Ads Below The Title

சிறுவர் கதைகள் – லட்சுமி கடாட்சம்!

லட்சுமி கடாட்சம்!

முன்னொருகாலத்தில் மாமுனிவர் ஒருவர் காட்டில் தவம்செய்துவந்தார். சிறு வயதிலிருந்தே தவக்கோலம்பூண்டு இறைவனை தொழுது வந்ததால், அந்த காட்டில் வசித்த கொடிய மிருகங்கள்கூட அவரிடம் குழந்தைகளை போலநடந்து கொண்டன.

ஒரு நாள் அவர் முன்அழகிய பெண் ஒருத்தி தோன்றினாள். அவளது பேரழகு பிரமிக்க வைத்தது. இருப்பினும் மனம் சலனப்படாமல் அந்தஅழகியை பார்த்து, “அம்மா நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?'' என்றார்.

நான் தான் மகாலட்சுமி; என்னுடையவிதி பயனால் சில நாட்கள்உங்களுடன் வசிக்க வந்துள்ளேன். நீங்கள்என்னை உதறி தள்ளினாலும் உங்களைவிட்டு நான் போகமாட்டேன். பிரம்மன்கட்டளைப்படி நான் உங்களுடன் இருந்தாகவேண்டும்,'' என்றாள்.

மகாலட்சுமிபோகமாட்டாள் என்பதை அறிந்த முனிவர்அந்த ஒப்பந்தத்திற்கு சம்மதித்தார்.

அம்மாநீங்கள் வரும் பொழுது என்னிடம்சொல்லி கொண்டு வந்தது போலபோகும் போது சொல்லி கொண்டேபோக வேண்டும்,'' என்றார்.

லட்சுமியும்சம்மதித்தாள். அன்றிலிருந்து தன் மீது லட்சுமியின்அருள் பூரணமாக இருப்பதை அறிந்தார். அதை சோதித்து பார்க்க விரும்பினார் முனிவர். எனவே, காட்டை விட்டு பொற்குன்றம்என்ற மாநகரை அடைந்தார். அந்தஅரண்மனையின் அரசரும் மந்திரிகளும் அமர்ந்திருந்தனர்.

வேகமாகசென்ற முனிவர் தனது இடதுகாலை துõக்கி மன்னனதுகிரீடத்தை ஒரு உதை விட்டார். மறுநிமிடம், “அடி! உதை அவனைபிடி!'' என்றபடியே ஆயிரம் சேவகர்கள் முனிவரைசூழ்ந்து கொண்டனர்.

உடனே அரசன், “முனிவரை ஒன்றும்செய்யாதீர்கள். அவர் திரிகாலமும் உணர்ந்தஞானி. என் கிரீடத்தை பாருங்கள்,'' என்றான்.

கிரீடத்தில்விஷநாகம் ஒன்று படமெடுத்து கொண்டிருந்தது. உடனே எல்லாரும் மகாபுருஷரை திட்டிவிட்டோமே என்று நினைத்து வருந்தினர். அதற்குள் விஷநாகம் ஓடி மறைந்தது. உண்மையில்அது விஷ நாகமல்ல; லட்சுமிதான்நாக உருவெடுத்து முனிவரை காப்பாற்றினாள்.

அன்றிலிருந்துஅரசன் மாமுனிவருக்கு மந்திரி பதவி கொடுத்துசர்வ அதிகாரமும் கொடுத்தான். முனிவருக்கு லட்சுமி கடாட்சம் இருந்ததால்அவர் செய்ததெல்லாம் பலித்தது. முனிவரும் நாட்டை நல்ல முறையில்ஆண்டார்.

இரண்டுவருடங்கள் ஓடின. மீண்டும் ஒருநாள் தன்னுடன் லட்சுமி இருக்கிறாளா என்பதைஅறிய விரும்பினார் முனிவர். அன்றிரவு அரசனும், அரசியும் துõங்கிக் கொண்டிருந்தபள்ளியறைக்கு சென்றார். இருவரையும் துõக்கிக் கொண்டுவெளியே வந்தார்.

கண் விழித்த மன்னன் அந்தகிழவனின் தலையை வெட்டினால் என்னஎன்று நினைத்து ஆத்திரம் கொண்டார். அதற்குள் பள்ளியறை கட்டிடம் இடிந்து விழுந்தது. அதைபார்த்த அரசனுக்கு மாமுனிவர் மேல் அளவிடாத பாசம்வந்தது.

