சிறுவர் நீதிக்கதைகள் – ஆட்டைக் காணோம்!
ஆட்டைக் காணோம்!
முன்னொருகாலத்தில் கோணங்கி பட்டினம் என்றஊரில் மந்தை மேய்ப்பன் ஒருவன்வாழ்ந்து வந்தான். அவனிடம் நிறைய ஆடுகள்இருந்தன. அவற்றை அவனால் காவல்காக்கமுடியவில்லை. தினமும் ஒவ்வொரு ஆட்டைஓநாய்கள் கவர்ந்து சென்றன.
இதனால்என்ன செய்வது என்று தெரியாமல்வேட்டை நாய் இரண்டை வாங்கிகாவலுக்கு வைத்தான். அவற்றிற்கு தினமும் மாமிச உணவுகொடுக்க வேண்டுமே.. இதற்காக தினமும் இரண்டுஎலிகளை அடித்து உணவாக கொடுத்தான்.
அப்படிஇருந்தும் தினமும் ஒரு ஆடுகாணாமல் போனது. இதனால் மேய்ப்பனுக்குஎன்ன செய்வதென்றே தெரியவில்லை. வேட்டை நாய்கள் மீதுகோபம் கோபமாக வந்தது..
ஒரு நாள் என்ன நடக்கிறதுஎன்பதை மறைந்திருந்து கவனித்தான். அப்பொழுது ஓநாய் ஒன்று வந்துஆட்டை கொன்று இழுத்து சென்றது. அது சாப்பிட்டுவிட்டு போடும் மீதி ஆட்டைஇந்த வேட்டை நாய்கள் இன்பமாகதின்றன. இப்படி நடப்பதை கண்டஅவன் திடுக்கிட்டான். மிகவும் சோகமாக உட்கார்ந்தான்.
அப்பொழுதுஅந்த வழியாக முனிவர் ஒருவர்வந்தார். அவரிடம் தன் கஷ்டத்தைசொல்லி அழுதான் மந்தை மேய்ப்பவன்.
அதற்குமுனிவர், “மகனே யாருக்கும் வயிறாரஉணவு கொடுத்தால் தான் வேலை செய்வர். நீயோ இரண்டு எலிகளை மாத்திரம்நாய்களுக்கு உணவாக கொடுக்கிறாய். இதுஅவைகளுக்கு பத்தாது.
“நீ அவ்வப்போது உன் வீட்டிற்காக ஆட்டைவெட்டுகிறாய் அல்லவா? அந்த மாமிசத்திலிருந்துசிறு துண்டுகளையாவது எடுத்து இந்த நாய்களுக்குகொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் அவைகள்உனக்காக நன்கு வேலை செய்யும்,'' என்றார்.
அதன்படியேசெய்வதாக ஒப்பு கொண்டான் மேய்ப்பன். அப்படியே செய்து வந்தான். அதற்குநல்ல பலன் கிடைத்தது. அன்றிலிருந்துமந்தையில் ஆடுகள் குறையவில்லை.
மறுநாள்ஓநாய்கள் ஆட்டை திண்ண வந்தன. அதை கண்ட வேட்டை நாய்கள்அவைகளை விரட்டின. “என்ன இத்தனை நாட்களாகநாங்கள் விட்டு சென்ற மாமிசத்தைதின்றீர்கள். இப்பொழுது உங்களுக்கு என்னவாயிற்று?'' என்றன.
“உங்களதுஎச்சில் மாமிசம் எங்களுக்கு வேண்டாம். எங்கள் தலைவர் வயிறு நிறையஎங்களுக்கு மாமிசம் கொடுக்கிறார்,'' என்றன.
அவற்றைமீறி ஓநாய்கள் மந்தைக்குள் நுழைந்தன. அவைகள் மீது பாய்ந்துகிழித்து கொன்றன வேட்டை நாய்கள். மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் மந்தை மேய்ப்பன்.
நீதி : நம்மிடம் வேலை செய்பவர்களுக்கு நாம்வயிறு நிறைய சாப்பாடு கொடுக்கவேண்டும். தகுதியான சம்பளம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு உண்மையாக உழைப்பர்.
சிறுவர் நீதிக்கதைகள் – ஆட்டைக் காணோம்!
Reviewed by haru
on
August 15, 2012
Rating:
Reviewed by haru
on
August 15, 2012
Rating:



No comments