Ads Below The Title

சிறுவர் நீதிக்கதைகள் - நேர்மை!

நேர்மை!
மரியாதைராமன் வசித்து வந்த ஊரில்சோமன் என்ற ஒரு பணக்காரன்இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர்பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியானகூலி கொடுக்கமாட்டார்.

ஒரு முறை சோமன் தன்தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில்விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம்ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டுவழியாக வீட்டுக்கும் வரும் போது தனதுபணப்பையைத் தொலைத்துவிட்டார்.

வீட்டுக்குவந்ததும் வண்டியில் பணப்பையை தேடி பார்த்து கிடைக்காமல்புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டிவந்தவர் முதல் அனைவரையும் கேட்டுபார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்றுதெரியாமல் விழித்தார். அப்போ அவரது மனைவியார்உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன்என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்துகொடுப்பாங்க" என்றார்.

ஆகா இது நல்ல திட்டமாகஇருக்கிறதே என்று நினைத்து அடுத்தநாளே ஊர் முழுவதும் தண்டோராபோட்டு சொல்லிவிட்டார். ஊர் மக்களும் பணப்பைகிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படிதேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் நடந்து ஒருவாரத்திற்கு பின்பு அருகில் இருந்தஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர்வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாகஇருந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால்முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.

அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடிநீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்யமுடியவில்லை, வேறுதொழில் செய்யவோ தன்னிடம் பணமும்அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்துஊருக்கு சென்று ஏதாவது வேலைசெய்து, சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்கநினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப்பாதையில்இருந்த அம்மன் கோயிலுக்கு போய்வேண்டிக் கொண்டார்.

அப்படிகாட்டுவழியில் போகும் போது அங்கேஒரு புறா அடிப்பட்டு கீழேகிடந்தது, அதை பார்த்து இரக்கப்பட்டபூபாலன் அந்த புறாவை தூக்கிக்கொண்டு அருகில் இருந்த குளத்திற்குகொண்டு சென்று தண்ணீரை எடுத்துஅந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர்அந்த புறாவை அருகில் இருந்தமரக்கிழையில் வைத்துவிட்டு வந்தார்.  

அவர் அப்படி வரும்போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதைகண்டார், அது ஒரு பை. அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன்பணப்பையை விட்டு விட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிடவேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.

அப்போ ஊருக்குள் சென்ற போது அங்கேஇருந்த கடையில் விசாரித்த போதுகடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்கஇதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.

உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடிபிடித்து சென்று பணப்பை கிடைத்தவிபரத்தை சொன்னார், சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்த பணப்பையைவாங்கிக் கொண்டார், அதே நேரம் அவரதுகெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்து விட்டது, பணமும் சரியாக இருக்குது, இப்போஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும், சன்மானம்கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்றுயோசித்தார் சோமன்.

கெட்ட மனம் கொண்ட சோமன்பூபாலனைப் பார்த்துநீ என்னை ஏமாற்றப்பார்க்கிறாய், நான் என்னுடைய பையில்வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை, மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மாவிடமாட்டேன்என்று கத்தினான்.

பூபாலனுக்குஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னதுபோல் வைர மோதிரம் இருந்துதொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே, இவரிடம் சன்மானம் வாங்குவதை விட பிரச்சனையில் இருந்துதப்பிக்கலாம் என்று யோசித்தார்.

சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம்செய்தார், பூபாலன் பணப்பை கொண்டுவந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல்சோமன் அப்படி என்னத்தான் பரிசுகொடுக்கப் போறான் என்று பார்ப்போம்என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்தஇடத்தில் பூபாலன் குற்றவாளி போல்நிற்பதை கண்ட ஊரார் சோமனைசும்மா விடக்கூடாது, இந்த பிரச்சனையை மரியாதைராமனிடம் தான் கொண்டு சென்றுதீர்ப்பு கேட்க வேண்டும் என்றுசொன்னார்கள்.

சிறிதுநேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால்போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையும், அதில் இருந்த வைர மோதிரம்தொலைத்த கதையையும், பூபாலன் தான் பணப்பைகண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.

ஏற்கனவேசோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதைராமனுக்கு தெரியும், அப்போ தண்டோரா போடும்போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும்தெரிந்தது தான்.

ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான்என்பதை புரிந்துக் கொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்கநினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார்சோமன் தொலைத்த பையில்பணமும், வைர மோதிரமும் இருந்ததுஎன்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போபூபாலன் கொண்டு வந்த பையில்பணம் மட்டுமே உள்ளது, ஆகஇது சோமனின் பையே இல்லை, வேற யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார்கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார்கொடுக்காதவரை நம்ம ஊர் வழக்குப்படிகிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன் கோயில்செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக்கொள்ளலாம், ஆக பூபாலன் அந்தபணத்தை தன் சொந்த உபயோகத்துவைத்துக் கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும்வைர மோதிரம் கொண்ட பையைகண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்.

மரியாதைராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனதுபோல் ஆகிவிட்டது. பூபாலன் கிடைத்த பணத்தில்10 சதவிதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்குகொண்டு சென்று தொழில் செய்துநலமாக வாழ்ந்து வந்தார்.

சிறுவர் நீதிக்கதைகள் - நேர்மை! சிறுவர் நீதிக்கதைகள் - நேர்மை! Reviewed by haru on August 08, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]