Ads Below The Title

சிறுவர் நீதிக்கதைகள் - விமர்சனம்!

விமர்சனம்!


கந்தர்வபுரிஎன்ற நாட்டை காந்தன் என்றஅரசர் ஆண்டார். அரசர் நல்லவர் என்றபெயர் பெற்று சிறப்பாக மக்களைஆண்டார். கவிதைகள் என்றால் அரசருக்கு மிகவும்பிடிக்கும். அரண்மனையில் தினமும் கவியரங்கம் நடைபெறும். அற்புதமான கவிதைகள் எழுதுபவர்களை பாராட்டி பரிசு வழங்கி கவுரவிப்பதுஅரசரின் வழக்கம்.  

அரண்மனையில் ஒரு ஆஸ்தான கவிஞன்இருந்தான். அவன் பெயர் பசுபதி. அற்புதமான கவிதைகள் எழுதுவதில் அவரை யாராலும் வெல்லமுடியாது. திறமை இருக்குமிடத்தில் சிலசமயம் கர்வமும் வருவதுண்டு. கொஞ்சம் கர்வம் இருந்தது. கவிதைகள் பாடும் போது ஒருவன்அவைகளை விமர்சனம் செய்வான். அந்த விமர்சகன் பெயர்விமலன்.

எப்பேர்பட்டகவிதைகளையும் விமலன் விமர்சனம் செய்துஅதில் உள்ள குற்றங்களை கண்டுபிடித்துவிடுவான். ஆஸ்தான கவிஞனான பசுபதியின்கவிதைகளும் விமலனிடம் இருந்து தப்புவதில்லை. எனவே, பசுபதி கவிதை பாடும் முன்பதட்டத்துடன் விமலனை பார்ப்பான்.  

தனக்குஅபார புலமை இருந்தாலும் மனதுக்குள்விமலனுக்கு பயப்பட்டான்.  

விமலன் நல்லவன். யாருக்கும்தீங்கு செய்யமாட்டான். எனவே, அரசர் அவனிடம்அதிக பற்று வைத்திருந்தார். இவர்களதுநட்பு பசுபதியின் அமைதியை கெடுத்தது. அவன்மனதில் விமலன் மீது ஆத்திரம்ஏற்பட்டது.

அன்றும்வழக்கம் போல் அரசவை கூடியது. கவிஞர்கள் பலர் கவிதை பாடிபரிசு பெற வந்தனர். கவிஞர்களைகண்டு அரசர் மகிழ்ச்சி அடைந்தார். கவிஞர்களுடன் விமர்சகனும் இருந்தான். கவியரங்கம் ஆரம்பமாகும் நேரம் வந்தது. அரசர்முன் நின்று கவிஞர்கள் ஒவ்வொருவரும்அற்புதமான கவிதைகள் பாடினர். அதைக் கேட்டு அரசர்மகிழ்ச்சி அடைந்தார்.  

பிறகு ஆஸ்தான கவிஞன்பாட அழைக்கப்பட்டான். பசுபதி எழுந்து நின்றுகவிதை பாடினான். அதைக் கேட்டு பெரும்மகிழ்ச்சி அடைந்து கை தட்டிபாராட்டினார் அரசர். மற்ற கவிஞர்களும்பசுபதியை பாராட்டி கை தட்டி ஆரவாரம்செய்தனர்.

விமலன்மட்டும் மவுனமாக இருந்து பசுபதியைகவனித்துக் கொண்டிருந்தான். அவன் மனதில் பசுபதிபாடிய கவிதைகளின் வரிகள் ஆழமாக பதிந்துஇருந்தன. ஒவ்வொரு வரிகளையும் ஒவ்வொருஎழுத்துக்களையும் அவன் ஆராய்ந்து கொண்டிருந்தான். பிறகு எழுந்து, அரசருக்கும் சபையோர்களுக்கும் வணக்கம் சொல்லிவிட்டு தன்விமர்சனத்தை தொடங்கினான். அந்த விமர்சனம் பசுபதியைமேலும் ஆத்திரப்படுத்தியது. அவன் பற்களை கடித்துஆத்திரத்தை அடக்கிக் கொண்டான்.  

