Ads Below The Title

சிறுவர் கதைகள் - பேயால் வந்த வாழ்வு

பேயால் வந்த வாழ்வு!
முன்னொருகாலத்தில் மதின் என்ற இளைஞன்பொன்னேரி என்ற சிறிய கிராமத்தில்வாழ்ந்து வந்தான். இவனது பெற்றோர் இறந்துவிட்டனர். இனி அந்த ஊரில் இருக்கப்பிடிக்காமல் பக்கத்திலுள்ள ஊருக்கு வேலை தேடிச்சென்றான். உச்சி வெயில் அதிகமானது.

அப்போதுஆலமரத்தடியில் படுத்து தூங்கினான். அவனை யாரோ தட்டி எழுப்புவதுபோல் இருந்தது. துõக்கம் கலைந்துவிழித்த போது ஒரு பேய்மரத்தின் கிளையில் உட்கார்ந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்ததும் அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது. பேய்... பேய்... என்று அலறினான்.
 
தம்பிபயப்படாதே... நானும் உன்னைப் போல்மனிதன் தான். தற்சமயம் பேயாகஇருக்கிறேன்.''

மதினுக்குகை கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான்.

உன் பெயரென்ன தம்பி?''

மதின்!''

எங்கேபோய்க் கொண்டிருக்கிறாய்?''

வேலைத்தேடி நகரத்திற்குச் சென்று கொண்டிருக்கிறேன்.''

நானும்உன்னைப் போல் இருந்தவன் தான். நூறு வருடங்களுக்கு முன்வாழ்ந்து வந்தேன். ஒரு நாள் இந்தகாட்டிற்கு வந்தேன். இங்கே தவம் செய்தமுனிவரைப் பார்த்து கேலியாக சிரித்தேன். ஆத்திரம்அடைந்த முனிவர் என்னை பேயாகும்படிசபித்துவிட்டார். பிறகுநான் அவரைப் பார்த்து மன்றாடினேன்.

ஐயா, தயவு செய்து இந்தச்சாபத்திற்கு ஏதேனும் விமோசனம் சொல்லுங்கள். இப்படி மனித பேயாய் நான்எத்தனை நாட்கள் திரிவது?'' என்றுகேட்டான்.

சரி, நீ கெஞ்சிக் கேட்டுக்கொள்வதால் உனக்கு விமோசனம் தருகிறேன். உன் கதையை எந்த மனிதன்பொறுமையோடு கேட்கிறானோ அன்று நீ மீண்டும்மனிதனாவாய். பிறகு விண்ணுலகுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இம்மனிதப் பிறவியிலிருந்து விடுதலை அடைவாய்...'' என்றார்.

பல காலம் நான் மற்றவர்களிடம்என் கதையை சொல்ல முயன்றேன். அவர்கள் என்னைப் பார்த்ததும் ஓடிவிடுகிறார்கள்'' என்று கூறிய பேய் மறைந்துபோய் அழகான வாலிபன் தோன்றினான். சிறிது நேரத்தில் அவன் மேல் எழுந்துவானத்தை நோக்கிச் சென்றான். என்னைஎப்போது நினைத்துக்கொண்டாலும் உனக்கு நல்லதே நடக்கும். நீ எடுத்த காரியத்திலும் வெற்றிஅடைவாய்'' என்ற பேய் மேகத்தின்நடுவில் மறைந்து போனது.

மதினுக்குஎல்லாமே கனவு போல் இருந்தது.

புதிய நகரை அடைந்தான். அங்கேநாடே விழாக்கோலம் கொண்டது. என்ன விஷயம் என்றுகேட்டான்.

உனக்குத்தெரியாதா? அரசரின் பிறந்த நாள்விழாவை நாளை கொண்டாட இருக்கின்றனர். வாண வேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள், போட்டிகள்எல்லாம் நடக்கும். ஏழைகளுக்கு அன்னதானம் நடக்கும். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும்அரண்மனை உபசரிப்பும் கொடுப்பார்கள்'' என்றான்.

