Ads Below The Title

சிறுவர் கதைகள் - சவாலே சமாளி!

ஆரவல்லி மலைக் காட்டில் குளம் ஒன்று இருந்தது. அதில், ஆமை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த ஆமை குளக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தது. அதன் எதிரில் பெண் புலி ஒன்று வந்தது.

பெண் புலியே! வணக்கம்!'' என்றது ஆமை.

பதிலுக்கு அந்தப் புலி வணக்கம் சொல்லவில்லை. அதன் வணக்கத்தை ஏற்றுக் கொள்வது போலத் தலையை அசைத்தது.

நான் வணக்கம் சொன்னேன். நீ வணக்கம் சொல்லாமல் தலையை அசைக் கிறாயே'' என்று கோபத்துடன் கேட்டது ஆமை.

இந்தக் காட்டில் நானும், என் கணவரும் வலிமையானவர்கள்; எங்களுக்கு அஞ்சி நீங்கள் வணக்கம் சொல்கிறீர்கள். நாங்கள் யாருக்கும் வணக்கம் சொல்ல வேண்டியது இல்லை'' என்று ஆணவத் துடன் சொன்னது பெண் புலி.

இதைக் கேட்டு எரிச்சல் அடைந்த ஆமை, “உனக்கு வலிமை அதிகமா? உன் கணவருக்கு வலிமை அதிகமா?'' என்று கேட்டது.

என் கணவருக்குத்தான் வலிமை அதிகம்'' என்றது பெண் புலி.

உன் கணவரின் முதுகில் நான் சவாரி செய்து காட்டுகிறேன். அவர் குதிரை போல என்னைச் சுமந்து வருவார். இதை நீ பார்க்கத்தான் போகிறாய். அதன் பிறகு உன் ஆணவம் அடங்கும். எல்லாருக்கும் வணக்கம் செலுத்துவாய்'' என்றது ஆமை.

கோபத்துடன், தன் கணவரிடம் வந்தது பெண் புலி.

அந்த ஆமை உங்கள் மேல் குதிரை போலச் சவாரி செய்யப் போகிறதாம். என்ன திமிர் இருந்தால், அது என்னிடமே சொல்லும். நீங்கள் அதற்குத் தகுந்த தண்டனை தர வேண்டும். அப்போதுதான் என் உள்ளம் அமைதி அடையும்'' என்றது.

அப்படியா அந்த ஆமை சொன்னது? அதை இங்கே இழுத்து வந்து உன்னிடம் மன்னிப்பு கேட்க வைக்கிறேன். வர மறுத்தால், அது உயிருடன் இருக்காது'' என்று கோபத்துடன் உறுமியது ஆண் புலி.

அங்கிருந்து புறப்பட்ட புலி, ஆமையைத் தேடி அலைந்தது. குளக்கரையில் ஆமையைப் பார்த்தது.

நீ என் மேல் குதிரை போலச் சவாரி செய்வதாகச் சொன்னாயா?'' என்று கோபத்துடன் கேட்டது.

புலியாரே! உம்மைப் பற்றி நான் அப்படிச் சொல்வேனா? யாரோ உம்மிடம் பொய் சொல்லி இருக்கின்றனர்'' என்று நடுங்கியபடி சொன்னது.

வேறு யாராவது சொல்லி இருந்தால், நம்பி இருக்க மாட்டேன். என் மனைவிதான் அப்படிச் சொன்னாள். என் முன் பேசுவதற்கே நீ நடுங்குகிறாய்... உன்னைப் பார்க்கப் பரிதாபமாக உள்ளது. நீ என் மனைவியிடம் வந்து அப்படிச் சொல்லவில்லை என்று சொல்லி மன்னிப்பு கேள். உன்னை உயிருடன் விடுகிறேன். இல்லையேல் இங்கேயே கொன்று விடுவேன்'' என்று உறுமியது புலி.

நான் எங்கே வேண்டுமானாலும் வந்து அப்படிச் சொல்லவில்லை என்று சொல்கிறேன். ஆனால், இப்போது என்னால் வர முடியாது. இன்னொரு நாள் வந்து சொல்கிறேன்!'' என்றது ஆமை.

