ஆட்டுக்குட்டியின் தந்திரம்!

Ads Below The Title
மந்தையிலிருந்து  பிரிந்து போன ஒரு ஆட்டுக் குட்டியை
ஓநாய் துரத்தியது.

தப்பிக்க முடியாது என்று தீர்மானமாகத்
தெரிந்ததும், ஆட்டுக்குட்டி, ஓநாயைப் பார்த்து, “”நான்
இனித் தப்ப முடியாது என்பது எனக்குத் தெரியும்.
நான் இன்னும் சிறிது நேரம்தான் வாழப் போகிறேன்.
இறப்பதற்கு முன் என்னை மகிழ்ச்சியாகச் சிறிது நேரம் இருக்க
அனுமதிப்பாயா? சிறிது நேரம் பாட்டுப் பாடேன் நான்
ஆடுகிறேன்,” என்று கேட்டது.

ஓநாயும் அதற்குச் சம்மதித்து, தனது குழலை எடுத்து சத்தமாக
வாசித்தது; ஆட்டுக் குட்டியும் நடனமாட ஆரம்பித்தது.
ஆனால், சில நிமிடங்களுக்குள்ளேயே குழல் இசை கேட்டு,
ஆட்டு மந்தையை மேய்ப்பவர்கள் ஓடி வந்து ஓநாயை விரட்டி
அடித்தனர். ஓடிக் கொண்டே ஓநாயும், “எனக்கு இது தேவைதான்.
வேட்டையாடுவதுதானே என்னுடைய தொழில். அதை விடுத்து
குழல் ஊதியது தவறுதான்!’ என்று சொல்லி வருந்தியது.

—-
நீதி! அவரவர் செய்ய வேண்டிய தொழிலை விட்டுவிட்டு
அடுத்தவர் தொழிலை செய்வது ஆபத்து.நன்றி;சிறுவர் மலர்
ஆட்டுக்குட்டியின் தந்திரம்! ஆட்டுக்குட்டியின் தந்திரம்! Reviewed by haru on January 09, 2012 Rating: 5

No comments