முனிவரே! நீர் இல்லாவிட்டால் நாங்கள் இருவரும் இறந்திருப்போம்!'' என்றான்.

இந்த விஷயத்தை அறிந்த நாட்டு மக்கள், முனிவரை தெய்வமாகவே பாவித்தனர்.

ஒரு நாள் அரசன் தன்னுடையமுக்கிய பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாட சென்றான். ஒரு மானை துரத்திகொண்டு ஓடினார் மன்னன். அவன்பின்னாலே சென்றார் முனிவர்.

மான் தப்பிவிட்டது. களைத்து போன மன்னனும், முனிவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்தனர். முனிவரது மடியில் சற்று நேரம்இளைப்பாற விரும்பினார் மன்னர். முனிவரும் சம்மதித்தார்.

அப்பொழுதுமேலே பார்த்தார் முனிவர். அந்த மரத்தின் கிளைமேல் கருடன் ஒன்று பெரியநாகத்தை துõக்கி வந்துதின்பதற்காக உட்கார்ந்திருந்தது. அந்த மரத்தின் கிளைஅரசனுடைய மூக்குக்கு நேராக இருந்தது.

மாமுனிவருக்குஎன்ன செய்வதென்றே தெரியவில்லை. எழுந்து கருடனை விரட்டினால்மன்னனது துõக்கம் கெட்டுவிடும். நாகத்தினால் அரசனுக்கு தீங்கில்லை என நினைத்து விட்டுவிட்டார். கருடன் பாம்பை கொத்தியது. பாம்புதன் விஷத்தை கக்கவே அதுமன்னனின் கழுத்தில் வந்து விழுந்தது.

கால சர்பத்தின் விஷம் என்ன பண்ணுமோஎன பயந்த முனிவர், தன்கத்தியால் அதை வழிக்க நினைத்தார். அப்பொழுது லட்சுமி, “நான் தங்கøள்விட்டு போக வேண்டிய நேரம்வந்துவிட்டது; செல்கிறேன்,'' என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டாள்.

கத்தியைஎடுத்து அரசரின் கழுத்தில் வைத்தார்முனிவர். உடனே கண் விழித்தான்அரசன், “இப்படிப்பட்ட பாதக செயலை நீங்கள்செய்வீர்கள் என்று நான் சிறிதும்நினைக்கவில்லை,'' என்று கோபப்பட்டான்.

முனிவரோ, “மன்னா நான் உன்னை கொல்லவேண்டுமென்றால்எப்பொழுதோ கொன்றிருக்கலாம். சற்று தலையை துõக்கிப் பாருங்கள். கருடன்வாயிலிருக்கும் பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி விஷம்உங்கள் கழுத்தில் விழுந்துவிட்டது. அதை எடுக்கவே இப்படிசெய்தேன். இனி நான் உங்களுடன்இருக்கமாட்டேன். லட்சுமி கடாட்சம் என்னைவிட்டு போய்விட்டது,'' என்றார்.

மன்னன்மிகவும் மன்னிப்பு கேட்டான். தாங்கள் என்னை விட்டுசெல்லக்கூடாது என கூறினான்.

நடந்தவைகளைஎல்லாம் கூறிய முனிவர், “எனக்குஎன்ன இருக்கிறது. நான் ஒரு முனிவர். லட்சுமி என்னுடன் இருந்தவரையில் எனக்கு ஆபத்து இல்லை. இனி நான் தங்களுடன் இருப்பதில்பயனில்லை. விடை கொடுங்கள் நான்காட்டிற்கு செல்கிறேன்,'' என்றார்.

மன்னன்எவ்வளவோ கெஞ்சியும் முனிவர் அவருடன் இருக்கசம்மதிக்கவில்லை. தன்னை விட்டு லட்சுமிபோன பிறகு மன்னனுடன் இருப்பதுதனக்கு மிகுந்த ஆபத்தை தரும்என்பதை உணர்ந்து அரசனிடம் விடைபெற்று காட்டிற்கு சென்றார் முனிவர்.
சிறுவர் கதைகள் – லட்சுமி கடாட்சம்! சிறுவர் கதைகள் – லட்சுமி கடாட்சம்! Reviewed by haru on August 15, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]