சிறுவர் கதைகள் - புத்திசாலி பெலிக்ஸ்
புத்திசாலி பெலிக்ஸ்
ஒரு ஊரிலே ஏழைத் தாய்ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் மிகவும் அன்பானவள். அவளுக்கு ஒரே ஒரு மகன்இருந்தான். அவனது பெயர் பெலிக்ஸ். அம்மாவைப் போலவே அன்பான குணங்கள்நிறைந்தவன். ஆனால், நல்ல பலசாலி. நாளுக்கு நாள் பலம் மிக்கவனாகஅவன் வளர்ந்து வந்தான்.
அந்த ஊர் அரசன் மிகவும்கர்வம் பிடித்தவன்; இரக்கமில்லாதவன். ஏழைகளைத் துன்புறுத்துவதில் இன்பங் காண்பவன்.
எல்லாவிதமானபோர் முறைகளையும் கற்றுத் தேர்ந்து கொண்டான். அங்கிருந்த எல்லா வீரர்களையும் அவன்சண்டையிட்டுத் தோற்கடித்தான். அதனால் அங்குள்ள மக்கள்எல்லாரும் அவனுக்கு "மகாவீரன்" என்ற பட்டத்தைச் சூட்டினர்.
மகாவீரன் பெலிக்ஸ் தன்னுடைய பலத்தையும் ஆற்றலையும் தவறான விஷயங்களுக்காக ஒருபோதும் பயன்படுத்தவில்லை. மக்களின் நன்மைக்காகவே தன் வீரத்தை பயன்படுத்திவந்தான். கொடிய காட்டு மிருகங்கள்அந்த ஊரின் வயல்களுக்குள் புகுந்துநாசஞ் செய்த போது அவன்அவற்றை வேட்டையாடிக் கொன்றான். இதனால் மக்கள் அவன்மீது மேலும் அன்பு கொண்டனர்.

இவனது வீரச்செயல் அரசனின் காதுகளில் வீழ்ந்தது. அரசனுக்கு அவன் மீது வெறுப்புஏற்பட்டது. இப்படியே இவனது புகழை வளரவிட்டால்தனக்கும் ஆபத்து ஏற்படும் என்றுஎண்ணினான். எனவே, பெலிக்ஸ்சை எப்படியும்அழித்துவிட நினைத்தான் அரசன்.
பெலிக்ஸ்சைஎப்படி அழிப்பது என்று அவன் யோசித்தான். பெலிக்ஸ்சை போன்ற பலசாலியோடு மோதுவதற்குயாரும் முன்வர மறுத்துவிட்டனர். அரசனுக்குஇதனால் மிகுந்த ஏமாற்றமாகி விட்டது.
பெலிக்ஸ்சைஎப்படி அழிப்பது என்று அவன் யோசித்தான். பெலிக்ஸ்சை போன்ற பலசாலியோடு மோதுவதற்குயாரும் முன்வர மறுத்துவிட்டனர். அரசனுக்குஇதனால் மிகுந்த ஏமாற்றமாகி விட்டது.
தந்திரத்தாலும், வஞ்சனையாலுந்தான் இவனை வெற்றி கொள்ளவேண்டுமென்ற முடிவுக்கு அரசன் வந்தான்.
பெலிக்ஸைஅரசன் கொல்ல நினைத்த விஷயம்அவனுக்கு தெரிய வந்து கொஞ்சமும்தாமதியாது அவன் தன்னுடைய தாயையும்அழைத்துக் கொண்டு மாயமாக அங்கிருந்துமறைந்து விட்டான். அங்குள்ள தன் பிரியமான தோழர்களானசின்னஞ்சிறு குழந்தைகளை விட்டுப் பிரிந்து போவது தான் பெலிக்ஸ்க்குமிகவும் கவலையை அளித்தது.
ஒரு நாள்—
அந்த ஊருக்கு ஒரு பூதம்வந்தது. அந்த பூதம் மிகவும்பிரமாண்டமானதாயிருந்தது. அது மூச்சுவிட்டால் புகைபுஸ்புஸ்ஸென்று கிளம்பிற்று. வாயைத் திறந்தாலோ நெருப்புக்கக்கிற்று. பெரிய முட்கள் நிறைந்தபனைமரம் போல அதன் வால்நீண்டிருந்தது. தனது அச்சமூட்டும் வாலினால்அது மிருகங்களையும் சுழற்றிப் பிடித்து அடித்துக் கொன்றது.
இதனால்ஊர் மக்கள் வெளியே வரஅஞ்சினர். வீட்டுக்குள்ளேயே அடைந்து கொண்டனர்.
அவர்கள்வயலுக்குப் போகாததால் பயிர் செய்ய முடியவில்லை. இதனால் அந்த ஊரில் பெரும்பஞ்சம் ஏற்பட்டது. பெலிக்ஸ் ஒருவனாலேயே அந்த விலங்குப் பூதத்தைக்கொல்ல முடியும் என நினைத்த அரசன்அவனைத் தேடிக் கண்டுபிடிக்க ஒற்றர்களைஎல்லாத் திசைகளுக்கும் அனுப்பி வைத்தான். அவர்களும்பெலிக்ஸ் இருக்குமிடத்தை அறிந்து கொண்டனர். அரசனுக்குச்செய்தியை உடனே அறியப்படுத்தினர்.
