Ads Below The Title

சிறுவர் கதைகள் - தன்னலமற்ற சேவை


தன்னலமற்ற சேவை


முன்னொருகாலத்தில் வேங்கைபுரி என்ற நாட்டை வேந்தன்என்ற அரசன் ஆண்டு வந்தான். அவர் தமது நாட்டில் இறைவனுக்காகமிகப் பெரிய ஆலயம் ஒன்றைஅமைக்க எண்ணினார். இதுவரை எவருமே கட்டியிராதவாறுமிக அழகிய கோயில் கட்டுவதன்மூலம் தமது புகழ் பல்லாண்டுகாலம் புகழுடன் விளங்கும் என்பது அவருடைய விருப்பம்.

இதற்காகநாடெங்கிலுமிருந்து கைதேர்ந்த சிற்பிகளை வரவழைத்தார். கோயில் கட்டுவதற்கான கற்களையும்பாறைகளையும் கொண்டு வரச் செய்தார்.

சிற்பிகள்வேலையைத் தொடங்கினர். கல்லுளிகளின் ஓசை கேட்கலாயிற்று. கோயில்வேலை துரிதமாக நடைபெற்று வந்தது. மன்னன் நாள்தோறும்கோயில் வேலையை வந்து பார்வையிடுவார். நாளுக்கு நாள் கோயில் கட்டும்வேலை வளர்ச்சி பெறுவது கண்டு உள்ளம்பூரிப்படைந்தான்.

பல நாட்களுக்குப் பின்னர் ஒரு வழியாகக்கோயில் கட்டி முடிந்தது. அழகியகோபுரமும் கோபுரத்தில் உள்ள சிற்பங்களும் பார்ப்பவர்உள்ளத்தைப் பரவசமடையச் செய்யும்படியாக விளங்கின

மன்னன் இதனைக் கண்டுபூரிப்படைந்தான். கோயில் பணி பூர்த்தியானதும்மிகப் பெரிய சலவைக்கல் ஒன்றில்கோயிலைக் கட்டிய தனது பெயரைப்பொன்னால் பொறிக்கச் சொன்னான். அதனைக் கோபுர வாசற்படியில்எல்லோர் கண்களிலும் படும்படியாகப் பதித்து வைக்கச் சொன்னான்.

அன்று இரவு அரசன் தூங்கிக் கொண்டிருக்கும் போதுஒரு கனவு கண்டான். கனவில்இறைவன் தோன்றினார். மன்னன் கட்டிய கோயிலும்தோன்றியது. அதில் மன்னன் பெயர்பொறிக்கப் பெற்ற சலவைக் கல்லும்இருந்தது.

இறைவன்நேரே மன்னன் பெயர் பொறிக்கப்பட்டிருந்தசலவைக் கல்லின் அருகே சென்றார். மன்னன் பெயரை அழித்துவிட்டு வேறுயாரோ ஒரு பெண்மணியின் பெயரைஎழுதிவிட்டுச் சென்றார்.

மன்னன்திடுக்கிட்டுக் கண் விழித்தான். நேரேகோயிலுக்குச் சென்றான். சலவைக் கல்லைப் பார்த்தான். அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஆம், அவன் பெயர் அழிக்கப்பட்டுயாரோ ஊர் பேர் தெரியாதஒரு பெண்மணியின் பெயர் அதில் பொறிக்கப்பட்டிருந்தது

இதைக் கண்ட அரசனுக்கு ஒருபுறம்அவமானமாகவும் மறுபுறம் வேதனையாகவும் இருந்தது. "இவ்வளவு பாடுபட்டுப் பெரும்பொருள் செலவு செய்து இந்தக்கோயிலைக் கட்டினேன். முடிவில் என்னுடைய பெயர் பொறிக்கப்படாமல் வேறுயாரோ ஒரு பெண்மணியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறதே!' என்று வேதனையடைந்தான்.

காவலர்களை அனுப்பி அந்தச் சலவைக்கல்லில் பெயர் பொறித்துள்ள பெண்மணியைஎங்கிருந்தாலும் தேடி அழைத்து வருமாறுகட்டளையிட்டான்.

காவலர்களும்நகர் பூராவும் சுற்றித் திரிந்து கடைசியில் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ளஒரு குடிசையில் தன்னந்தனியாக வசித்து வந்த ஒருமூதாட்டியை அழைத்து வந்தனர். அவள்பெயர் தான் அந்தச் சலவைக்கல்லில்பொறிக்கப்பட்டிருந்தது.

அந்த மூதாட்டியைப் பார்த்த அரசன், "அந்தச்சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர் உங்களுடையதுதானா?'' என்று கேட்டான்.

கிழவி கண்களை நன்கு துடைத்துக்கொண்டு சலவைக்கல்லைப் பார்த்தாள். பிறகு, "ஆம் அரசேஅது என்னுடைய பெயர் தான்.... தவறுதலாகப்பொறிக்கப் பட்டுவிட்டது போல் இருக்கிறது!''

இல்லை அம்மா, "என் பெயர்தான் முதலில் அந்தச் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டது. இறைவனே வந்து என்பெயரை அழித்துவிட்டுத் தங்கள் பெயரை இதில்பொறித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அதன் காரணம் என்னவென்றுஎனக்குத் தெரியவில்லை'' என்றான் அரசன்.

நான் இந்தப்பக்கம் வந்தது கூட இல்லை.... அப்படியிருக்க இதில் என் பெயர்ஏன் பொறிக்கப்பட்டிருக்கிறது? என்று வியப்புடன் கேட்டாள்கிழவி.

தாயே, "இந்தக் கோயில் பணியில்நீங்கள் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இறைவன் தங்கள் பெயரைஇதில் பொறித்திருக்கமாட்டார். தாங்கள் செய்த தொண்டுஎன்னவென்று கூறுங்கள்!'' என்றான் அரசன்.

நெடுநேரம்யோசனை செய்து பார்த்த கிழவி, மன்னா! "இந்தக் கோயில் பணிக்காகநான் ஒன்றும் செய்யவில்லை ஆனால், ஒன்று மட்டும் செய்திருக்கிறேன். இந்தக்கோயில் கட்டுவதற்கான கற்கள் மரங்கள் முதலியவற்றைஏற்றிவரும் வண்டிகள் நாள்தோறும் என் வீட்டுப் பக்கமாகத்தான் வரும். அந்த சமயத்தில்வண்டியோட்டிகளுக்குத் தாகந்தீரத் தண்ணீர் கொடுப்பேன்; மோர்கொடுப்பேன். குதிரைகளுக்குச் சிறிது புற்களை கொடுத்துதண்ணீர் காட்டுவேன். அவ்வளவுதான் நான் செய்தது'' என்றாள்கிழவி.

தாயே! நான் வெறும் புகழுக்காகஇந்தக் கோயிலைக் கட்டினேன். தாங்களோ புகழை விரும்பாமல்தொண்டு செய்தீர்கள். எனவே, தான் என்பெயரை அழித்துவிட்டு இறைவன் தங்கள் பெயரைப்பொறித்துள்ளார்

"தன்னலமற்ற தங்கள் தொண்டினை இந்தக்கோயிலில் உள்ள சலவைக்கல் என்றென்றும்எடுத்துக் காட்டும். வாழ்க தங்கள் புகழ்!'' என்று கூறிய மன்னன், அந்தக்கிழவிக்கு நிறைய பொருள் பரிசாகக்கொடுத்து அனுப்பினான்.
சிறுவர் கதைகள் - தன்னலமற்ற சேவை சிறுவர் கதைகள் - தன்னலமற்ற சேவை Reviewed by haru on September 17, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]