சிலம்பம், மல்யுத்தம் என நடந்த அனைத்துபோட்டிகளிலும் வெற்றி பெற்று அரசரின்சிறப்பு விருந்தினராக விரும்பிய மதின் பேயை மனதில்நினைத்துக் கொண்டான். பேயின் உதவியால் எல்லாபோட்டிகளிலும் வென்றான்.

அவனுக்குஓர் அறை கொடுக்கப்பட்டது. அரண்மனைஉணவும் வழங்கப்பட்டது. ஒரு வாரம் தங்கிவிருந்துண்டு தன் அறைக்குச் சென்றான்மதின்.

அங்கிருந்தஅழகிய மஞ்சத்தில் படுத்தவுடன் உறக்கம் வந்துவிட்டது. நடுஇரவில் விழித்த மதின், தன்அறையில் சிறிது நேரம் உலாவினான். அப்போது சுவற்றில் காட்டெருமையின் கொம்பு பதிக்கப்பட்டுள்ளதைக் கண்டான். அதைப்பிடித்துப் பார்த்தபோது "கிர்ர்...' என்ற சப்தம் கேட்டது.

அவனுக்குமிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது. அதைப் பிடித்துத் திருகியபோது, தரையில் ஒரு சுரங்கவழி ஏற்பட்டது. ஒரு தீபத்தைக் கையில்எடுத்துக் கொண்டு படிக்கட்டுகளில் இறங்கினான்.

கீழே பெரிய அறை ஒன்றுஇருந்தது. எங்கு பார்த்தாலும் போர்ஆயுதங்களும் முத்து மாலைகளும் தங்கமாலைகளும் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தன.

தூரத்தில் யார் நின்றுகொண்டிருப்பது? அமைச்சர் ராஜசேகர்... இங்கு என்ன செய்கிறான்? உற்றுப் பார்த்தான். நகைகள், பணத்தை திருடிபையில் போட்டுக் கொண்டிருந்தான்.

அங்கிருந்தவாளை உருவி, அவனை வெட்டச்சென்றான் மதின்.

அதற்குள்ரகசிய வழியில் தப்பி விட்டான்அமைச்சன்.
பிறகு மதின் தன் இருப்பிடத்திற்குச்சென்று காட்டெருமைக் கொம்பைத் திருகி தரையை முன்புபோல மூடச் செய்தான்.

இதை எப்படியாவது அரசரிடம் சொல்ல வேண்டும் என்றுமனதில் உறுதி செய்து கொண்டான்.

இரவோடுஇரவாக அமைச்சரை பற்றி மன்னனிடம் கூறினான்.

பல நாட்களாக பொக்கிஷ அறையில் திருடுபோவதை அறிந்திருந்த அரசர், எத்தனையோ காவல்போட்டும் கண்டுபிடிக்க முடியாத ரகசியத்தை மதின்சொன்னதும் மகிழ்ந்தார். உடனே அமைச்சரை கைதுசெய்ய ஆட்களை அனுப்பினார் மன்னர்.

குடும்பத்துடன்தப்ப இருந்த அமைச்சரை கைதுசெய்து சிறையில் அடைத்தான் அரசன். அரசனது முன்னோர்கள்வைத்திருந்த இந்த ரகசிய வழிஅரசனுக்கே தெரியவில்லை. இதை எப்படியோ அறிந்தஅமைச்சன், இத்தனை நாட்களாக ரகசியவழியில் நுழைந்து நகை திருடிய விஷயம்இப்போது தான் புரிந்தது. மதினைபாராட்டிய மன்னன் அவனையே தன்அமைச்சனாக்கிக் கொண்டான். பேயால் தனக்கு கிடைத்தவாழ்வை எண்ணி மகிழ்ந்தான் மதின்.
சிறுவர் கதைகள் - பேயால் வந்த வாழ்வு சிறுவர் கதைகள் - பேயால் வந்த வாழ்வு Reviewed by haru on October 13, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]