Ads Below The Title

சிறுவர் நீதிக்கதைகள் - உண்மையைச் சொல்கிறேன்!

உண்மையைச்சொல்கிறேன்!

வெகு காலத்துக்கு முன் பழமுதிர் சோலைஎன்ற நாட்டை மன்னன் பழவர்த்தன்ஆண்டு வந்தார். அவர் நீதி நெறிதவறாதவர்; வாய்மை நிரம்பியவர்; உண்மைபேசுபவர். தன்னைப் போலவே தன்குடிமக்களும் இருக்க வேண்டும் என்றுவிரும்புபவர். அவருக்கு திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தைகள்இல்லை.

தனக்குபின் தன் நாட்டை ஆளத்தக்க வாரிசுகள் இல்லாததால், தன் நாட்டு மக்களில்நீதியும், நேர்மையும் தவறாத உண்மை யானஒரு இளைஞனைக் கண்டுபிடித்து, அவனை மன்னனாக்க வேண்டும்என்று விரும்பினார்.
இதற்காகயாருடைய ஆலோசனையையும் நாடவில்லை. அவரே மிகச் சிறந்தஅறிவாளியாக இருந்த படியினால், பலநாட்கள் யோசித்து ஒரு முடிவு செய்தார்.

நாட்டில்உள்ள வீரம் மிக்க இளைஞர்களை அழைத்து வில் போட்டிநடத்தினார். அதில் வென்றவர்களை அழைத்து, வாள் போட்டி நடத்தி பரிசீலனைசெய்தார். அதன்பின், வாய் மொழிக் கேள்விகள், சமயோசிதமான கேள்விகள் என்று ராணுவத்துக்கு ஆள்எடுப்பதைப் போல அவர்களைச் சோதித்தார்.

கடைசியாக, பத்து இளைஞர்கள் தேறினர். அவர்களை மன்னர் அழைத்து, அவர்கள் அனைவரிடமும் தனித்தனியாக ஒரு செடியின் விதையைக்கொடுத்தார்.

"இந்தவிதையை ஒரு தொட்டியில் போட்டுவளர்த்து, கவனமுடன் கண்காணித்து,  ஆறுமாதம் சென்ற பிறகு, வளர்த்தசெடியுடன் என் முன் வரவேண்டும். இதுதான் நான் உங்களுக்குவைக்கக்கூடிய இறுதி கட்டச் சோதனை,'' என்றார்.

பத்துப்பேரும் அதனை வாங்கிக் கொண்டனர். அதில், சாந்தனு என்ற வாலிபன்ஒருவனும் இருந்தான். எல்லாரும் மன்னர் சொன்னபடி அந்தவிதையைத் தொட்டியில் போட்டுச் சிறந்த உரங் களையும், எருவையும் இட்டு வளர்க்க ஆரம்பித்தனர்.

சாந்தனுவும்அப்படியே செய்தான். ஆனால், என்ன காரணத்தினாலோஅவனது விதை முளைத்துச் செடியாகவில்லை. மற்றவர்களின் வீட்டுக்குப் போய் அவர்கள் செடிவளர்ந்திருக்கிறதா என்று அவன் கண்காணித்தான்.
என்ன ஆச்சரியம்! மற்றவர்களின் விதையானது நன்றாக முளைவிட்டு, இலைவிட்டுச் செழித்து வளர ஆரம்பித்திருந்தது.

வீட்டுக்குவந்த சாந்தனு தன்னிடமுள்ள விதைசெடியாக எல்லா விதமான முயற்சிகளையும் செய்தான். ஆனால், என்ன காரணத்தினாலோ, அந்த விதை முளைக்கவில்லை.

"முளைக்காதவிதையை ஒரு வேளை மன்னர்தனக்குத் தந்திருப் பாரோ?' என்று எண்ணினான். மறுகணமே, "ச்சே... என்ன மோசமான எண்ணம்... எல்லாருக்கும் கொடுத்தது போல தான் எனக்கும்கொடுத்தார். என் விதை முளைக்கவில்லைஎன்றால், அது என் துரதிருஷ்டம். மற்ற வர்கள் விதை எல்லாமேமுளைத் திருப்பது அவர்களுடைய அதிர்ஷ்டம்.

"ஆறுமாதம்வரை பொறுத் திருந்து பார்ப்போம்... அப்போதும் விதை முளைக்காவிட்டால், "அரசே, என்விதை மட்டும் முளைவிக்கவில்லை!' என்றுஉண்மையைக் கூறி விடுவோம். அதற்காகமன்னர், நான் சரியாக செடியைப்பராமரிக்கவில்லை என்று கருதி எனக்குத்தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம்!' என்றுகருதினான்.
ஆறு மாதம் சென்றன.

வெற்றிப்பெருமிதத்துடன் மீதியுள்ள ஒன்பது பேரும் தங்கள்கையில் தொட்டியை ஏந்தி வந்தனர். அதில்இரண்டடி நீளத்துக்குச் செடி வளர்ந்திருந்தது. அதுஆரோக்கியமாக இருந்தது.