உடனே அரசன், பெலிக்ஸ்சை தனதுஅரண்மனைக்கு இழுத்து வரும்படி கட்டளையிட்டான். படை வீரர்கள் அவனைக் கைது செய்யமுயன்றனர். பெலிக்ஸ் அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொருதிசையில் வீசி எறிந்தான். படைவீரர்கள் எதுவும் செய்ய முடியாமல்அங்கிருந்து திரும்பி ஓடிப் போய் அரசனிடம்நடந்தவற்றைக் கூறினர்.
அரண்மனையில்எல்லாரும் ஒன்றாகக் கூடி யோசித்தனர். கடைசியில்பெலிக்ஸ்சிடம், விலங்கு பூதத்திடம் இருந்துதங்களைக் காப்பாற்றும்படி கேட்க குழந்தைகளை அனுப்பிவைப்பதென்று முடிவாயிற்று. அப்படியே அவன் இருந்த வீட்டிற்குகுழந்தைகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தாங்கள்பூதத்திற்குப் பயந்து வாழ்வதை குழந்தைகள்பயத்தோடு அழுதபடியே கூறியதைக் கேட்க பெலிக்ஸ் மிகவும்இரக்கம் கொண்டான். அந்தக் குழந்தைகளின் கண்ணீரைஅவன் துடைத்து அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை சொன்னான். விலங்குப் பூதத்தோடு தான் சண்டையிட்டு அதைவெல்வதாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்தான்.
பின்னர்அவன் பனிரெண்டு பீப்பாய் நிறையத் தாரையும், பனிரெண்டுவண்டியில் வைக்கோலையும் சேகரித்தான். பெரியதொரு தண்டாயுதத்தையும் எடுத்துக் கொண்டான். பூதத்தின் குகை வாசலிலே இவற்றோடுபோய் நின்ற அவன், பூதத்தைதன்னோடு சண்டைக்கு வரும்படி சவால் விட்டான்.
பூதம் ஆவென்று வாயைப் பிளந்துசீறியபடி அவனைக் கடிக்க வந்தது. உடனே கொதிக்க வைத்த தார்க்குழம்பை அதன் வாயினுள்ளே ஊற்றினான். அந்தத் திரவம் பூதத்தின் பற்களையும்வாயையும் கெட்டியாகப் பிடித்து, அது வாயைத் திறக்காமல்செய்துவிட்டது. தனது கையில் தண்டாயுதத்தைஎடுத்து அதன் முகம், உடலெங்கும்ஓங்கி அடிக்கத் தொடங்கினான். ஏதும் செய்ய முடியாதபூதம் தனக்கு இரக்கம் காட்டும்படிமன்றாடியது.
தீமைக்கு ஒருபோதும் இரக்கம் காண்பிக்கக் கூடாதுஎன்று எண்ணினான் பெலிக்ஸ். பெரிய ஏரை அந்தபூதத்தின் மேல் பூட்டி, நகரத்தின்வயல் முழுவதையும் நன்றாக உழுது முடித்தான்பெலிக்ஸ்.
தீமைக்கு ஒருபோதும் இரக்கம் காண்பிக்கக் கூடாதுஎன்று எண்ணினான் பெலிக்ஸ். பெரிய ஏரை அந்தபூதத்தின் மேல் பூட்டி, நகரத்தின்வயல் முழுவதையும் நன்றாக உழுது முடித்தான்பெலிக்ஸ்.
இவ்வளவுநாளும் வீட்டுக்குள் அடைந்து கிடந்த மக்கள், வெளியே வந்தனர். பெலிக்ஸ்சை வாழ்த்தினர். ஆடிப்பாடி மகிழ்ந்தனர். குழந்தைகள் பெலிக்ஸ்சை சுற்றி நின்று மகிழ்ந்தனர்.
பிறகு பூதத்தை மன்னித்து அதைஅந்த ஊரை விட்டே போய்விடும்படிகூறினான்.
பூதமும்அங்கிருந்து போய்விட்டது.
இவ்வளவு காலமும் கொடியவனாகநடந்து வந்த அரசன் தனதுகுணத்தை மாற்றிக் கொண்டான். பெலிக்ஸை மிகவும் போற்றினான். மீண்டும்அவனையும் அவனது தாயாரையும் தனதுஊருக்கே வரச் செய்தான். பெலிக்ஸைஅரசன் தனது படைத் தளபதியாகநியமித்து ஆனந்தமாக வாழ்ந்து வரலானான்.

Download or Print this Story
சிறுவர் கதைகள் - புத்திசாலி பெலிக்ஸ்
Reviewed by haru
on
September 21, 2012
Rating:
No comments