aduthaa madaathipathi tamil story
அடுத்த மடாதிபதி யார்?
ஒரு ஆதீன மடாதிபதிக்கு வயதாகிவிட்டது. அதனால், தனக்கு அடுத்தபடியாக யாரை நியமிக்கலாம் என்று யோசித்தார். தனது சீடர்களுள் 3 பேரை மட்டும் தேர்வு செய்து வரவழைத்தார். அவர்களில் யார், மடாதிபதி பதவிக்கு தகுதியானவர் என்பதை உறுதி செய்ய ஒரு சோதனையும் வைத்தார்.
மூன்று சீடர்களிடமும் தலா ஒரு வாழைப்பழத்தைக் கொடுத்து, அதை யாரும் பார்க்காத இடத்தில், யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டு வருமாறு கூறினார்.
முதல் சீடன் அந்தப் பழத்தை எடுத்துக் கொண்டு பாழடைந்த கிணற்றுக்குள் இறங்கினார். யாரும் பார்க்காத இடம் அதுதான் என்று முடிவு செய்து, அங்கே வைத்து வாழைப்பழத்தை உண்டுவிட்டு திரும்பினான்.
இரண்டாவது சீடன் ஒரு பாலத்தின் அடியில் புதர் மண்டியிருந்த இடத்திற்கு சென்றான். அந்தப் புதருக்குள் அமர்ந்து கொண்டு, தனக்குக் கொடுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டுத் திரும்பினான்.
மூன்றாவது சீடன், மடாதிபதி கொடுத்த பழத்தை சாப்பிடவில்லை.
மூவரும் மீண்டும் மடாதிபதியைப் பார்க்க வந்திருந்தனர்.
முதல் இரண்டு பேரும் பழத்தை சாப்பிட்டதாக கூறினர். எங்கே அவற்றை சாப்பிட்டோம் என்பதையும் தெளிவுப்படுத்தினர்.
மூன்றாவது சீடன் பழத்தை அப்படியே கையில் வைத்திருந்ததால், "ஏன் சாப்பிடவில்லை?" என்று அவனிடம் கேட்டார் மடாதிபதி.
"குருவே! எல்லாம் வல்ல இறைவன் எல்லா இடங்களிலும் உள்ளான். அவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். வேறு, நான் எப்படி யாருக்கும் தெரியாமல் பழத்தை உண்ண முடியும்?" என்று கேட்டான்.
அவனது பதிலை கேட்டு வியந்த மடாதிபதி, "இறைவனை உணர்ந்தவன்தான் ஆன்மீகத்தை அறிந்தவன்" என்று கூறி, தனக்கு அடுத்தபடியாக அவனையே அந்த ஆதின மடாதிபதியாக தேர்வு செய்தார்.

Reviewed by haru
on
October 08, 2016
Rating:
No comments