மன்னர்எல்லாருடைய தொட்டி களையும் பார்த்துக்கொண்டே வந்தார். அவர் இதழ்களுக் கிடையில்புன்முறுவல் ஒன்று நெளிந்தது.சாந்தனுவிடம்வந்ததும் அவன் காலித் தொட்டியுடன்நிற்பதைக் கண்டவுடன் மன்னர் முகம் மாறியது.

நடுநடுங்கிப்போனான் சாந்தனு. அவனையே உற்றுப் பார்த்தமன்னர் அவனிடம் அதிகாரமாக கேட்டார்,

"உன்னுடையபெயர் என்ன?''

"என்பெயர் சாந்தனு அரசே! தயவுசெய்து என்னை மன்னிக்க வேண்டும். நான் ஆறு மாத காலமாகஇந்த விதையைச் செடி யாக்க எவ்வளவோபாடுபட்டேன். ஆனால், உண்மையிலேயே என்னால்அதைச் செடியாக்க முடியவில்லை. என்னை நம்புங்கள் அரசே!'' என்று மண்டியிட்டு கதறினான்.
மன்னர்கீழே குனிந்து அவனைத் தூக்கி நிறுத்தித்தன் மார்போடு அணைத்துக் கொண்டார்.

"எதிர்காலமன்னனைத் தேர்ந் தெடுக்கவே இப்போட்டிகளைவைத்தேன். அதில் வென்றவனாக இந்தசாந்தனுவை அறிவிக்கிறேன். இவன்தான் எதிர்கால மன்னன்!'' என்றார்.
இதைக் கேட்ட அனைவரும் வியப்படைந்தனர்.

முதல் மந்திரி எழுந்து, ""அரசே, தாங்கள்சொன்னபடி ஒரு செடி கூடவளர்க்கத் தெரியாத இந்த வாலிபனாஎதிர்கால மன்னன்? மன்னருடைய கட்டளைக்குக்கீழ்ப்படிந்து செடியைக் கண்ணும் கருத்துமாகப் பராமரிக்காமல்சோம்பேறித் தனமாக இருந்து விட்டு, வெறும் பூந்தொட்டியைக் காட்டிய இவனா இந்தநாட்டு மன்னன்?'' என்று கேட்டார்.

"அமைச்சரே, நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள். இவன் அவனால் ஆகக் கூடியமுயற்சிகளை எல்லாம் செய்து பார்த்தான்என்பதை நான் நம்புகிறேன். ஏன்தெரியுமா? நான் பத்து இளைஞர்களுக்கும்செடி வளர்க்கக் கொடுத்த பத்து விதைகளும்நன்றாக வேக வைக்கப்பட்டு உலர்த்தப்பட்டவிதைகள்.

"அதில்எந்தச் செடியும் முளைக்காது. என்னிடமிருந்து பரிசுகளோ, பதவியோ பெறுவதற்காக மற்றஇளைஞர்கள் வேக வைக்கப்பட்ட விதைகளைத்தூக்கி எறிந்துவிட்டு, அதற்குப் பதிலாக அதே போன்றநல்ல விதைகளை வாங்கிப் பயிரிட்டுச்செடிகளாக்கிக் கொண்டு வந்திருக்கின்றனர்.

"ஆனால்சாந்தனு அப்படிச் செய்ய வில்லை. அரசகட்டளையை ஏற்று ஆறு மாதகாலம் போராடிப் பார்த்திருக் கிறான். விதை முளைக்கவில்லை என்றதும், அதை உள்ளபடியே என்னிடம்அறிவிக்கக் காலித் தொட்டியுடன் வந்தான்.

"உண்மையைச்சொல்லும்போது என்னால் அவனுக்குத் தண்டனைஏற்பட்டால் கூட அதைத் தாங்கச்சித்தமாயிருந்திருக்கிறான்என்பதை அவன் செயல், பார்வை, பேச்சு, வார்த்தை, நடத்தை மூலம் அறிந்துகொண்டேன்.
"இப்படிநேர்மையாக நடந்து கொண்டதன் மூலமாகஅவனால் நிச்சயம் நாடு செழிக்கும்' என்றுதான்அவனை மன்னனாக அறிவித்தேன்.

மன்னரின்அறிவுக் கூர்மையை எண்ணி அனைவரும் வியந்துபாராட்டினர். அங்கிருந்த செடி வளர்த்த ஏனையஇளைஞர்கள் அரசனிடம் மன்னிப்புக் கோரினர். அரசனும் அவர்களை மன்னித்தார்.

Source : தினமலர்
சிறுவர் நீதிக்கதைகள் - உண்மையைச் சொல்கிறேன்! சிறுவர் நீதிக்கதைகள் - உண்மையைச் சொல்கிறேன்! Reviewed by haru on August 03, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]