Ads Below The Title

சிறுவர் கதைகள் - வீராதி வீரன்!


வீராதிவீரன்!
முன்னொருகாலத்தில் ஓர் ஊரில் பால்பாண்டிஎன்ற இளைஞன் இருந்தான். தன்குலத் தொழிலான செருப்பு தைக்கும்தொழிலைச் செய்து வந்தான்.

"ஏதேனும்வீரச் செயல் செய்ய வேண்டும். எல்லாரும் தன்னைப் பாராட்ட வேண்டும்' என்று எண்ணியபடி இருந்தான்.

கடைக்குச்சென்ற அவன் வெண்ணெய் வாங்கினான். அதை மேசையின் மேல் வைத்தான். செருப்புதைக்கத் தொடங்கினான். ஏராளமான ஈக்கள் வெண்ணெயைமொய்த்துக் கொண்டிருந்தன.

இதைப் பார்த்த அவன் கோபம்கொண்டான். செருப்பை எடுத்து வெண்ணெய் மீதுஓங்கி ஓங்கி அடித்தான். நிறையஈக்கள் இறந்தன. ஏராளமான ஈக்கள்உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன.

அவற்றைஎண்ணினான். இறந்த ஈக்களின் எண்ணிக்கைஇருநூறு இருந்தன. அடிபட்ட ஈக்களின் எண்ணிக்கைமுந்நூறு இருந்தது. தன் வீரத்தை நினைத்தஅவனுக்குப் பெருமையாக இருந்தது.

கடைக்குச்சென்ற அவன், வீரர்கள் அணியும்உடைகளை வாங்கினான். அவற்றை அணிந்து கண்ணாடியின்முன் நின்று பார்த்தான். அவனுக்கேபெருமை தாங்கவில்லை.

மாவீரனைப்போலப் பெருமிதமாக நடந்து தலை நகரத்தைஅடைந்தான். தயக்கம் ஏதும் இல்லாமல்அரசவைக்குள் நுழைந்தான்.

அரசரை வணங்கிய அவன், “என்னைப்போன்ற மாவீரன் யாருமே இருக்கமுடியாது. ஒரே நாளில் நான்இருநூறு பேரைக் கொன்றேன். முந்நூறுபேரைக் காயப்படுத்தினேன்,'' என்று பெருமை பொங்கச்சொன்னான்.

அவனை மேலும், கீழும் பார்த்தான்அரசன்.

உன்னைப்பார்த்தால் வீரனைப் போலத் தெரியவில்லையே. தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிடக்கூடாது. உன் வீரத்திற்கு ஒருசோதனை வைக்கப் போகிறேன்,'' என்றான்.

அரசே! சோதனை என்னவென்று சொல்லுங்கள். என் வீரத்தை உங்களுக்குவெளிப்படுத்துகிறேன்!''

நம் தலை நகரத்தை அடுத்துள்ளகாட்டில், கொடிய பூதம் ஒன்றுஉள்ளது. அதைக் கொல்வதற்காக எத்தனையோவீரர்கள் சென்றனர். யாருமே உயிருடன் திரும்பியதில்லை,'' என்றார் அரசர்.

அரசே! இப்படிப்பட்ட பெரிய சோதனை யைத்தான்எதிர் பார்த்தேன். என் வீரத்தைக் காட்டநல்ல வாய்ப்பு. அந்தப் பூதத்தைக் கொன்றுஅதன் தலையை எடுத்து வருகிறேன். எனக்கு என்ன பரிசு தருவீர்கள்?''

எந்த வீரனாலும் செய்ய முடியாத செயல்இது. நீ அந்த பூதத்தைக்கொன்றால் இளவரசியை உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேன்,'' என்றான்அரசன்.

பூதத்தின்தலையுடன் வருகிறேன்,'' என்று காட்டிற்குப் புறப்பட்டான்.

