சிறுவர் கதைகள் - குட்டிக் கழுகு
குட்டிக்கழுகு
அந்தக் குட்டிகழுகு சும்மா இருக்காது. எப்போதும் எதையாவது தொணதொணவென்று கேட்டுக்கொண்டேயிருக்கும. அம்மாகழுகும் முடிந்தவரை குட்டிகழுகின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்.. ஒருநாள் காட்டிற்கு வெளியே அம்மாவோடு போய்கொண்டிருந்த போது முதன்முறையாக மனிதர்களைப் பார்த்தது. அவர்கள் நடந்து சென்றவிதம் அதற்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது. அது காட்டில் நிறைய பறைவகள் மிருகங்களைப் பார்த்திருக்கிறது. எந்த உயிரினமும் இப்படி நிமிர்ந்த நிலையில் நடந்துசென்று பார்த்ததில்லை. அது அம்மா கழுகிடம் “இதுலாம் என்னதுமா! இதுங்க ஏன் இப்படி நடந்து போகுதுங்க?”- என்று கேட்டது.
அதற்கு அம்மாகழுகு “இவங்க மனுசங்க! அது கால்கள் கிடையாது!கைகள்! அவங்க இப்படித்தான் நடப்பாங்க!” என்றது.
“அப்படியா!” என்று ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டது அந்தக் குட்டிகழுகு.
ஒருநாள் திருமண ஊர்வலம் ஒன்று சென்று கொண்டிருப்பதைப் பார்த்தது. அது திருமண ஊர்வலம் என்பேதே அம்மா சொல்லித்தான் அதற்குத் தெரியும். அதில் சென்றவர்கள் தங்கள்மீது எதைஎதையோ போட்டிருந்தார்கள் “இவங்கல்லாம் என்னத்தமா மேல போட்டிருக்காங்க?” என்று அம்மாகழுகிடம் கேட்டது.
“அவர்கள் அணிந்திருப்பது ஆடைகளும் ஆபரணங்களும்! ஆடைகள் மானத்தைக் காக்க! ஆபரணங்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ள!” என்றது அம்மா கழுகு.
“மானமா? மனிதர்களுக்கு மட்டுந்தான் மானமா? மற்ற உயிரினங்களுக்குக் கிடையாதா? எந்தப் பறவையும் மிருகமும் ஆடைகள் அணிவதில்லையே? அதிலும் ஆபரணங்கள்…! அவைகள்தான் எப்படிக் கண்ணைப் பறிக்கிறது! இது போன்ற ஒன்றை எனக்குப் போட்டு அம்மா ஏன் அழகு பார்க்க மாட்டேன் என்கிறாள்?” இப்படி கேள்விகள் பல மண்டையைக் குடைய யோசித்தது அந்தக் குட்டிக்கழுகு.
மாட்டிறைச்சிக் கழிவுகளைத் தேடி அவ்வபோது ஊருக்குள் சென்றுவருவது வழக்கம். அவ்வாறு போய்வரும் போதெல்லாம் அந்தக் குட்டிகழுகு நிறையக் கட்டிடங்களைப் பார்த்தது. அது அம்மாகழுகிடம் “இதெல்லாம் என்னதுமா” என்றுகேட்டது. “இவைகள் மனிதர்களின் வீடுகள் அதாவது வசிப்பிடங்கள்!” என்றது அம்மாகழுகு.
அந்தக் குட்டிகழுகு தனது குடும்பத்தாருடன் ஒரே கூட்டமாக ஒரு குன்றின் பாறை இடுக்கில் வசித்து வருகிறது. சில பறவைகள் கூடுகட்டி வசிப்பதைப் பார்த்திருக்கிறது. கொஞ்சம் பெரிய மிருகங்கள் குகைளில் இருக்கும். ஆனால் மனிதர்கள் மட்டும் வீடு கட்டி வசிக்கிறார்கள். அந்த குட்டிகழுகின் மனத்தில் ஏதோ தோன்ற அது அம்மாகழுகிடம் கேட்க வாயெடுத்தது “இதோ பார் மனுசங்க நம்மள மாதிரி கிடையாது! அவங்களுக்கு பகுத்தறிவு உண்டு! அவங்க செய்யுற ஒவ்வொரு செயலுக்கும் விளக்கம் கேட்டு என்னைப் படுத்தக்கூடாது! புரியுதா?”- என்ற அம்மாகழுகு குட்டிகழுகைத் திட்டி விரட்டியது.

