்கிய ஏழைக் குடும்பத்தில் பிறந்து 11 மாதமே பள்ளிக் கல்வியைப் பெற்ற லிங்கன் அமெரிக்க நாட்டுக் குடியரசுத் தலைவர் ஆனவர் ஆப்ரஹாம் லிங்கன்.
“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக மாறுவாய்” என்பது ஆபிரஹாம் லிங்கனுக்கு மட்டுமல்ல நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக விடாப்பிடியாக போராடும் நம்மைப்போன்ற ஒவ்வொருவருக்கும் அது வெற்றி திருமந்திரம்.
Abraham Lincoln History in Tamil | ஆப்ரஹாம் லிங்கன் வாழ்க்கை வரலாறு
Reviewed by haru
on
October 19, 2014
Rating:
No comments