பழிவாங்கல் இருவரையும் பாதிக்கும்

Ads Below The Title
ஒரு மொட்டை தலையனைக் கொசு கடித்துவிட்டது. கோபத்தில் அதைக் கொன்றுவிடும் எண்ணத்துடன் தலையில் பளேர் என்று அடித்துக்கொண்டான். கொசு சுலபமாகப் பறந்து சென்று சற்று தூரத்திலிருந்து சின்னதாகச் சிரித்தது. “ஒரு சிறிய கொசுக்கடியை உன்னால் தாங்க முடியவில்லையே! இதற்காக உன்னையே வருத்திக்கொள்கிறாயே, தலை வலிக்கிறதா” என்றது.

அதற்கு அவன் “ என்னை நானே அடித்துக்கொண்டாலும், அதற்காக என்னை நானே மன்னிக்கவும் முடியும். ஆனால் என் ரத்தத்தை ஓசியாகக் குடிக்கும் உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன். என்னிடம் மாட்டமலா போய்விடுவாய் ” என்றான்

நீதி:*பழிவாங்கல் இருவரையும் பாதிக்கும்*.
பழிவாங்கல் இருவரையும் பாதிக்கும் பழிவாங்கல் இருவரையும் பாதிக்கும் Reviewed by haru on February 22, 2012 Rating: 5

No comments