Ads Below The Title

சிறுவர் நீதிக்கதைகள் - சகுனி!

சகுனி!


கம்சபுரம்என்ற ஊரில் சகுனிராசன் என்றஒருவன் இருந்தான். படு புத்திசாலியான அவன்அந்நாட்டு அரசனின் ஆலோசகராக இருந்தான். அரசனுக்கு எப்பேர்பட்ட பிரச்னை ஏற்பட்டாலும் சகுனிராசன்அதை எளிதில் தீர்த்து வைப்பான். அதனால் அவனுக்கு கர்வம் அதிகமாக இருந்தது. சகுனிராசனுக்கு மனைவியும் ஒரு மகனும் இருந்தான். மனைவிக்கு பிறந்த ஆறு குழந்தைகள்இறந்துவிட்டனர். ஏழாவதாக பிறந்த மகன்தான்வீரராசா.

வீரராசாவைஉயிருக்கு உயிராக நேசித்தான் சகுனிராசன். அவன் கேட்பதை எல்லாம் வாங்கிக்கொடுப்பான். மகன் வளர்ந்து இளைஞன்ஆகிவிட்டான். ஆனால், தந்தையின் புத்திசாலித்தனம்அவனுக்கு இல்லை. அதைக் கண்டுசகுனிராசன் கவலை அடைந்தான்.  

சகுனிராசன்தன் மகனையும் புத்திசாலி ஆக்குவதற்காக கடும் முயற்சி செய்துபார்த்தான். ஆனால், மகனது மரமண்டையில்எதுவும் ஏறவில்லை. வீரராசாவுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவன் பெயர் ஞானமணி, புத்திசாலியாகஇருந்தான். தன் மகனை விடநண்பன் புத்திசாலியாக இருப்பது சகுனிராசனுக்கு பிடிக்கவில்லை.

வீரராசாகொஞ்ச நேரம் கூட ஞானமணியைபிரிந்து இருக்கமாட்டான். ஞானமணியின் தந்தை ஒரு விவசாயி. வயலில் கடுமையாக உழைப்பதை தவிர வேறு எதுவும்தெரியாது.  

ஒரு நாள் மகனைஅருகில் அழைத்து, “அடே ஞானமணி நீவளர்ந்துவிட்டாய். எனவே, என்னுடன் வந்துவயலில் வேலை செய்யக் கூடாதா?'' என்று கேட்டான். அதைக் கேட்ட ஞானமணி, “அப்பா, நான் வயலுக்கு வந்துவேலை செய்ய விரும்பவில்லை. வீரராசாவின்தந்தையைப் போல் அரண்மனையில் வேலைசெய்ய விரும்புகிறேன்'' என்றான்.

ஞானமணியைமுறைத்துப் பார்த்தான் தந்தை. “அடே அதுக்கெல்லாம்புத்தி வேண்டாமா? நல்ல கல்வி அறிவுவேண்டாமா?'' என்றான் தந்தை. “நான்அவரிடம் கல்வி கற்றுக் கொள்கிறேன்'' என்றான் ஞானமணி. “அடே அந்த சகுனிராசன்ஒரு மாதிரியான மனுசன். யாருக்கும் எதையும்கற்றுக் கொடுக்கமாட்டான். அது மட்டுமா கர்வம்பிடிச்சு திரிகிறான்'' என்றான்.

அப்பா நீங்கள் அவரைசந்தித்து பேசினால் எல்லாம் சரியாகிவிடும்'' என்றான்ஞானமணி. “சரி உன் விருப்பத்தைகெடுப்பானேன்'' என்று கூறிவிட்டு வெளியேகிளம்பினான் தந்தை. வீட்டு வாசலில்போட்டு இருந்த சாய்வு நாற்காலியில்கம்பீரமாக படுத்து இருந்தான் சகுனிராசன். ஞான மணியின் தந்தை பணிவுடன்வணக்கம் சொன்னான். சகுனிராசன் பதிலுக்கு வணக்கம் சொல்லவில்லை. “உம்... என்ன வேணும்?'' என்று கேட்டான்.