விமலனின் விமர்சனம் கேட்டு அரசன் திடுக்கிட்டான். விமலனால் மட்டும் எப்படி இவ்வளவுநன்றாக விமர்சனம் செய்ய முடிகிறது என்றுஅனைவரும் வியந்தனர்.

பேஷ்... பேஷ்... உங்கள் விமர்சனம் அற்புதம். கவிதை எழுதுவதை விட அதை விமர்சனம்செய்வது தான் சிரமமான காரியம்,'' என்று கூறி பாராட்டினார் அரசர். அன்று வீடு திரும்பிய பசுபதியால்அமைதியாக இருக்க முடியவில்லை. விமலனைஎப்படி பழி வாங்குவது என்றசிந்தனைதான் அவன் மனதில் நிறைந்துஇருந்தது

இவனை விட்டு வைத்தால்தன் ஆஸ்தான கவிஞர் பதவிக்குஆபத்து ஏற்பட்டுவிடும் என்று பயந்தான். அவனால்இரவில் தூங்க முடியவில்லை. கண்களைமூடினாலே விமலனின் முகம்தான் தெரிந்தது. எப்படியாவது அவனை ஒழித்து கட்டவேண்டும் என்று முடிவு செய்தான்

தன் கவிதையை பாராட்டாமல் அவன்விமர்சனத்தை பாராட்டுகிறாரே அரசர் என்று நினைத்தபோதுஅவனுக்கு அரசர் மீது ஆத்திரம்வந்தது.

அன்று ராஜ சபை கூடியபோது அரசர் மகிழ்ச்சிகரமான அறிக்கைஒன்றை வெளியிட்டார். “தன் பிறந்த நாள்அன்று கவிதை போட்டி ஒன்றுநடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு ஆயிரம்தங்கக் காசுகளும், வீடும், நிலமும் வழங்கஇருக்கிறேன். அயல்நாடுகளில் இருந்தும் பல கவிஞர்கள் வரஇருக்கின்றனர்,'' என்றார் அரசர்.  

அதைக்கேட்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்த போது பசுபதிமட்டும் உம் என்று இருந்தான். தான் போட்டியில் கலந்து கொண்டால் நிச்சயமாகவெற்றி பெற முடியாது. காரணம், அந்த விமலன் விமர்சனம் செய்தேதன்னை அவமானப்படுத்துவான், தோல்வி அடைந்தால் தன்ஆஸ்தான கவிஞர் பதவி போய்விடும்.  

இப்படி பலவித சிந்தனையில் வேர்த்துப்போனான் பசுபதி. அரசனின் பிறந்தநாள் வந்தது. நாடே விழாக்கோலம்பூண்டது. மக்கள் அனைவரும் புத்தாடைஅணிந்து மகிழ்ச்சியாக இருந்தனர். போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமாவேண்டாமா என்று முடிவெடுக்க முடியாமல்தவித்துக் கொண்டிருந்தான் பசுபதி. வருவது வரட்டும்என்று போட்டியில் கலந்து கொள்ள முடிவுசெய்தான் பசுபதி.

கவியரங்கம்ஆரம்பமாகிவிட்டது. அரசர் சிம்மாசனத்தில் அமர்ந்துவிட்டு கவிஞர்களை வாழ்த்தினார். பிறகு, “கவிதை போட்டியைஆரம்பிக்கலாம்,'' என்றார். பல கவிஞர்களும் தங்கள்கவிதைகளை அழகாக பாடினர். அதைக்கேட்டு அரசர் மகிழ்ச்சி அடைந்தார்.  

அனைத்தையும் கவனித்துக் கொண்டு மவுனமாக இருந்தான்விமலன். அடுத்தபடியாக ஆஸ்தான கவிஞன் பசுபதிகவிதை பாடுவார் என்ற அறிவிப்பு வந்தபோது விமலன் சிரித்தான். அதைக்கவனித்த பசுபதிக்கு கடும் கோபம் வந்தது. ஆனால், கோபத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்தான். பசுபதி எழுந்து அரசனைவணங்கிவிட்டு கவிதை பாட தொடங்கினான். அரசர் உட்பட அனைவரும் பசுபதியைபாராட்டினர்.

