ஜென் குருவும் ஒன்பது திருடர்களும் | Zen and Nine Thieves - ஜென் கதைகள்
ஜென் கதைகள் - ஜென் குருவும் ஒன்பது திருடர்களும். Read and download Zen and Nine Thieves story with pictures for kids.
ஜென் குருவும் ஒன்பது திருடர்களும்
(Zen and Nine Thieves)
ஜப்பானில் ஒரு சிறு கிராமம் அது. அங்கு வசித்து வந்த மக்களுக்கு பெரும் தொல்லையாய் இருந்தார்கள் ஒன்பது திருடர்கள்.
இவர்களை அடக்கி, தங்களைக் காக்க பக்கத்து நகரில் வாள்வீச்சில் புகழ் பெற்றிருந்த ஜென் குரு ஒருவரை அழைத்து வந்தனர்.
கிராமத்திற்கு வந்த குரு அங்கிருந்த உணவகம் ஒன்றிற்கு சென்று சாப்பிடுவதற்காக ஒரு கிண்ணத்தில் அரிசி சாதம் எடுத்து வரச் சொன்னார்.
தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவர் இடையிலிருந்த வாளை உருவி தனக்கு எதிரில் வைத்து விட்டு கிண்ணத்தில் வந்த சோற்றினை வெட்டுக் குச்சியால் (சாப்ஸ்டிக்) சாப்பிட ஆரம்பித்தார்.
தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவர் இடையிலிருந்த வாளை உருவி தனக்கு எதிரில் வைத்து விட்டு கிண்ணத்தில் வந்த சோற்றினை வெட்டுக் குச்சியால் (சாப்ஸ்டிக்) சாப்பிட ஆரம்பித்தார்.
விஷயம் அறிந்த ஒன்பது திருடர்களும் ஜென் ஆசிரியர் சாப்பிடும் உணவகத்திற்கு வந்து யாருக்கும் தெரியாமல் பின்புறம் மறைந்திருந்து நோட்டமிட்டனர். குருவுக்கு அது தெரிந்துவிட்டது.
அப்போது அவர் தலைக்கு மேல் ஈக்கள் பறந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு முறையும் ஜென் குரு தன்னுடைய சாப்ஸ்டிக்கினை உயர்த்தி மேலே பறந்து கொண்டிருந்த ஈயினை அடித்தார், பார்க்காமலே. ஒவ்வொரு முறையும் ஒரு ஈ செத்து விழுந்தது. ஒரு முறை கூட குறி தவறவே இல்லை.
ஒன்பது முறை, ஒன்பது ஈக்களை மிகத் துல்லியமாக அடித்துக் கொன்றார். பின்பு திரும்பிப் பார்த்தார்.
மறைந்திருந்த கொள்ளைக் கூட்டத் திருடர்கள் காணமல் போயிருந்தனர். அன்றைக்கு சென்றவர்கள்தான் அதன் பின்பு அந்தக் கிராமத்தின் பக்கமே அவர்களை யாரும் பார்க்கவில்லை!
ஜென் கதைகள் - ஜென் குருவும் ஒன்பது திருடர்களும். Read and download Zen and Nine Thieves story with pictures for kids.
ஜென் கதைகள் - ஜென் குருவும் ஒன்பது திருடர்களும். Read and download Zen and Nine Thieves story with pictures for kids.
ஜென் குருவும் ஒன்பது திருடர்களும் | Zen and Nine Thieves - ஜென் கதைகள்
Reviewed by haru
on
November 16, 2014
Rating:
No comments