Ads Below The Title

தெனாலிராமன் கதைகள் : பிறந்த நாள் பரிசு

பிறந்த நாள் பரிசு

மன்னர்கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்தநாள் போல மன்னரின் பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

முதல்நாள்இரவே வீதிகள் தோறும் ஆடல்பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில்வெளிநாடுகளிலிருந்து வந்த தும்துவர்களுக்கு விருந்துஏகதடபுடலாக நடந்தது.

மறுநாள்அரச சபையில் அரசருக்கு மரியாதைசெலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்தஅரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள்அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.

பிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகுஅரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர்உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.

மற்றவர்களிடம்பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்தமன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப்பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால்அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசுஎன்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படிதெனாலிராமனிடம் கூறினார் அரசர்.

தெனாலிராமன்தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப்பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள்என்னவென்று தெரியவில்லை.

அதனால்எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில்மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது. அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், "தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாகஇருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப்போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?'' என்றுஅவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, "ராமாஇந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின்காரணம் என்ன?'' எனக் கேட்டார்.

"அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர்எப்படி இருக்க வேண்டும் என்றதத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்றுதான். மன்னராக இருப்பவர் உலகம்என்ற புளிய மரத்தில் காய்க்கும்பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப்போல இனிமையானவராக இருக்க வேண்டும்.

"அதேநேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில்ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதைவிளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக்கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!'' என்றான்.

அவையினர்கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர்கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்துதெனாலிராமனைத் தழுவி, "ராமா எனக்குச் சரியானபுத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள்விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.

"பொக்கிஷப்பணமும் பொது மக்கள் பணமும்வீணாகும்படி செய்து விட்டேன். உடனேவிசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்றுகோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனைசெய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவுசெய்யக்கூடாது,'' என உத்தரவிட்டார்.

தெனாலிராமனின்துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.

அரசர் தனக்கு வந்த பரிசுப்பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்துதெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.
தெனாலிராமன் கதைகள் : பிறந்த நாள் பரிசு தெனாலிராமன் கதைகள் : பிறந்த நாள் பரிசு Reviewed by haru on July 20, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]