அம்மா திட்டியதற்காக வாயை மூடிக்கொண்டது அந்த குட்டிகழுகு. இருந்தாலும் அதற்கு மனிதர்களின் வாழ்க்கை மீது ஒரு சுவராசியம் வந்து விட்டது. அது ஒவ்வொரு முறை வெளியே போகும்போதும் வரும்போதும் தான் கடந்து சென்ற மனிதர்களை உற்றுக்கவனிக்க ஆரம்பித்தது. அவ்வாறு கவனித்ததில் ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வேலையைச் செய்து கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டது. ஒரு மனிதன் நிலத்தை பண்படுத்தி உழுதான். அவன் தன்னை உழவன் என்றான். ஒருவன் கடைவீதியில் பலவிதமானப் பொருட்களை வைத்து விற்பனை செய்தான். அவன் தன்னை வணிகன் என்றான். ஒருவன் மைதானத்தில் ஓடினான். அவன் தன்னை விளையாட்டுவீரன் என்றான். ஒருவன் உடல்நலம் குன்றியவர்களுக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டும் ஒருவன் உணவு சமைத்துக்கொண்டும் ஒருவன் மூட்டை தூக்கிக்கொண்டும் (தொழிலாளி)இப்படி ஆளுக்கொரு வேலை செய்தார்கள்.
அந்தக் குட்டிகழுகு அனைவரிடமும் சென்று மறக்காமல் “நீங்கள் எதற்காக இந்த வேலை செய்கிறீர்கள்?” என்ற கேள்வியைக் கேட்டது. அதற்கு அவர்கள் அனைவரும் சொல்லி வைத்தாற்போன்று “உணவு உடை இருப்பிடம் முதலான அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள!” என்ற பதிலை சொன்னார்கள். அவர்களின் பதிலிலிருந்து குட்டிகழுகு ஒரு நியதியைப் புரிந்து கொண்டது. உணவு உடை இருப்பிடம் முதலான அடிப்படைத் தேவைகள் நிறைவேற வேண்டுமானால் ஒரு மனிதன் உழைக்க வேண்டும் என்பதான் அந்த நியதி.
அதற்கு ஓரு சந்தேகம். அனைத்து மனிதர்களும் ஏதோ ஒரு வேலை பார்க்கத்தான் செய்கிறார்கள். இருந்தாலும் அடிப்படைத் தேவைகள் மட்டும் அனைவருக்கும் ஏன் ஒன்று போல் நிறைவேறவில்லை என்பதுதான் அந்த சந்தேகம்.
ஒரு மனிதன் ஒரு வேளை உணவிற்கும் வழியின்றித் தவிக்க இன்னொரு மனிதனோ வகைவகையாய் உண்டு களித்தான். ஒரு மனிதன் உடுத்த சிறுகந்தையும் இன்றி அவதிப்பட இன்னொரு மனிதனோ விதவிதமாய் உடுத்தி மகிழ்ந்தான். ஒருமனிதன் கால் நீட்டிப் படுத்துறங்கவும் வசதியற்ற குடிசையில் முடங்கிக் கிடக்க இன்னொரு மனிதனோ மாடமாளிகைகளையும் கூடகோபுரங்களையும் இல்லங்களாக்கிக் கொண்டு வசித்தான். எதனால் இந்த முரண்பாடு? அந்தக் குட்டிகழுகிற்கு விளங்கவில்லை.

அம்மா பாவம். நான் அவளை ரொம்பத்தான் படுத்துகிறேன். அவளுக்கு வேலைப்பளு அதிகம் இதற்கு தாத்தாதான் சரிப்பட்டு வரும் அதுதான் ஓய்வாக இருக்கும் என்று எண்ணிய குட்டிகழுகு தாத்தாவிடம் போனது. தாத்தாகழுகு மொட்டைப்பாறையின் உச்சியில் அமர்ந்து காலை வெயிலில் இதமாகக் குளிர்காய்ந்து கொண்டிருந்தது. அது சொன்னது. “நான் உன் சந்தேகத்தைத் தீர்த்து வைக்குறேன்! முதல்ல நீ போயி அந்த எலியைப் பிடிச்சுட்டு வா!” என்று தரையில் ஓடிக்கொண்டிருந்த ஒரு எலியைச் சுட்டிக்காட்டியது.
குட்டிகழுகும் பறந்து போனது. அது தரையை நெருங்கும் சமயம் எப்படியோ சுதாரித்துக்கொண்ட எலி ஓடி வளைக்குள் புகுந்து தப்பித்தது. குட்டிகழுகு விடவில்லை. நான்கைந்து முறை முயற்சித்தது. அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தன. ஒரு கட்டத்தில் உடலும் மனமும் சோர்ந்து போன குட்டிகழுகு தாத்தாவிடம் வந்து “போங்க தாத்தா! என்னால முடியல! நீங்க போயி பிடிச்சுட்டு வாங்க!” என்றது. “சரி” என்ற தாத்தா கழுகு முதல்முயற்சியிலேயே பிடித்து விட்டு வந்தது. பிடிபட்ட எலி இரண்டு கழுகுகளுக்கும் இரையானது.

“தாத்தா! நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லலியே?” கேட்டது குட்டிகழுகு.