"அந்தபூதத்தை வாளால் வெட்டி வீழ்த்தமுடியாது. அதைக் கொல்ல என்னசெய்வது?' என்ற சிந்தித்தபடியே காட்டுக்குள்நடந்தான் பால்பாண்டி.

தன் கையிலிருந்த வெண்ணெயை உருட்டினான் அவன். அது பந்துபோல ஆனது. பார்ப்பதற்கு வெண்நிறகூழாங்கல்லைப் போலக் காட்சி தந்தது. அதைச் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டான்.

அவன் அருகே குருவி ஒன்றுபறந்து சென்றது. அதைப் பிடித்த அவன்அதையும் தன் சட்டைப் பைக்குள்வைத்துக் கொண்டான்.

அங்கிருந்தஉயரமான மரம் ஒன்றைப் பார்த்தான். அதில் ஏறி அமர்ந்து கொண்டான். இந்த வழியாகப் பூதம் வரும் என்றுகாத்திருந்தான்.

சிறிதுநேரம் சென்றது. மலை அசைந்து வருவதுபோலப் பெரிய பூதம் ஒன்றுஅங்கு வந்தது. அதன் தோற்றமேபயங்கரமாக இருந்தது. பூதத்தைப் பார்த்த அவன் நடுங்கினான்.

மூக்கைஉறிஞ்சிய அது, “ ! மனிதவாடை அடிக்கிறது. எனக்கு நல்ல விருந்துகிடைத்தது. நீ எங்கே இருக்கிறாய்?'' என்று மகிழ்ச்சியுடன் கத்தியது.

"அந்தப்பூதம் என்னைக் கண்டுபிடித்து விடும். ஏமாற்றித்தான் அதனிடமிருந்து தப்ப வேண்டும்' என்றுதன் நடுக்கத்தை மறைத்துக் கொண்டான்.

உரத்த குரலில் அவன், “! பூதமே! என்னையா தேடுகிறாய்? நான்யார் என்பது தெரியாமல் பிதற்றுகிறாயா? மாவீரனான நான் ஒரே நாளில்இருநூறு பேரைக் கொன்றேன். முந்நூறுபேர் படுகாயம் அடைந் தனர். நான்கீழே இறங்கினால் நீ தொலைந்தாய்,'' என்றுமிரட்டினான்.

"என்னைப்பார்த்ததும் நடுங்கியே பலர் செத்து இருக்கின்றனர். இவன் இவ்வளவு துணிவாகப் பேசுகிறானே. முதலில் இவன் வலிமையை அறியவேண்டும். பிறகு இவனைக் கொன்றுதின்ன வேண்டும்' என்று நினைத்தது பூதம்.

உன்னைப்பார்த்தால் வலிமை யானவனாகத் தெரியவில்லையே. உன் வலிமையைக் காட்டு பார்ப்போம்,'' என்றது.

என்ன செய்வது என்று சிந்தித்தான். தன் சட்டைப் பையிலிருந்தவெண்ணெய் உருண்டையை எடுத்தான். மரத்தில் இருந்த படியே அதைமேலே தூக்கிப் போட்டுப் போட்டு பிடித்தான்.

! பூதமே! நான் தூக்கிப்போட்டு பிடிப்பது என்ன? சரியாகச் சொல். பார்ப்போம்,''

கூழாங்கல்,'' என்றது பூதம்.

உனக்குஅறிவு உள்ளது. கூழாங்கல் என்றுசரியாகச் சொன்னாய். இப்போது என் வலிமையைப்பார்,'' என்ற அவன் அந்தஉருண்டையைத் தன் கைகளுக்குள் வைத்துஅழுத்தினான். அது தூள் தூளாகிக்கீழே விழுந்தது.

இதைப் பார்த்த பூதம் திகைத்தது. "கூழாங்கல்லைக் கைகளுக்குள் வைத்துத் தூள் ஆக்குகிறானே. நம்மால்அப்படிச் செய்ய முடியாதே. இவன்மிகுந்த வலிமையானவன் தான்' என்று நினைத்தது.

