vaarthaiyin valimai tamil story
வார்த்தைகளின் வலிமை!!!
Power of words
ஒரு கிராமத்தின் வழியாக ஒரு நாள் ஒரு
முனிவர் சென்று
கொண்டிருக்கையில் ஒரு பெண்
முனிவரிடம் வந்து தன் வீட்டின் அருகின் உடல்
நலமில்லாத குழந்தை ஒன்று இருக்கிறது
என்றும், அக்குழந்தையை
குணமாக்கித்தரும்படியும் முனிவரிடம் மிகப்
பணிவுடன் உதவிக் கேட்டாள்.
உடனே முனிவர் அப்பெண்ணிடம் உடல்
நலமில்லாத அக்குழந்தையை அழைத்துவரும்படிக்
கூறினார். அந்தப்பெண்ணும்
உடல்நலமில்லா அந்தக்குழந்தையை
கொண்டுவந்தாள். அந்த முனிவரும்
அக்குழந்தையை ஆசிர்வதிப்பது போன்று
பிரார்த்தனை செய்தார்.
எத்தனையோ மருந்துகள் கொடுத்தும்
குணமாகாத அந்தக்குழந்தை நீங்கள்
பிரார்த்தனை செய்வதால் குணமாகி
விடுமா என்ன? என்று கூட்டத்தில் இருந்த
ஒருவன் கூச்சலிட்டான்.
உனக்கு அது குறித்து என்ன தெரியும்? நீ
ஒரு அறிவில்லாத முட்டாள் என முனிவர்
அந்த மனிதனைப் பார்த்துக் கூறினார்.
முனிவர் சொன்ன வார்த்தையைக் கேட்டு
அந்த மனிதனுக்கு மிகவும் கோபம் வந்தது.
பலரின் முன்னிலையில் தான்
அவமானப்படுத்தப்பட்டதாக நினைத்தான்.
அவனுடைய முகம் கோபத்தால் சிவந்தது. அந்த
முனிவரைக் கடுஞ்சொற்களால்
எப்படியாவது திட்டி அவர் மனதைக்
காயப்படுத்திவிட வேண்டும் என்ற முடிவுக்கு
வந்தான்.
புன்முறுவலுடன் அவனருகில் வந்த முனிவர்,
நான் சொன்ன வார்த்தைகளால்
நீ கோபமடையவும், சூடாகவும்
முடியுமென்றால், நான் கூறும் நல்ல
வார்த்தைகள் ஏன் சிலரை குணப்படுத்த
முடியாது என்று நினைக்கிறாய்? என்று
கேட்டார்.
அவர் சொன்னதைக் கேட்டப்பிறகு அந்த
மனிதனுக்கு வார்த்தைகளின் வலிமை புரிந்தது.
நீதி : நல்லதைப் பேசினால் நிச்சயம் நல்லது
நடக்கும். நாம் பேசும் ஒவ்வொரு
வார்த்தைக்கும் வலிமை உண்டு.👍
Power of words
ஒரு கிராமத்தின் வழியாக ஒரு நாள் ஒரு
முனிவர் சென்று
கொண்டிருக்கையில் ஒரு பெண்
முனிவரிடம் வந்து தன் வீட்டின் அருகின் உடல்
நலமில்லாத குழந்தை ஒன்று இருக்கிறது
என்றும், அக்குழந்தையை
குணமாக்கித்தரும்படியும் முனிவரிடம் மிகப்
பணிவுடன் உதவிக் கேட்டாள்.
உடனே முனிவர் அப்பெண்ணிடம் உடல்
நலமில்லாத அக்குழந்தையை அழைத்துவரும்படிக்
கூறினார். அந்தப்பெண்ணும்
உடல்நலமில்லா அந்தக்குழந்தையை
கொண்டுவந்தாள். அந்த முனிவரும்
அக்குழந்தையை ஆசிர்வதிப்பது போன்று
பிரார்த்தனை செய்தார்.
எத்தனையோ மருந்துகள் கொடுத்தும்
குணமாகாத அந்தக்குழந்தை நீங்கள்
பிரார்த்தனை செய்வதால் குணமாகி
விடுமா என்ன? என்று கூட்டத்தில் இருந்த
ஒருவன் கூச்சலிட்டான்.
உனக்கு அது குறித்து என்ன தெரியும்? நீ
ஒரு அறிவில்லாத முட்டாள் என முனிவர்
அந்த மனிதனைப் பார்த்துக் கூறினார்.
முனிவர் சொன்ன வார்த்தையைக் கேட்டு
அந்த மனிதனுக்கு மிகவும் கோபம் வந்தது.
பலரின் முன்னிலையில் தான்
அவமானப்படுத்தப்பட்டதாக நினைத்தான்.
அவனுடைய முகம் கோபத்தால் சிவந்தது. அந்த
முனிவரைக் கடுஞ்சொற்களால்
எப்படியாவது திட்டி அவர் மனதைக்
காயப்படுத்திவிட வேண்டும் என்ற முடிவுக்கு
வந்தான்.
புன்முறுவலுடன் அவனருகில் வந்த முனிவர்,
நான் சொன்ன வார்த்தைகளால்
நீ கோபமடையவும், சூடாகவும்
முடியுமென்றால், நான் கூறும் நல்ல
வார்த்தைகள் ஏன் சிலரை குணப்படுத்த
முடியாது என்று நினைக்கிறாய்? என்று
கேட்டார்.
அவர் சொன்னதைக் கேட்டப்பிறகு அந்த
மனிதனுக்கு வார்த்தைகளின் வலிமை புரிந்தது.
நீதி : நல்லதைப் பேசினால் நிச்சயம் நல்லது
நடக்கும். நாம் பேசும் ஒவ்வொரு
வார்த்தைக்கும் வலிமை உண்டு.👍
vaarthaiyin valimai tamil story
Reviewed by haru
on
August 24, 2016
Rating:
No comments