பஞ்சதந்திர கதைகள் - முட்டாளுக்கு புத்தி சொல்வது வீண்
முட்டாளுக்குபுத்தி சொல்வது வீண்
ஒரு காட்டில் பல குரங்குகள் கூட்டமாகவசித்து வந்தன. குளிர்காலத்தில் ஒருநாள்மிகவும் கடுமையான குளிராக இருந்தது. குரங்குகளால்குளிரைத் தாங்க முடியவில்லை.
கொஞ்சம்நெருப்பு கிடைத்தால் சருகுகளைப் போட்டுத் தீமூட்டி குளிர் காயலாம் என்றுஒரு கிழக்குரங்கு கூறிற்று. நெருப்புக்கு எங்கே போவது என்றுகுரங்குகள் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு மின்மினிப் பூச்சிபளிச் பளிச் சென்று மின்னியவாறுபறந்து சென்று கொண்டிருந்தது. அதைக்கண்ட ஒரு குரங்கு அதோநெருப்பு போகிறது என்று கூறிற்று. மற்றொரு குரங்கு அந்த மின்மினிப்பூச்சியைப் பிடித்து வந்து தரையில் போட்டது.
மற்ற குரங்குகள் சுற்றிலும் கிடந்த குப்பை கூளங்களைச்சேகரித்து வந்து மின்மினிப் பூச்சிமீதுபோட்டன. பிறகு குரங்குகள் நெருப்புகொழுந்து விட்டு எரியப் போகிறதுஎன எதிர்பார்த்து சூழ்ந்து அமர்ந்து கொண்டன. ஆனால் தீஎரியும் வழியைக் காணோம்
பிறகு குரங்குகள் வாயினால் குப்பையை ஊதி நெருப்பை எரியவிடும் முயற்சியில் ஈடுபட்டன. மரத்தில் அமர்ந்து குரங்குகளின் கோமாளிக் கூட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு பறவை கலகலவென்றுசிரித்தபடி மரத்தை விட்டிறங்கி கீழேவந்து அமர்ந்தது,
பிறகு குரங்குகளை நோக்கி நண்பர்களே மின்மினிப்பூச்சியை நெருப்பு என்று எண்ணிக் கொண்டுதீ மூட்ட வீண் பிரயாசைஎடுக்கிறீர்கள். நீங்கள் என்னதான் வாயால்ஊதினாலும் மின்மினிப் பூச்சியிடமிருந்து நெருப்பு வரவே வராது. வீண்வேலையை விட்டுவிடுங்கள் என்று புத்திமதி கூறிற்று. உனக்கு ஒன்றும் தெரியாது. வாயைமூடிக்கொண்டு உன் வேலையைப் பார்என்று கூறிவிட்டு குரங்குகள் மறுபடியும் குப்பையை வாயால் ஊதித் தீஉண்டாக்க முயற்சியெடுத்தன.
பறவை, குரங்குகளின் முட்டாள்தனத்தை எண்ணிப் பரிதாபப்பட்டு திரும்பத்திரும்ப குரங்குகளுக்கு புத்திமதி கூறிக் கொண்டிருந்தது. இதனால்கோபமுற்ற குரங்குகள் பறவை மீது பாய்ந்துஅதனைப் பிடித்து தரையில் மோதிக் கொன்றுவிட்டன.
பாடம் : முட்டாளுக்குபுத்தி சொன்னால் வினைநமக்குதான்…
பஞ்சதந்திர கதைகள் - முட்டாளுக்கு புத்தி சொல்வது வீண்
Reviewed by haru
on
August 04, 2012
Rating:
No comments