உண்மையான அன்பும் கூட ஒரு விதமான பக்தி தான்

Ads Below The Title
மூன்று நண்பர்கள் காட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள் . திடீரென ஒரு புலி வந்துவிட்டது.  ஒருவன் சொன்னான் "இன்றோடு நம் கதை முடிந்துவிடும்" என்று...! இரண்டாமவன் "நாம் ஏன் சாகவேண்டும் வாருங்கள் பகவானிடம் பிரார்த்தனை செய்வோம்" என்றான்.



மூன்றாமவன் சொன்னான் நாம் ஏன் பகவானை கஷ்டபடுத்த வேண்டும், வாருங்க மரத்தின் மீது ஏறிகொள்வோம்" என்றான்.

"இன்றோடு செத்தோம்" என்று சொன்னவனுக்கு, பகவான் இருக்கிறார் அவர் நம்மை காப்பாற்றுவார் என்ற உண்மையை அறியவில்லை.

வாருங்கள் "பகவானிடம் பிரார்தனை செய்வோம்" என்று சொன்னவன் ஞானி. பகவான் தான் படைத்தல் காத்தல் அழித்தல் எல்லாம் என்ற உணர்வு இருந்தது.

நாம் ஏன் "பகவானை கஷ்டபடுத்த வேண்டும்" என்று சொன்னவன் இருக்கிறானே..! அவனுடைய உள்ளத்தில் தான் பிரேமை உதித்திருந்தது. அன்பு தோன்றி இருந்தது.

தன்னை பெரியவனாகவும், தன் அன்புக்கு உரியவனை சிறியவனாக கருதுவது பிரேம பக்தியின் இயல்பு . தான் "நேசிப்பவனுக்கு கஷ்டம் கூடாது" என்று எச்சரிக்கையுடன் பார்த்துகொள்ளும் இயல்பு அது.

தான் அன்பு செலுத்துபவனுக்கு ஒரு "சிறு துன்பம் கூட நேர்ந்துவிடக்கூடாது" என்று கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும் என்பது அவனது விருப்பம்.

உண்மையான அன்பும் கூட ஒரு விதமான பக்தியின் அடையாளம் தான்.
உண்மையான அன்பும் கூட ஒரு விதமான பக்தி தான் உண்மையான அன்பும் கூட ஒரு விதமான பக்தி தான் Reviewed by haru on April 05, 2012 Rating: 5

No comments