விமலன்அந்தக் கவிதையை அக்கு வேறுஆணி வேறாக பிரித்து விமர்சனம்செய்து அனைவரையும் வியக்க வைத்தான். முதல்பரிசு பசுபதிக்கே கிடைத்தது. பரிசு பெற்றாலும் அவன்மனதில் விமலன் மீது இருந்தஆத்திரம் தணிய வில்லை. பழிவாங்கும்எண்ணம் அவனை ஆட்டி வைத்தது.  

அவன் ஒரு வாளுடன் வீட்டைவிட்டு ஓடினான். "விமலனை கொன்றுவிட்டு தான்மற்றவைகளை கவனிப்பேன்' என்று மனதுக்குள் கூறிக்கொண்டே அவன் வீட்டை நோக்கிஓடினான்.  

யார் கண்களிலும் படாமல்விமலன் வீட்டு பூங்காவில் ஒளிந்துகொண்டான். அப்போது விமலன் தன்மனைவியுடன் பேசும் சப்தம் கேட்டது. அவன் மெதுவாக ஜன்னலை அடைந்துவீட்டுக்குள் எட்டி பார்த்தான்.

இன்னிக்குகவிதை போட்டியில் பரிசு கிடைத்தது. யாருக்கு?'' என்றாள் மனைவி. “வேறு யாருக்கு, நம்ம பசுபதிக்கு தான்,'' என்றான் விமலன். “பசுபதிக்கு அற்புதமான திறமை இருப்பதாக நீங்களேசொல்கிறீர். பிறகு ஏன் தினமும்அவர் கவிதைகளை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?'' என்றாள் மனைவி. “அடியே! பசுபதி அற்புதமான கவிஞன்தான்.  

அவன் திறமையை மேலும் சிறப்பாக்குவதற்காகதான் அப்படி விமர்சனம் செய்கிறேன். என் விமர்சனத்துக்கு பயந்து அவன் மேலும்சிறந்த கவிதைகளை படைக்க வேண்டும் என்றுகடும் முயற்சி செய்து கொண்டிருக்கிறான். அந்த முயற்சி அவனுக்கு பெரும்வெற்றியை தேடித் தருகிறது

இன்றுஅவனிடம் போட்டி போட்டு வெற்றிபெறும் தகுதி யாருக்கும் கிடையாது. இப்போது, நான் ஏன் விமர்சனம்செய்கிறேன் என்ற கேள்விக்கு விடைகிடைத்துவிட்டதா'' என்று கூறிவிட்டு மீண்டும்சிரித்தான்.

வாளுடன்விமலனை கொல்ல வந்த பசுபதிஇந்த உரையாடலை கேட்டு அதிர்ச்சி அடைந்தான். இப்பேற்பட்ட உயர்ந்த உள்ளம் கொண்டவரைதான் தவறாக நினைத்துக் கொலைசெய்யும் அளவுக்கு வந்துவிட்டோமே என்று நினைத்த போதுஅவனுக்கு அழுகையே வந்தது.  

அவன்அழுது கொண்டே ஓடிச் சென்றுவிமலனின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டான். “அய்யா! நான் உங்களைதவறாக நினைத்தேன். இந்த உயர்ந்த உள்ளத்தைபுரிந்து கொள்ள முடியாமல் போயிற்று. என்னை மன்னித்து விடுங்கள். அந்த பரிசு உங்களைதான் சாரும். அதைப் பெறும்தகுதி எனக்கு இல்லை,'' என்றுகூறி அழுதான் பசுபதி.

நீதி : நம்மைவிட பெரியவர்கள் நம்மை விமர்ச்சிக்கும் போதுஅதைக் கண்டு ஆத்திரப்பட வேண்டாம். பெற்றோர்களும் ஆசிரியர்களும் தம்மை குறை கூறும்போது கோபம் கொள்ளத் தேவையில்லை. நம் மீது இருக்கும் பற்றினால்தான்அவர்கள் அவ்வாறு கூறுகின்றனர். புரிந்ததா?

நன்றி தினமலர்!
சிறுவர் நீதிக்கதைகள் - விமர்சனம்! சிறுவர் நீதிக்கதைகள் - விமர்சனம்! Reviewed by haru on September 23, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]