கீழே இறங்கி வா... உனக்குஇன்னும் ஒரு சோதனை வைக்கிறேன்,'' என்றது.
முட்டாள்பூதத்தை எப்படியும் ஏமாற்றி விடலாம் என்றுகீழே குதித்தான் அவன்.

அடுத்துஎன்ன சோதனை?'' என்று அதட்டுவது போலக்கேட்டான்.

உன் வலிமையைக் காட்டிவிட்டாய். என் வலிமையைப் பார்,'' என்றது பூதம்.
கீழே கிடந்த கல் ஒன்றைஎடுத்தது. அந்தக் கல்லைத் தலைக்குமேலே வானத்தை நோக்கி வீசியது. மேலே மேலே சென்ற அந்தக்கல் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தது. அரைமணி நேரம் கழித்துக்கீழே விழுந்தது.

எப்படிஎன் வலிமை? இதே போலக்கல்லை எறிந்து உன் வலிமையைக்காட்டு,'' என்றது.

நான் கல்லை மேலே வீசினால்கீழே விழவே விழாது. வானத்தைக்கிழித்துக் கொண்டு சென்று விடும். நீயே பார்,'' என்ற அவன்தன் பையிலிருந்த குருவியை எடுத்தான். அதை வானத்தில் எறிந்தான். அந்தக் குருவி பறந்து சென்றது.

உண்மையைஉணராத பூதம் கல் கீழேவிழும் என்று காத்திருந்தது. நீண்டநேரமாயிற்று.

"! இவன் என்னை  விட வலிமைமிகுந்தவனாக உள்ளான். இவன் வீசிய கல்கீழே விழவே இல்லையே... கவனமாகஇல்லாவிட்டால் இவன் என்னைக் கொன்றுவிடுவான். இனிமையாகப் பேசி இவனை ஏமாற்றவேண்டும்' என்று நினைத்தது.

என் காட்டிற்கு வந்துள்ள நீ என் விருந்தினர். என் வீட்டில் விருந்து சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும்,'' என்றுஅன்புடன் அழைத்தது பூதம்.


பூதத்துடன்சென்ற அவன் காட்டிற்கு நடுவேஇருந்த அதன் வீட்டை அடைந்தான்.

அவனைப்பார்த்து பூதம், “சமையல் செய்யவிறகு இல்லை. விறகு கொண்டுவா...'' என்றது.

"தன்னால்நிறைய விறகுகளைத் தூக்கி வர முடியாது. வலிமை இல்லாதவன் என்பது பூதத்திற்குத் தெரிந்துவிடும்... என்ன செய்வது' என்றுசிந்தித்தான்.
வானளாவஉயர்ந்திருந்த ஒரு பெரிய மரத்தைஅதனிடம் காட்டினான்.

பூதமே! சமையலுக்கு இந்த மரம் போதுமாஎன்று சொல். ஒரு நொடிக்குள்அந்த மரத்தை இழுத்து வருகிறேன்,'' என்றான்.

அந்த பெரிய மரத்தைப் பார்த்ததுபூதம். அது வீட்டிற்குள் வந்தால்வீடே இடிந்து விழும் என்றுநினைத்தது. அவன் வலிமையை நினைத்துநடுங்கியது.

நீ ஓய்வு எடுத்துக் கொள். நான் சென்று விறகு கொண்டுவருகிறேன்,'' என்று புறப்பட்டது. சிறிதுநேரம் சென்றது. விறகுக் கட்டைகளைத் தோளில்சுமந்தபடி அங்கு வந்தது பூதம்.


சமையல்அறையிலிருந்து பெரிய பாத்திரம் ஒன்றைஅவனிடம் காட்டியது.

சமைப்பதற்குத்தண்ணீர் வேண்டும். கிணற்றுக்குச் சென்று இந்தப் பாத்திரத்தில்தண்ணீர் கொண்டுவா,'' என்றது.

