குரங்கு வாங்கி கொடுத்த தண்டனை
உழைக்காமல் உண்ண வேண்டும் என்ற ஆசை பரமார்த்த குருவுக்கு ஏற்பட்டது. ஒரு குரங்கைப் பிடித்து வந்து, அதற்குப் பயிற்சி கொடுத்து எல்லா பொருள்களையும் திருடிக் கொண்டு வர கற்றுத் கொடுத்தார்கள்
"குருவே! உங்கள் வேட்டி எல்லாம் கிழிந்து விட்டது. அதனால் கட்டிக் கொள்வதற்கு நல்ல பட்டுத் துணியாகத் திருடி வரச் சொல்லுங்கள்" என்றனர் சீடர்கள்.
பரமார்த்தரும், துணி திருடி வருவதற்குக் குரங்கை தூதனிப்பினார்.
அந்நாட்டு அரண்மனைக்குள் நுழைந்தது குரங்கு....
அரண்மனைக் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்தான் அரசன். படிக்கட்டுகளில் அவனது பட்டுத் துணிகளும், வைரக் கிரீடமும் வைக்கப்பட்டிருந்தன. யாருக்கும் தெரியாமல் அவற்றைத் தூக்கிக் கொண்டது, குரங்கு.
பட்டுத் துணிகளையும், வைரக் கிரீடத்தையும் பார்த்த குருவும் சீடர்களும் வியப்பு அடைந்தனர்.
"குரங்கே! சீக்கிரமே உனக்குக் கோயில் கட்டிக் கும்பிடுகிறோம்!" என்றான் மண்டு.
பட்டு வேட்டியை குருவுக்குக் கட்டி விட்டான், மூடன். மகுடத்தை அவர் தலையில் சூட்டினான், முட்டாள்.
"இப்போது பார்த்தால் முடிசூடிய மன்னரைப் போல் இருக்கிறீர்கள்" என்று புகழ்ந்தான் மட்டி.
மீதி இருந்த வேட்டிகளை சீடர்கள் கட்டிக் கொண்டனர்.
"வாருங்கள்! இந்த அரச கோலத்திலேயே ஊர்வலம் போய் வருவோம்!" என்று புறப்பட்டார், பரமார்த்தர்.
தெருவில் இறங்கிய மறு நிமிடமே, அரச காவலாளிகள் குருவையும் சீடர்களையும் கைது செய்தனர்.
அரசனின் பொருள்களைத் திருடிய குற்றத்திற்காகப் பத்து நாள் சிறைத்தண்டனை விதக்கப்பட்டது.
"குருவே! மனிதர்களால்தான் நமக்குத் தொல்லை என்று நினைத்தோம். கேவலம் ஒரு குரங்கு கூட நமக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டதே!" என்று புலம்பினார்கள் சீடர்கள்.
குரங்கு வாங்கி கொடுத்த தண்டனை
Reviewed by haru
on
June 06, 2012
Rating:
Reviewed by haru
on
June 06, 2012
Rating:



No comments