சிறுவர் நீதிக்கதைகள் - திருந்திய திருடன்
திருந்திய திருடன்:
முன்னொருகாலத்தில் திருடன் ஒருவன் இருந்தான். தன் மகன் ராசப்பாவையும் திருட்டுத்தொழிலில் வல்லவனாக வளர்த்தான். திருடன் இறக்கும் நேரம்வந்தது.
“மகனே! நீ திருட்டுத் தொழிலில் மேலும் மேலும் வல்லவனாகவேண்டும். நான் சொல்வதைக் கவனமாகக்கேட்டுக் கொள். எங்கேனும் பக்திச்சொற்பொழிவு, இசை நிகழ்ச்சிகள் நடந்தால்அங்கு போகாதே. நீ அங்கேஇருக்க வேண்டிய சூழ்நிலை வந்தால்ஏதும் காதில் விழாதபடி உன்காதுகளைப் பஞ்சுகளால் அடைத்துக் கொள். இல்லையெனில் அந்தநல்ல வார்த்தைகள் உன் மனதை மாற்றமடையச்செய்துவிடும்,'' என்றான்.
“அப்படியேசெய்கிறேன்,'' என்றான் மகன்.
தந்தையின்அறியுரைப்படியே நடந்து வந்தான் ராசப்பா.
ஒரு முறை திருடிவிட்டு திரும்பிக்கொண்டிருந்தான். ஓரிடத்தில் மக்கள் கூட்டமாக இருப்பதைக்கண்டான். என்ன நடக்கிறது என்பதைஅறிவதற்காக அருகில் சென்றான்.
அங்கே மகாவீரர், ஒரு மேடையில் அமர்ந்துமக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார். தன் தந்தை சொன்னது உடனேநினைவுக்கு வந்தது. தன் இருகைகளாலும் காதுகளைப் பொத்திக் கொண்டு அங்கிருந்து நடக்கத்தொடங்கினான்.
அப்பொழுதுமுள் ஒன்று அவன் காலில்தைத்தது. குனிந்த அவன் தன்ஒரு கையால் முள்ளைப் பிடுங்கிவிட்டுமீண்டும் காதைப் பொத்திக் கொண்டான்.
“தேவர்களுக்குநிழல் விழாது. அவர்கள் கால்கள்நிலத்தில் படியாது,'' என்று மகாவீரர் பேசியதுஅவன் செவியில் விழுந்தது.
சில நாட்களில் முக்கிய திருட்டு ஒன்றைச்செய்த போது வீரர்களிடம் சிக்கிக்கொண்டான். அவன் செய்த திருட்டைஎல்லாம் அறிய வீரர்கள் அவனைஅடித்துத் துன்புறுத்தினர். கல்லுளி மங்கனான அவனோவாய் திறக்கவே இல்லை. அவனிடம் இருந்துஉண்மையை அறிய அதிகாரிகள் சூழ்ச்சிசெய்தனர்.மயக்க மருந்து தந்து அவர்கள்அவனை ஓர் அழகான பூஞ்சோலையில்கிடத்தினர். பல அழகான பெண்கள்அவனைச் சூழ்ந்து நின்றனர். மயக்கம் தெளிந்த ராசப்பாதான் இருந்த இனிய சூழலைப்பார்த்து வியப்பு அடைந்தான்.
“நான் எங்கே இருக்கிறேன்?'' என்றுஅந்தப் பெண்களைக் கேட்டான்.
அவர்களில்ஒருத்தி, “நீங்கள் இப்பொழுது தேவலோகத்தில்இருக்கிறீர்கள். இங்கே நீங்கள் என்னநினைத்தாலும் உடனே நிறைவேறும். நீங்கள்எங்களைப் போல மகிழ்ச்சியாக இருக்கலாம். நாங்கள் தேவலோக பெண்கள். இங்கேயாரும் பொய் சொல்லக் கூடாது. பொய் சொன்னால் உடனே இந்த உலகத்தைவிட்டுப் போய் விடுவர். நீங்கள்யார்? பூவுலகில் என்னென்ன செய்தீர்கள்? சொல்லுங்கள்,'' என்று இனிமையாகக் கேட்டாள்.
உடனே ராசப்பா அந்தப் பெண்களைப்பார்த்தான். அவர்கள் கால்கள் தரையில்இருப்பதையும், நிழல் விழுவதையும் பார்த்தான்.
மகாவீரர்சொன்னதைக் கேட்டது அவன் நினைவுக்குவந்தது. "இவர்கள் தேவர்கள் அல்லர்; மனிதப் பெண்கள் தான். என்னைஏமாற்ற முயற்சி செய்கின்றனர்' என்றஉண்மை அவனுக்குப் புரிந்தது.
"ஆ! மகாவீரர் பேசியதைச் சிறிது நேரம் கேட்டதாலேயேஇவர்கள் என்னை ஏமாற்றுவதைக் கண்டுபிடிக்கமுடிந்ததே... அவர் பேசுவதை நான்முழுமையாகக் கேட்டிருந்தால் எத்தனை நன்மைகள் உண்டாகிஇருக்கும்' என்று நினைத்து உள்ளம்கலங்கினான்.
அவர்களைப்பார்த்து, “நீங்கள் என்னை ஏமாற்றுகிறீர்கள். இது சொர்க்கம் அல்ல; நீங்களும் தேவர்உலகப் பெண்கள் அல்ல. எனக்குமட்டும் விடுதலை கிடைத்தால் நான்திருட்டுத் தொழிலையே செய்யமாட்டேன். மகாவீரரின் சீடனாகி அவர் அருளுரைகளைஎப்பொழுதும் கேட்டுக் கொண்டு அவர் திருவடிகளில்விழுந்து கிடப்பேன்,'' என்று உணர்ச்சியுடன் சொன்னான்.
இவனது பேச்சு அரசனின் காதுகளில்விழுந்தது. ராசப்பாவை அழைத்து விசாரித்தான் அரசன். நடந்த நிகழ்ச்சிகளை அறிந்த அரசன் அவனைவிடுதலை செய்தான். அவனும் திருட்டுத் தொழிலைவிட்டு விட்டு மகாவீரரின் சீடர்களில்ஒருவன் ஆனான்.
Source : தினமலர்
சிறுவர் நீதிக்கதைகள் - திருந்திய திருடன்
Reviewed by haru
on
August 11, 2012
Rating:
Reviewed by haru
on
August 11, 2012
Rating:


No comments