சிறுவர் கதைகள் - துணிச்சலான சிறுவன்
துணிச்சலான சிறுவன்
விளையும்பயிர் முளையிலேயே தெரியும் என்பது பழமொழி.
சின்ன வயதிலேயே அந்தச் சிறுவன் மிகவும்துரு துருவென்று இருப்பான்.ஒருநாள் அவனும் அவனதுநண்பர்களும் சேர்ந்து ஒரு மரத்திலே ஏறி, மரக்கிளையில் இருந்து தலை கீழாகத்தொங்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
விபரீதமான இந்த விளையாட்டைப் பார்த்தஅந்தப் பையனுடைய தாத்தா, பையன்கள் கீழேவிழுந்தால் உயிருக்கு ஆபத்தே என்று நினைத்தார். உடனே அனைவரும் கீழிறங்கி வாருங்கள் என்று சப்தம் போட்டார்.
அவர்கள் வந்ததும், " இந்த மரத்திலே ஒருபேய் இருக்கிறது. இப்படி மரத்தில் ஏறிவிளையாடினால் அது உங்கள் அடித்துக்கொன்றுவிடும். அதனால் மரத்தில் ஏறாமல்கீழேயே விளையாடுங்கள்" என்று பயமுறுத்தினார்.
இதைக் கேட்டு எல்லா சிறுவர்களும்பயந்துவிட்டார்கள். நமது சுட்டிப் பையனும்சரி சரி என்று தலையைஆட்டினான். ஆனால், அவர் அந்தப்பக்கம் போனதும், மறுபடியும் மரத்திலே ஏற ஆரம்பித்தான்.
அவனது நண்பர்கள், "ஐயையோ...ஏறாதே....பேய்உன்னை அடித்துவிடும்" என்று கத்தினார்கள். இந்த மரத்திலேபேய் இருக்கிறதாக தாத்தா சொன்னார்...சரிதான். "பேய் இருந்திருந்தால் இன்னேரத்துக்குஅது நம்மை அடித்துக் கொன்றிருக்கும். தாத்தா சும்மா நம்மைப் பயமுறுத்தியுள்ளார்." என்று சிறுவர்களுக்குப் பதில் கூறினான்.
அதற்கு மற்ற சிறுவர்கள், "அதுசரி...உன் தாத்தா சொன்னபோது...சரி என்று தலையைஆட்டினாயே...அது ஏன்?" என்றுகேட்டதற்கு, "எதிர்த்துப் பேசினால் அவர் மனது கஷ்டப்படுமே. அதனால் தான் அவரை சமாதானப்படுத்தசரி என்றேன்".
மரத்தில் ஏறிய அந்தப் பையன்யார் தெரியுமா?..
எண்ணற்ற இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் சுவாமி விவேகானந்தர்தான், அந்தச்சிறுவன். அதோ படத்தில் இருக்கிறார்தானே, அவரே தான்.

Reviewed by haru
on
September 22, 2012
Rating:
No comments