அவ்வளவுபெரிய பாத்திரத்தைத் தன்னால் தூக்க முடியாதுஎன்பதை உணர்ந்தான் அவன்.

இந்தச்சிறிய பாத்திரத்தை நான் தூக்கிச் செல்வதா? என் மதிப்பு என்ன ஆகும்? உறுதியான நீண்ட கயிறு ஒன்றைத்தா. கிணற்றை இங்கேயே இழுத்துவருகிறேன். தேவையான தண்ணீரை நீயேஎடுத்துக் கொள்ளலாம்,'' என்றான் அவன்.

"கிணற்றையேஇழுத்து வருகிறேன் என்கிறானே... இவனிடம் நான் சிக்கிக்கொண்டேனே' என்று கலங்கியது பூதம்.

நீ தண்ணீர் கொண்டு வரவேண்டாம். நானே கொண்டு வருகிறேன்,' என்றது.
சமையல்முடிந்தது. பூதமும், அவனும் சாப்பிட்டனர். அங்கிருந்தகட்டிலில் அவன் படுத்து கொண்டான். இன்னொரு கட்டிலில் பூதம் படுத்தது.

பூதம் என்னைக் கொல்ல முயற்சிசெய்யும். எப்படித் தப்பிப்பது என்று தூங்காமலேயே விழித்துஇருந்தான். குறட்டை விடுவது அவனுக்குக்கேட்டது. கட்டிலிலிருந்து இறங்கினான்.

பூசணிக்காய்ஒன்றை தன் கட்டிலில் வைத்தான். அதன் மேல் போர்வையைப் போட்டுமூடினான். பிறகு, அந்தக் கட்டிலின்அடியில் படுத்துக் கொண்டான்.

நள்ளிரவுநேரம் வந்தது... தூக்கம் கலைந்த பூதம்கட்டிலை விட்டு இறங்கியது.  
இரும்புக்கடப்பாரையைத் தூக்கியது. கட்டிலில் படுத்திருந்த அவன்  மண்டையில் ஓங்கிஅடித்தது. போர்வைக்குள் இருந்த பூசணிக்காய் உடைந்துசிதறியது.

அவன் இறந்து விட்டான் என்றுமகிழ்ந்தது பூதம். மீண்டும் படுத்தஅது குறட்டை விடத் தொடங்கியது.

கட்டிலின்கீழே படுத்திருந்த அவன் எழுந்தான். உடைந்துசிதறிய பூசணி துண்டுகளை எடுத்துவெளியே வீசினான். கட்டிலில் படுத்துத் தூங்கத் தொடங்கினான்.

பொழுதுவிடிந்தது. விழித்த பூதம் அவன்உயிருடன் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தது.

கட்டிலிலிருந்துஎழுந்த அவன், “பூதமே! நீநன்றாகத் தூங்கினாயா? நள்ளிரவில் எனக்குச் சிறிது தூக்கம் கெட்டது. கொசு ஒன்று என் காதில்கடித்ததைப் போல இருந்தது,'' என்றான்.

"என்வலிமை முழுமையும் பயன்படுத்திக் கடப்பாரையால் அடித்தேனே... யாராக இருந்தாலும் மண்டைநொறுங்கி இறந்திருப்பார் களே. இவனோ கொசுகடித்தது போல இருந்தது என்கிறானே. என்ன செய்வேன்,' என்று தவித்தது பூதம்.

அதை எப்படிக் கொல்வது என்று சிந்தித்தான். நல்ல வழி ஒன்று அவனுக்குத்தோன்றியது.

பூதமே! நமக்குள் இன்னொரு போட்டி வைத்தால்என்ன?''

என்ன போட்டி?''

