சிறுவர் கதைகள் - பணம் கிடைக்கும்!
பணம் கிடைக்கும்!
ஒருமுறைசுவாமி விவேகானந்தர் இரண்டாம் முறையாக அமெரிக்கா சென்றார். அங்கு வேதாந்த பிரச்சாரப் பணிகளுக்கிடையில்அவர், அவ்வப்போது அமைதியான இடங்களுக்குச் சென்று உலாவுவது வழக்கம்.
ஒருநாள், அவர் ஹொலிஸ்டர் என்ற அமெரிக்க நண்பருடன்சென்று கொண்டிருந்தார். தூரத்தில் பரந்த வெளியில் ஒருசிறிய வண்ணக் கொடி காற்றில்அசைந்து கொண்டிருந்தது.
“அங்கேஎன்ன நடக்கிறது?'' என்று விசாரித்தார் சுவாமிஜி.
“அங்குஒரு விளையாட்டுப் போட்டி நடந்து கொண்டிருந்தது. தரையில் இருந்த ஒரு குழியில்பந்தைச் சரியாக வீசியெறிய வேண்டும். இந்த விளையாட்டில் திறமை சாலிகள் கூடதோற்றுப் போவதுண்டு. குழியில் விழும் வகையில் சரியாகப்பந்து வீசும் சிறந்த வீரர்களுக்குநான்கு முறை வாய்ப்பளிக்கப்படும். ஆரம்ப நிலையில்இருப்பவர்களுக்கு ஏழெட்டு முறை பந்துவீசுவதற்கு வாய்ப்பு கொடுப்பர்,'' என்றார் ஹொலிஸ்டர்.
அதைக் கேட்ட சுவாமிஜி, “நான்ஒருமுறை பந்து வீசி வெற்றிபெறுகிறேன்,'' என்றார்.
ஹொலிஸ்டர்சிரித்தபடி, “உங்களால் முடியாது சுவாமிஜி!'' என்று மறுத்துக் கூறினார்.
சுவாமிஜிதம்மால் முடியும் என்று உறுதியாக சொன்னார்.
இருவரும்பந்தயம் கட்டினர்.
அப்போதுஅங்கே சுவாமிஜியின் மற்றொரு நண்பர் வந்தார். அவர் இந்தப் போட்டி, பந்தயம்பற்றி கேட்டறிந்தார்.
மெல்லியகுரலில் அவர் சுவாமிஜியிடம், “சுவாமிஜி, உங்களால் நிச்சயமாக இதில் வெற்றி பெறமுடியாது. மிகவும் சிறந்த விளையாட்டுவீரர்களே ஒரே தடவையில் பந்துவீசி வென்றதில்லை,'' என்று தெரிவித்தார்.
சுவாமிஜிபுன்னகை தவழ, நண்பர்களின் முன்னிலையில்பந்தை எடுத்தார்.
சட்டையைக் கைக்கு மேலே தூக்கிவிட்டுக்கொண்டார். குழிக்கு மேல் அசைந்து கொண்டிருந்தகொடியை உற்றுப் பார்த்து துல்லியமாகப்பந்தை வீசினார்.
என்ன ஆச்சரியம்! பந்து சரியாகக் குழியில்போய் விழுந்தது!
உடனிருந்தஅமெரிக்க நண்பர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.
அவர்களில்ஒருவர் சுவாமிஜியிடம், “நீங்கள் வெற்றி பெறுவதற்குஉங்களுடைய யோக சக்தி பயன்பட்டதா?'' என்று வினவினார்.
“நான் அற்பமான விஷயங்களுக்கு என்யோக சக்தியைப் பயன்படுத்துவதில்லை. நான் என்ன செய்தேன்என்பதை இரண்டு வாக்கியங்களில் சொல்கிறேன். முதலில் குழியிருக்கும் தூரத்தைப் பார்வையால் அளந்து கொண்டேன். என்கை வலிமை எனக்குத் தெரியும்.
இரண்டாவது, போட்டியில் வென்றால் பந்தயப் பணம் கிடைக்கும்என்று என் மனத்திற்குக் கூறினேன். அவ்வளவுதான்,'' என்றார் சுவாமிஜி.
கேட்டவர்கள்அசந்து போயினர்.
நன்றி தினமலர்!
சிறுவர் கதைகள் - பணம் கிடைக்கும்!
Reviewed by haru
on
August 30, 2012
Rating:
No comments