சிறுவர் கதைகள் - கறுப்பு சீயூ!
கறுப்பு சீயூ!
பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் சீனா, பல அரசுகளாகபிரிந்து கிடந்தது. ஒவ்வொரு சிறிய பகுதியும், ஓர் அரசரால் ஆளப்பட்டது. ஒருகால கட்டத்தில் "கியூ' என்ற பகுதியைசூயன் என்ற பேரரசர் ஆட்சிசெய்தார்.
அவர் ஆடம்பரப் பிரியர். வண்ண வண்ண ஆடைகளை அணிவதிலும், மணம் தரும் விலை உயர்ந்ததைலங்களைப் பயன்படுத்துவதிலும் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் தலைமுடி, மீசை, குறுந்தாடி ஆகியவைகளை வெட்டி சீர் செய்யதனி அலுவலர்களை வைத்திருந்தார்.
ஒவ்வொருநாளும் விதவிதமான பிராணிகளைப் பிடித்து சமைத்து உண்பதில் சூயன்மகிழ்ச்சி அடைந்தார். ஒருநாளில் ஆறு அல்லது ஏழுமுறை உணவு உண்பார். அவருக்குசாப்பிடுவதிலும், வித விதமான ஆடைஅணிவதிலும், பின்னர் உறங்குவதிலும் ஆர்வம்மிகுதி. நாட்டு மக்கள் நலனில்அவருக்கு அதிக அக்கறை இல்லை.
அவரது அந்தப்புரத்தில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் இருந்தனர். உழைப்பு, நற்பண்பு, ஒழுக்கம், தூய உள்ளம், நேர்மைஆகியவற்றில் அவர் அதிக அக்கறைஇல்லாமல் இருந்தார்.
அந்நாட்டில்ஒரு கிராமத்தில் சீயூ என்ற பெண்மணிவசித்தாள். அவள் சாக்கடை போன்றகறுப்பு நிறத்தில் அழகில்லாமல் இருந்தாள். அவள் கண்கள் குழியில்இருப்பது போல் தோன்றின. தலைமயிர்நெருக்கம் இல்லாமல், இடைவெளி விட்டு வளர்ந்திருந்தது. அவளை எவரும் விரும்பவில்லை. அதனால், நாற்பது வயது வரை அவளுக்குதிருமணம் நடக்கவில்லை. எனவே, அவள் தனியாகவாழ்ந்து வந்தாள்.
அப்போதுஅண்டை நாடான நூயு என்றபகுதிக்கும், கியூவுக்கும் இடையே அடிக்கடி சண்டைமூண்டது. மக்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. இதுசீயூவுக்கு மிகுந்த மன உளைச்சலைக்கொடுத்தது.
ஒருநாள்அவள் தைரியமாக மன்னரின் அரண்மனைக்கு சென்றாள்.
காவலர்கள் அவளை உள்ளே விடமறுத்தனர். அவள் தனது வலிமைஎல்லாம் சேர்த்து அவர்களை அடித்து தரையில்சாய்த்தாள். பின்னர் நேராக அரசரின்முன்னால் வந்து நின்றாள்.
அவளது அசிங்கமான தோற்றத்தைப் பார்த்து அரசர் வியப்படைந்தார். இப்படியும்அசிங்கமாக பெண்கள் இருக்க முடியுமாஎன்று சிந்தித்தார்.
“பெண்ணேஉனக்கு என்ன வேண்டும்?'' என்றுஅரசர் கேட்டார்.
“எனக்குஆட்சிப் பணி செய்ய அனுமதிவேண்டும்,'' என்றாள்.
“நீ ஏன் அவ்வாறு கேட்கிறாய்?'' என அரசர் கேட்டார்.
“ஏனென்றால், நமது நாடு இக்கட்டான நிலையில்இருக்கிறது. நூயு, சோயூ என்றபக்கத்து நாடுகள் நம்மை விழுங்கதயாராகிவிட்டன. அதே சமயம் நமதுநாடும் மிகுந்த குழப்பத்தில் உள்ளது. இது ஜீவ மரணப் போராட்டமேஆகும்! ஆனால், தாங்கள் இதில்அக்கறை இல்லாமல் இருப்பதை நினைத்தால், எனக்கு மிகுந்த வருத்தமாகஇருக்கிறது,'' என்று சொன்னாள்.
அவளது சொல்லைக் கேட்ட அரசர் அதிர்ச்சியடைந்தார். "இதுவரை நாம் இதைக் கண்டுகொள்ளாமல் ஆடம்பர பிரியராக இருந்ததுஎவ்வளவு பெரிய தவறு' என்பதைஅறிந்தார்.
“சீயூ, என்னை மன்னித்து விடு.... நான் நாட்டின்மீது அக்கறை இல்லாமல் இருந்துவிட்டேன். இன்று முதல் உன்னைஎனது முதன்மை அமைச்சராக நியமிக்கிறேன்,'' என்றார்.
அரசர் சீயூவின் ஆலோசனையை கேட்டு நாட்டை காப்பாற்றினார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் சீயூ பட்டத்துராணியாகவும் நியமிக்கப் பெற்றார். கடைசி காலம் வரை, அவள் அரசருக்கு உற்ற தோழியாகவும் இருந்தாள்.
கறுப்புநிறத்தில் அழகற்றவளாய் இருந்த சீயூ இன்றும்மக்களால் போற்றிப் புகழப்படுகிறாள்.
Source : தினமலர்
Source : தினமலர்
சிறுவர் கதைகள் - கறுப்பு சீயூ!
Reviewed by haru
on
August 24, 2012
Rating:
No comments