அய்யாஎன் மகன் ஞானமணி உங்களிடத்தில்கல்வி கற்க விரும்புகிறான். நீங்கமனசுவச்சா அவன் உங்களைப் போல்புத்திசாலி ஆயிடுவான்'' என்று கூறி, தலையைசொறிந்தான். நகைச்சுவையை கேட்டது போல் சிரித்தான்சகுனிராசன். “அடே... நீ ஒருவிவசாயி. படிப்பறிவு கிடையாது. உன் பையனுக்கு மட்டும்எப்படிடா புத்தி வரும்? எப்படிடாகல்வி அறிவு வரும்?'' என்றுகூறிவிட்டு மீண்டும் சிரித்தான் சகுனிராசன்.

அய்யா, அப்படி சொல்லாதீங்க. அவன் என்னைப் போல் அல்ல. புத்திசாலிப் பையனாக இருக்கிறான். நீங்கமனசு வச்சு ஏதாச்சும் சொல்லிக்கொடுத்தா அவன் கட்டாயமா முன்னுக்குவந்துடுவான்'' என்றான் ஞானமணியின் தந்தை.

சரி சரி எனக்கு வேறுவேலை இருக்கிறது. நீ வேலையை பார்த்துபோயிட்டு வா'' என்றான் சகுனிராசன். இனி வாதாடி பலனில்லை என்றுஉணர்ந்த ஞானமணியின் தந்தை தலைகுனிந்தபடி அங்கிருந்துவெளியேறினான். சோகமாக வீடு திரும்பியதந்தையைக் கண்டு திடுக்கிட்டான் ஞானமணி. “மகனே, அந்த மனுசன் உனக்குபடிப்பும் அறிவும் வராதுன்னு சொல்லிட்டான். அப்பவே நான் சொன்னேன். ஆனா, நீ கேட்க மாட்டியே'' என்றான்தந்தை. அதைக் கேட்ட ஞானமணிக்குவருத்தம் ஏற்பட்டது.  

அவன் கண்கலங்கியபடி வீட்டைவிட்டு வெளியேறினான். சற்று தூரம் சென்றபோது, “அடே ஞானமணி, ஏண்டாதுக்கமா இருக்கிறாய்?'' என்று ஒரு குரல்கேட்டது. அவன் தலை நிமிர்ந்துபார்த்தான். அங்கே வீரராசா நின்றுகொண்டிருந்தான்.

என்ன ஆச்சு? ஏனிப்படி உம்முன்னுஇருக்கே?'' என்று மீண்டும் கேட்டான்வீரராசா.

எனக்குகல்வி கற்றுத் தரும்படி உன்தந்தையிடம் கேட்டார் எங்கப்பா. ஆனால், அவர் மறுத்துவிட்டார். அது தான் வருத்தமாஇருக்கிறேன்'' என்றான் ஞானமணி.

இதுக்குபேய் வருத்தப்படுறியே... நான் எங்கப்பாவிடம் சொல்லிஉனக்கு பாடம் சொல்லித் தரவைக்கிறேன்'' என்றான். வீரராசா. அதைக் கேட்ட ஞானமணிக்குமகிழ்ச்சி ஏற்பட்டது. வீடு திரும்பிய வீரராசாதந்தையிடம் சென்றான். “அப்பா, ஞானமணிக்கு பாடம்சொல்லிக் கொடுக்கமாட்டேன்னு சொன்னியா?'' என்றான்.

ஆமாம் அதுக்கென்ன?'' என்றுஆத்திரத்துடன் கேட்டான் சகுனிராசன். “அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலேன்னாநான் எங்காவது போயிடுவேன்'' என்றான் மகன். மகனைஉயிருக்குயிராக நேசிக்கும் சகுனிராஜன் அதைக் கேட்டதும் திடுக்கிட்டுபோனான்.