ஒரு பெரிய பாத்திரத்தில் கஞ்சிவை. அதில் பாதியை நான்அப்படியே குடிக்கிறேன். சிறிதும் மென்று தின்ன மாட்டேன். என்னைப் போல உன்னால் மென்றுதின்னாமல் குடிக்க முடியுமா?''

மெல்லாமல்என்னாலும் கஞ்சியைக் குடிக்க முடியும். ஆனால், அப்படிக் குடித்ததைக் கண்டுபிடிக்க வழி இல்லையே... வயிற்றில்இறங்கிப் பார்க்க முடியுமா?''

பூதமே! நான் மென்று தின்றேனா இல்லையாஎன்பதை உன்னால் பார்க்க முடியும். நான் கஞ்சியைக் குடித்ததும் என் வயிற்றைக் கிழித்துக்காட்டுகிறேன். நீயே பார்,'' என்றான்அவன்.

நீ அப்படிச் செய்தால் நானும் அப்படியே செய்துகாட்டுகிறேன். சிறிது நேரம் பொறுத்திரு. நான் கஞ்சி சமைத்து எடுத்துவருகிறேன்,'' என்ற பூதம் சமையல்அறைக்குச் சென்றது.

உடனே அவன் பெரிய சாக்குப்பையை எடுத்தான். அதைத் தன் வயிற்றில்கட்டிக் கொண்டான். அதன் வாய்ப் பகுதிதன் தொண்டைக்கு நேராக இருக்குமாறு வைத்தான். உள்ளே சாக்கு இருப்பது தெரியாதவண்ணம் மேலே சட்டையை அணிந்துக்கொண்டான்.

கஞ்சிவைத்தாயிற்று. வா குடிக்கலாம்,'' என்றுஅவனை அழைத்தது பூதம்.

கஞ்சிப்பாத்திரத்தைத் தூக்கினான். தன் வாய்க்கு அருகேவைத்தான். குடிப்பது போல நடித்த அவன்கஞ்சியைச் சாக்குப் பைக்குள் ஊற்றினான்.

சூழ்ச்சியைஅறியாத பூதம் அவன் குடிப்பதாகவேநினைத்தது.

ஏப்பம்விட்ட அவன், “என் பங்குக்கஞ்சியைக் குடித்து விட்டேன். வயிற்றைக் கிழித்துக் காட்டப் போகிறேன். அங்கேஅரிசிக் கஞ்சி அப்படியே இருக்கும். நான் சிறிதும் மெல்லவில்லை என்பதை நீ பார்க்கலாம்,'' என்றான்.

கத்தி ஒன்றை எடுத்தான் அவன். வயிற்றைக் கிழிப்பது போல நடித்து சாக்குப்பையைக் கிழித்தான். வயிற்றிலிருந்து கஞ்சி கீழே கொட்டியது.

அதைப் பார்த்த முட்டாள் பூதம்உன்னைப் போல நானும் கஞ்சியைமெல்லாமல் குடிக்கிறேன். பிறகு வயிற்றைக் கிழித்துக்காட்டுகிறேன்,'' என்றது.

கஞ்சி இருந்த பாத்திரத்தை எடுத்தது. அப்படியே முழுவதையும் குடித்தது.

நானும்உன்னைப் போல எதையும் மெல்லவில்லை... நீயே பார்,'' என்ற அதுகத்தியை எடுத்து, தன் வயிற்றில் குத்திக்கிழித்தது.

வயிறு கிழிந்ததால் ரத்தம் கொட்டியது. துடிதுடித்துஅங்கேயே இறந்தது பூதம்.

வெற்றிவீரனாக திரும்பிய பால்பாண்டியை, அரசன் சிறப்பாக வரவேற்றான்.

ஒரு நல்ல நாளில் பால்பாண்டிக்கும், இளவரசிக்கும் திருமணம் நடந்தது.

-நன்றி தினமலர்!
சிறுவர் கதைகள் - வீராதி வீரன்! சிறுவர் கதைகள் - வீராதி வீரன்! Reviewed by haru on August 30, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]