தெனாலிராமன் கதைகள் : மறுபிறவி
தெனாலிராமன் கதைகள் : மறுபிறவி
தெனாலிராமன்கொலை செய்யப்பட்ட செய்தி ஊர் முழுவதும்தீ போல் பரவியது.அப்போதுசில அந்தணர்கள் மன்னரைச் சந்தித்தனர். நியாயமாக ஒரு பார்ப்பனரைக் கொன்றதுமிகக்கொடிய பாவமாகும்.
அவனது ஆவி தங்களுக்கும் நாட்டுக்கும்கேடு விளைவிக்கும் என்றனர். இதைக்கேட்ட மன்னர் கலங்கினார். இதற்குப்பரிகாரம் என்னவென்று மன்னர் கேட்டார். அதற்குஅந்தணர்கள் அவன் ஆவி சாந்திஅடைய
அமாவாசைஅன்று நள்ளிரவு சுடுகாட்டிற்குச் சென்று பூஜை செய்தால்நலம் என்றனர். உடனே மன்னர் ராஜகுருவை அழைத்துஅமாவாசையன்று நள்ளிரவு சுடுகாட்டில் தெனாலிராமன் ஆவிக்கு பூஜை செய்யஉத்தரவு விட்டார்.
இதைக்கேட்டராஜகுரு நடுநடுங்கினார். நடுகாட்டில் நள்ளிரவு நேரத்தில் பூஜை செய்வது என்றால்எனக்குப்பயமாக இருக்கிறது என்றார்.
அப்படியென்றால்துணைக்கு சில புரோகிதர்களையும் அழைத்துச்செல்லுங்கள் என மிகக் கண்டிப்புடன்மன்னர் கட்டளையிட்டார். மன்னர்கட்டளையை மீற முடியாத ராஜகுருபூஜைக்கு ஒத்துக்கொண்டார்.
அமாவாசைஅன்று நள்ளிரவு புரோகிதர்கள் சகிதம் சுடுகாட்டிற்குச் சென்றுபூஜை நடத்தினார்கள். ராஜகுருபூஜையின் இறுதியில் அங்கிருந்த மரத்தை மேல் நோக்கிப்பார்த்து தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்மராட்சசனே என்று பலத்த குரலில் அழைத்துஎங்களுக்கு ஒரு தீங்கும் செய்யாதே... உன் ஆன்மா சாந்தியடைய பூஜைசெய்துள்ளோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மரத்திலிருந்து ஓர் உருவம் பயங்கரசத்தத்தோடு கீழே குதித்தது.
இதைப்பார்த்தராஜகுருவும் புரோகிதர்களும் பயத்தால் நடு நடுங்கி அலறிஅடித்துக்கொண்டு அரண்மனைக்கு ஓடினார்கள்.
அப்போதுநடுநிசி நேரமாதலால் மன்னர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். இருப்பினும் மன்னரை எழுப்பினார். நடந்தவற்றைநடுக்கத்தோடு கூறினார்.
இதைக் கேட்ட மன்னர் இதற்குபரிகாரம் காண ஆழ்ந்த யோசனைசெய்தார். பின் ஒரு முடிவுக்குவந்தார்.
தெனாலிராமன்ஆவியாகிய பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்டி நாட்டிற்கு நன்மை உண்டாகச் செய்பவர்களுக்கு ஆயிரம்பொன் பரிசளிக்கப்படும் என்று பறைசாற்றி அறிவிக்கச்செய்தார்.
இதைக் கேட்ட நாட்டு மக்கள்யாரும் பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்ட முன் வரவில்லை. சில நாட்களுக்குப்பின் ஒரு துறவி மன்னரைக்காணவந்தார். மன்னரும் அந்தத்துறவியிடம் தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்மராட்சசனை ஒழித்துக் கட்டும்படி வேண்டினார்.
இதைக்கேட்டதுறவியர், மன்னர் பெருமானே, கவலையைவிடுங்கள், பிரம்மராட்சசனை என்னால் முடிந்தளவு ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறேன். இது நிரந்தரமான ஏற்பாடாக இருக்காது. மீண்டும் தெனாலிராமன் உயிர் பெற்று வந்தால்தான் பிரம்மராட்சசனுடையஅட்டகாசம் சுத்தமாக குறையும் என்றார்.
அப்படியானால்தங்களால் மீண்டும் தெனாலிராமனை உயிர்ப்பிக்க முடியுமா? என வினவினார் மன்னர்.
ஓ... தாராளமாக என்னால் முடியும் என்றார்துறவு. மன்னர்மகிழ்ந்து தாங்கள் தெனாலிராமனை உயிர்ப்பித்துக்காட்டுங்கள். அதுவே எனக்குப் போதும்என்றார்.
உடனே துறவியார் தான் அணிந்திருந்த வேடத்தைக்கலைத்தார். நான்தான் தெனாலிராமன். துறவி வேடத்தில் வந்தேன்என்றார். இதையறிந்தமன்னர் மகிழ்ந்து தெனாலிராமனைக் கட்டித் தழுவிக் கொண்டார். பின் ஆயிரம் பொன் பரிசளித்தார்.
தெனாலிராமன் கதைகள் : மறுபிறவி
Reviewed by haru
on
July 20, 2012
Rating:
No comments