மகனே, அப்படி ஒன்றும் செய்திடாதே. நான்அவனுக்கு எல்லா வித்தைகளையும் கற்றுக்கொடுக்கிறேன்'' என்றான் சகுனிராசன். அதைக்கேட்ட வீரராசா மகிழ்ச்சியுடன் நண்பனைகாண ஓடினான். "இரு இரு உனக்குவித்தையா கற்க வேண்டும் உன்னைஎன்ன செய்கிறேன் பார். என் மகனுக்குபுத்தியில்லை. உனக்கு புத்தி இருக்கிறது. உனக்கு பாடம் கற்றுத் தந்தால்நீ பெரிய ஆள் ஆயிடுவே. அதுக்கு நான் சம்மதிக்கமாட்டேன்'' என்று தனக்குத்தானேகூறிக் கொண்டான் கர்வம் பிடித்த சகுனிராசன்.

அடுத்தநாள் சகுனிராசன் வீட்டுக்கு பாடம் கற்க வந்தான்ஞானமணி. அதைக் கண்டு ஆத்திரமடைந்தான்சகுனிராசன். ஆனால் ஆத்திரத்தை வெளியில்காட்டிக் கொள்ளாமல் சிரித்தான். குருவை வணங்கினான் ஞானமணி, “உனக்கு எல்லாவற்றையும் கற்றுத் தருகிறேன். இந்தகோணியும் கயிறும் எடுத்துக் கொண்டுஎன்னுடன் வா'' என்றான் சகுனிராசன்.  

அவன் கோணிப் பை மற்றும்நீளமான கயிறுடன் சகுனிராசனை பின் தொடர்ந்தான். இருவரும்காட்டுக்குள் வெகுநேரம் சென்றனர். இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இருவருக்கும்தெரியாமல் வீரராசாவும் அவர்களை பின் தொடர்ந்துசென்றான். உயரமான மரத்தடியில் சகுனிராசன்நின்றான். அவன் மரத்தின் உச்சியைநோட்டமிட்டான்.

பிறகு ஞானமணியை பார்த்து, “நீ இந்த கோணிப்பைக்குள் ஏறிக் கொள். உன்னைகயிற்றால் கட்டி இழுத்து மரத்தின்உச்சி கிளையில் தொங்க விடுகிறேன். ஏழுநாட்கள் இதே நிலையில் இருந்தால்உனக்கு அறிவு வந்துவிடும். பிறகுபுத்திசாலித்தனத்தில் உன்னை யாராலும் வெல்லமுடியாது'' என்றான்.

சரி அப்படியே ஆகட்டும்'' என்றான் ஞானமணி.

ஞானமணிகோணிப் பைக்குள் புகுந்தான். சகுனிராசன் கயிற்றால் கோணிப் பையை கட்டிமரக்கிளையில் மாட்டி இழுத்தான். சற்றுநேரத்தில் ஞானமணி கோணிப் பையுடன்மரத்தின் உச்சிக்கு சென்றான். கயிற்றை இழுத்து மரத்தில்கட்டிவிட்டு, “உனக்கு அறிவா வேண்டும்இங்கேயே பட்டினி கிடந்து செத்துபோ'' என்று ஆத்திரத்துடன் கூறிவிட்டுஅங்கிருந்து சென்று விட்டான் சகுனிராசன்.

தான் வசமாக மாட்டிக் கொண்டதைஉணர்ந்து திடுக்கிட்டான் ஞானமணி. அவன் தேம்பிதேம்பி அழுதான். சற்று தொலைவில் புதருக்குள்மறைந்து கொண்டு எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த வீரராசாவுக்கு தன் தந்தையின் சூழ்ச்சிபுரிந்துவிட்டது. அவன் புதருக்குள் இருந்துவெளியேறினான்.

