புதுச்செருப்பு! - முல்லா கதைகள் | Mulla Stories in Tamil
புதுச்செருப்பு!
ஒரு நாள் முல்லா, தான்வாங்கிய புத்தம் புதுக் காலணிகளைஅணிந்து பெருமிதத்தோடு தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தார். ஆலமரத்து நிழலில் ஒரு சிறுவர்கூட்டம் விளையாடிக் கொண்டிருந்தது.
அவர்களில் ஒருவன் முல்லா அணிந்துவந்த புதிய செருப்புக்களைப் பார்த்துவிட்டான். "டேய் நம்ம முல்லாஜிபோட்டு வரும் செருப்பைப் பாருங்கஎவ்வளவு அழகு'' என்றான்.
அவர்களில் ஒருவன் முல்லா அணிந்துவந்த புதிய செருப்புக்களைப் பார்த்துவிட்டான். "டேய் நம்ம முல்லாஜிபோட்டு வரும் செருப்பைப் பாருங்கஎவ்வளவு அழகு'' என்றான்.
"அடேங்கப்பா! என்ன பளபளப்பு! அதில் முகம் பார்க்கலாமே. அதோடு ரசம் பூசப்பட்ட கண்ணாடிச்சில்லுகளைப் பதித்து இருக்கின்றனர். அதில்சூரிய ஒளி பட்டுத் தெறித்துவர்ண ஜாலம் காட்டுகிறது பார்'', என்று சிறுவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.
அப்போதுஒரு சிறுவன், “டேய் இந்தச் செருப்புகளைத்தந்திரமாக அவரிடமிருந்து பறித்துவிட வேண்டும். செய்யலாமா?'' என்றான்.
அப்போதுஒரு சிறுவன், “டேய் இந்தச் செருப்புகளைத்தந்திரமாக அவரிடமிருந்து பறித்துவிட வேண்டும். செய்யலாமா?'' என்றான்.
“கண்டிப்பாகசெய்யலாம்!'' என்று எல்லாச் சிறுவர்களும்ஒரே குரலில் ஆமோதித்தனர். இப்படிஇவர்கள் திட்டம் போட்டுப் பேசிமுடிப்பதற்கும், முல்லா களைப்பு தீரமர நிழலில் சற்று ஓய்வெடுக்கலாம்என்று எண்ணி அங்கு வருவதற்கும்சரியாக இருந்தது.
“வாங்கமாமா!'' என்று வரவேற்றான் ஒருவன்.
“என்னடா? பசங்களா, வரவேற்பு பலமாக இருக்கிறது,'' என்றார்முல்லா.
“ஒன்றுமில்லை!'' என்றான் ஒரு சிறுவன்.
வேறு ஒருவன் அவரைப் பார்த்துக்கிண்டலாகச் சிரித்தான்.
“என்னடா?'' என்றார் முல்லா எரிச்சலோடு.
அப்போது, கூட்டத்திலிருந்து ஒரு பொடியன் முன்னால்வந்து, “முல்லா மாமா, இந்தநோஞ்சான் பையன் சொல்கிறான், இந்தஆல மரத்தின் மீது யாராலுமே ஏறமுடியாதாம்!'' என்றான்.
“பூனை கண்ணை மூடிக் கொண்டால்பூ உலகமே இருண்டு போய்விடுமா? அவன் சோனியாக இருப்பதால்மரம் ஏற முடியாது. எனவே, யாராலும் முடியாது எனத் தவறாக முடிவுகட்டிவிட்டான்,'' என்றார் முல்லா.
“அப்படிஎன்றால் உங்களால் முடியுமா?'' என்றான் பொடியன்.
“அது இருக்கட்டும், ஏன் உங்களில் யாராவதுஒருவன் மரம் ஏறிப் பார்ப்பதுதானே,'' என்றார் முல்லா. முயன்று பார்த்துவிட்டோம், முடியவில்லை,'' என்றான்.
“அப்படியானால்விட்டுத் தள்ளுங்கள். இந்த மரத்தில் ஏறிவிடுவதால் மட்டும் பெரியதாக என்னபயன் ஏற்பட்டு விடப் போகிறது?'' என்றார்முல்லா சாதுர்யமாக.
“டேய் அவருக்கு வயதாகிப் போச்சுடா அதான் நழுவுறாருடா!'' என்றான்.
“இனிமேல்நாம் அவரை முல்லா மாமாஎன்று கூப்பிட வேண்டாம். முல்லாதாத்தா என்று கூப்பிடுவோம்,'' என்றான்பொடியன் ஒருவன்.
உடனே எல்லா சிறுவர்களும் அவரை, “தாத்தா! தாத்தா,'' என்று கூப்பிட்டுக் கேலிசெய்தனர்.