“என்னால இரையப் பிடிக்க முடிஞ்சது! உன்னால முடியல! இதுதான் என் பதில்!, என்றது தாத்தாகழுகு. குட்டிகழுகு புரியாமல் பார்க்க அதுவே தொடர்ந்து சொன்னது. “உன்கிட்ட வேகம் இருந்த அளவுக்கு விவேகம் இல்ல” என்றது.
“இதுல என்ன விவேகம் வேண்டிக்கிடக்கு!” அலட்சியமாய் கேட்டது குட்டிகழுகு.
“இருக்குது!சொல்றேன்!” என்ற தாத்தாகழுகு குட்டியை பக்ககத்தில் இருத்திக் கொண்டு சொல்ல ஆரம்பித்தது.
“எலியைப் பிடிக்க போறதுக்கு முன்னாடி எலி வளைய விட்டு எவ்வளவு தூரத்துல இருக்கு ஓடிப்போயி ஒளிஞ்சுக்குற தூரத்துல இருக்கா இல்லையான்னு நீ மனசுக்குள்ள ஒரு கணக்குப் போட்டுருக்கனும்! இது திட்டமிடல்! ஓடிப்போயி ஒளிஞ்சுக்க முடியாத தூரத்துக்கு அது வர்றவரைக்கும் நீ காத்திருந்துருக்கனும்! இது காலம் அதாவது பொறுமை! அப்படி ஒரு இடத்துக்கு வந்தவுடனே நீ விரைவாப்போயி அதைப் பிடிக்க முயற்சி பண்ணிருக்கனும்! இது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவது! இந்த மூனையும் நீ செய்யல! எல்லாத்துக்கும் மேலா ஒரு செயலைச் செய்து முடிக்கனும்ங்குற உத்வேகம்! அது சுத்தமா உன்கிட்ட இல்லை! இரை பிடிக்குறது ஏதோ விளையாட்டு மாதிரிக் கிளம்பிப் போன! ஒரு வேளை இரையைப் பிடிக்க முடியாட்டாலும் உனக்குக் கவலை இல்ல! நானோ அம்மாவோ உனக்கு இரை கொடுத்துருவோம்!” என்றது தாத்தாகழுகு.
“தாத்தா இதுக்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்?” கேட்டது குட்டிகழுகு.
“இரையப் பிடிக்குறதுக்கு உனக்கு என்ன விதிமுறைகள் சொன்னேனோ அதே விதிமுறைகள்தான் மனுசங்களுக்கும்! நமக்கு இரை மனுசங்களுக்கு இலக்கு! வாழ்க்கையத் திட்டமிடத் தெரிஞ்சவங்க உரியகாலம் வர்றவரைக்கும் பொறுமையாக் காத்ததிருக்கத் தெரிஞ்சவங்க கிடைச்ச வாய்பபை வீணடிக்காதவங்க எல்லாத்துக்கும் மேலா ஒரு செயலை செய்து முடிக்கனும்ங்குற உத்வேகம் அதாவது தன்முனைப்பு நிறைஞ்சவங்க வாழ்க்கைல ஜெயிக்கிறாங்க! அவங்க தங்களோட அடிப்படைத் தேவைகளையும் சிறப்பா நிறைவேத்திக்குறாங்க! இந்த தன்முனைப்பு இல்லாதவங்க கஷ்டப்படுறாங்க!” என்றது தாத்தாகழுகு.
இப்போது குட்டிகழுகிற்கு அழகான சந்தேகம் ஒன்று வந்தது. அது கேட்டது. “கடவுள்தான மனுசனைப் படைச்சாரு! அப்ப எல்லா விஷயமும் எல்லா மனுஷங்களுக்கும் ஒன்னு போலத்தான கிடைக்கனும்! ஏன் ஒரு மனுஷனுக்கு கூடுதலாவும் இன்னொரு மனுஷனுக்கு குறைச்சலாவும் கிடைக்கனும்?” தாத்தாகழுகு கொஞ்சம் அதிர்ச்சியடைந்தது. எத்தனை நியாயமான கேள்வி? இருந்தாலும் அது அசரவில்லை. அது “மனுஷங்க வாழ்க்கை ரொம்ப சிக்கலானது! அதுல கோடி விஷயங்கள் உண்டு! நாம அதுல தனிமனித முயற்சிங்குற ஓரு விஷயத்தை மட்டும் பேசிருக்கோம்! இப்போதைக்கு இது போதும்!” என்று குட்டிகழுகின் வாயை அடைத்தது. குட்டிகழுகும் தனது சந்தேகம் ஓரளவு தீர்ந்துவிட்ட, அங்கிருந்து பறந்து போனது.
கதையாசிரியர் :- மா.பிரபாகரன்
சிறுவர் கதைகள் - குட்டிக் கழுகு
Reviewed by haru
on
March 05, 2013
Rating:
No comments