மரத்தடிக்குசென்றுஅடே ஞானமணி'' என்றுகுரல் கொடுத்தான். நண்பனின் குரல் கேட்ட ஞானமணிமகிழ்ச்சி அடைந்தான். “அடே என்னை காப்பாத்துடாகட்டை அவிழ்த்து என்னை கீழே இறக்குடா'' என்று கத்தினான். வீரராசா கட்டை அவிழ்த்துஞானமணியை கீழே இறக்கினான்.

உங்கப்பாஎன்னை கொன்று விட நினைத்தார். எனவே, நாம் இருவரும் சேர்ந்துஅவருக்கு பாடம் புகட்ட வேண்டும்'' என்றான் ஞானமணி. வீரராசாவை கோணிப்பையில் கட்டி மரத்தின் உச்சிக்குஇழுத்து கட்டிப் போட்டு விட்டுவீடு திரும்பினான் அவன்.

இரவு வந்தது. வீரராசா வீடுதிரும்பவில்லை. தந்தை சகுனிராசன் அமைதியிழந்துகாணப்பட்டான். இரவு வெகுநேரம் ஆகியும்மகன் வீடு திரும்பவில்லை. அந்தஊர் முழுவதும் தேடி அலைந்தான் தந்தை. கம்சபுரம் பிரதேசம் முழுவதும் தேடியும் மகன் அகப்படவில்லை. மகனைஉயிருக்கு உயிராக நேசித்து வந்தசகுனிராசன் கதறி அழுதான்.  

ஞானமணிக்குசெய்த கொடுமைதான் தன் மகனை தன்னிடமிருந்துபறித்தது என்ற குற்ற உணர்வுஅவனை மேலும் அழச் செய்தது. அடுத்த நாள் காலை சகுனிராசன்காட்டிற்கு ஓடினான். அவன் மரத்தடியில் நின்றுமர உச்சியைப் பார்த்தான். அங்கே கோணிப் பைதொங்கிக் கொண்டிருந்தது. அவன் கயிற்றை அவிழ்த்துகோணிப் பையை கீழே இறக்கிகட்டு அவிழ்த்து போது அதிர்ச்சி அடைந்தான்.

ஞானமணிக்கு பதிலாக தன் மகன்வீரராசா எப்படி கோணிப் பைக்குள்அகப்பட்டான்? தந்தையின் சந்தேகத்தை போக்கினான் மகன். “அப்பா, நீங்கசெய்த சதி என்னையே மாட்டவைத்தது பார்த்தீர்களா?'' என்றான் வீரராசன்.

என்ன நடந்தது என்று விளங்காமல்விழித்துக் கொண்டிருந்தான் சகுனிராசன் அப்போது. அங்கே வந்த ஞானமணி, “அய்யா, நீங்க என்னை கொல்லநினைத்தீர்களா? பொறாமை உங்கள் கண்களைமறைத்தது. உங்கள் மகன் இல்லைஎன்றால் நான் பட்டினி கிடந்துசெத்திருப்பேன்'' என்றான்.  

தன் செயலால் தன்செல்ல மகனே பாதிக்கப்பட்டதை கண்டுவெட்கத்தால் தலைகுனிந்தான் சகுனிராசன். “நீங்கள் என் கர்வத்தைஅழித்து விட்டீர்கள். இனிமேல் நான் ஆணவம்பிடித்தவனாக இருக்கமாட்டேன்'' என்று கூறி அழுதான்சகுனிராசன். அதைக் கண்டு நண்பர்கள்இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

நீதி : பிறர்நம்மை விட புத்திசாலியாக இருப்பதைகண்டு பொறாமைப் படக் கூடாது. ஒருபோதும்பொறாமையால் எதையும் பெற முடியாது.

நன்றி தினமலர்!
சிறுவர் நீதிக்கதைகள் - சகுனி! சிறுவர் நீதிக்கதைகள் - சகுனி! Reviewed by haru on September 25, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]