முல்லாவால்இந்த அவமானத்தைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அவர்களைப்பார்த்து, “யாருக்கு வயதாகிவிட்டது? ஹும் எனக்கா? இதைப்போல் பத்து மரங்களில் ஒரேநாளில் ஏறி இறங்குவேன் தெரியுமா?'' என்று சவால்விட்டார்.
“பத்துமரம் வேண்டாம். இந்த ஒரே மரத்தில்ஏறி இறங்குங்க. அது போதும்!'' என்றான்நோஞ்சான் சிறுவன்.
“அப்பத்தான்உங்களை முல்லா மாமா! என்றுகூப்பிடுவோம் என்றனர் சிறுவர்கள்'' அனைவரும்.
ஏதோ ஒரு திட்டத்துடன் தான்சிறுவர்கள் தன்னை உசுப்புகின்றனர் என்பதைமுல்லா புரிந்து கொண்டார்.
“இதைவிடநெட்டுக்குத்தான மரத்தில் எல்லாம் நான் ஏறிஇறங்கி விளையாடி இருக்கிறேன் தெரியுமா?'' என்றார் ஒரு சிறுவனைப்பார்த்து.
“அதெல்லாம்அந்தக் காலம், இப்போ கிழவராயிட்டீங்க!'' என்றான் அவன்.
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அவருக்கு "சுர்' என்று கோபம்வந்துவிட்டது. என்னையா கிழவன் என்கிறாய்? இப்போதே இந்த மரத்தில் என்னால்ஏறி நான் கிழவனல்ல என்றுநிரூபிக்க முடியும் என்று கத்தினார்.
“எங்கேஏறுங்களேன், பார்க்கலாம்!'' என்றனர் சிறுவர்களும் விடாப்பிடியாக.
வேறு வழி இல்லாமல், முல்லாமரம் ஏறுவதற்குத் தயாரானார். முதலில் செருப்புக்களைக் கழற்றினார். தான் கொண்டு வந்திருந்த பைக்குள்அவைகளைப் போட்டார். பையை இடுப்பில் கெட்டியாகசெருகிக் கொண்டு, கிடு கிடுஎன்று மரம் ஏறினார்.
முல்லாமரம் ஏறும்போது தனது செருப்புக்களை மரத்தின்அடியில் விட்டுச் செல்வார். அவர் மரத்தின் மீதுஏறியவுடன் செருப்புக்களை கிளப்பிச் சென்று விட வேண்டும்என்று சிறுவர்கள் திட்டமிட்டு இருந்தனர்.
முல்லாவோமுன் எச்சரிக்கையாக, மடியில் செருப்புக்களைகட்டிக் கொண்டு மரம் ஏறுகிறார். தங்கள் திட்டம் தோல்வி அடைவதைப்பார்த்து சிறுவர்கள் திட்டமிட்டனர். எனவே ஒரு சிறுவன், முல்லாஜி, மரத்தின் மீது என்ன தெருவாஇருக்கிறது, “செருப்பையும் எடுத்துக் கொண்டு ஏறுகிறீர்களே அவைகளைக்கீழே எறியுங்கள்,'' என்றான் தந்திரமாக.
“ஒரு வேளை இங்கு ஏதாவதுதெரு இருந்துவிட்டால், நான் மீண்டும் கீழேஇறங்கி வந்து அல்லவா செருப்பைஎடுத்துக் கொண்டு போக வேண்டிஇருக்கும். இரண்டு வேலை எதற்கு? அது முட்டாள் தனமல்லவா? ஆகவேதான் செருப்புக்களைக் கையோடு எடுத்து வந்துவிட்டேன்,'' என்று சொல்லியபடியே மரத்தின்மேல் கிளையில் அமர்ந்து கொண்டார்.
தங்கள் தந்திரம் பலிக்காததைஅறிந்த சிறுவர்கள், “மாமா நீங்க கிழவரல்ல! கீழே இறங்கி வாருங்கள், நீங்கள்ஜெயித்து விட்டீர்கள்,'' என்று ஏமாற்றத்தோடு குரல்கொடுத்து அவரை அழைத்தனர்.
முல்லாபுன்சிரிப்போடு, மரத்தில் இருந்து இறங்கினார். பெருமிதத்தோடுமடியில் இருந்த செருப்புக்களை எடுத்துகால்களில் அணிந்து கொண்டார். சிறுவர்களைவெற்றிப் பெருமிதத்தோடு ஒரு பார்வை பார்த்தார். பிறகு வீட்டை நோக்கி "டக்டக்...' என்று நடந்து போனார்.
புதுச்செருப்பு! - முல்லா கதைகள் | Mulla Stories in Tamil
Reviewed by haru
on
August 25, 2012
Rating:
No comments