இப்போது உன்னால் வர முடியாதா? ஏன்?'' என்று உறுமியது புலி.

எனக்குக் காய்ச்சல் அடிக்கிறது. உடம்பு நெருப்புப் போலச் சுடுகிறது. இந்த நிலையில் என்னால் இரண்டடி தொலைவு கூட நடக்க முடியாது. காய்ச்சல் சரியானதும், நானே உங்கள் மனைவியிடம் வருகிறேன். நான் அப்படிச் சொல்லவில்லை என்று சொல்கிறேன். இப்போது என்னை வற்புறுத்தாதீர்'' என்று கெஞ்சியது ஆமை.

உன்னால் நடக்கத் தானே முடியாது. என் முதுகில் அமர்ந்துகொள். உன்னை என் மனைவியிடம் தூக்கிச் செல்கிறேன். அவளிடம் அப்படிச் சொல்லவில்லை என்று சொல். பிறகு உன்னை இங்கே கொண்டு வந்து விடுகிறேன்'' என்றது புலி.

காய்ச்சலில் நடுங்குவது போல நடித்த அது, “அப்படியே செய்கிறேன்'' என்றது.

புலியின் மேல் ஏறி அமர்ந்தது. அதைச் சுமந்து கொண்டு புலி செல்லத் தொடங்கியது.

புலியாரே! நில்லும்'' என்று குரல் கொடுத்தது ஆமை.

ஏன் நிற்கச் சொன்னாய்?'' என்றபடியே புலி நின்றது.

புலியாரே! உன் முதுகில் அமர்ந்து இருக்க என்னால் முடியவில்லை. காய்ச்சலில் கீழே விழுந்து விடுவேன் போல உள்ளது!'' என்றது ஆமை.

என் மனைவியிடம் நீ வந்தே ஆக வேண்டும். கீழே விழாமல் இருக்க, என்ன செய்ய வேண்டும்? சொல் செய்கிறேன்!''

நீண்ட கொடி ஒன்றை உங்கள் வாயில் பற்றிக் கொள்ளுங்கள். அதன் இரு முனைகளையும் நான் இறுகப் பிடித்துக் கொள் கிறேன். அதன் பிறகு நீங்கள் சென்றால் நான் கீழே விழ மாட்டேன்!''

அப்படியே செய்கிறேன்'' என்ற புலி அருகில் இருந்த கொடி ஒன்றை இழுத்தது. அதன் நடுப் பகுதியைத் தன் வாயில் கவ்விக் கொண்டது. அதன் இரு முனைகளையும் ஆமை பிடித்துக் கொண்டது.

இப்போது நாம் செல்லலாமா?'' என்று கேட்டது புலி.

இங்கே நிறைய கொசுக்கள் என்னைக் கடிக்கின்றன. அவை கடித்தால் என் காய்ச்சல் அதிகமாகி விடும். குச்சி ஒன்றை எடுத்து என்னிடம் தாருங்கள் அதை வைத்து கொசுக்களை விரட்டுகிறேன். இந்த உதவி மட்டும் செய்யுங்கள்'' என்றது ஆமை.

அங்கும், இங்கும் தேடி குச்சி ஒன்றை எடுத்தது புலி. அதை ஆமையிடம் தந்தது.

குச்சியை வாங்கிய ஆமை, “இனி நான் கீழே விழ மாட்டேன். நீங்கள் செல்லலாம்'' என்றது.

அதைச் சுமந்து சென்ற புலி, தன் இருப்பிடத்தை அடைந்தது.

உரத்த குரலில், “அடியே ஆமையை அழைத்து வந்திருக்கிறேன். என் மேல் சவாரி செய்வதாக அது சொல்லவில்லையாம். அதைச் சொல்ல ஆமை வந்துள்ளது. வெளியே வந்து பார்'' என்று அழைத்தது.

அப்படியா?'' என்றபடியே குகைக்கு வெளியே வந்தது பெண் புலி.

தன் கணவனின் மேல் அமர்ந்து இருந்த ஆமையைப் பார்த்தது. அந்த ஆமையின் கையில் கொடி இருந்தது. அது கடிவாளம் போலப் புலியின் வாயில் மாட்டப்பட்டு இருந்தது. இன்னொரு கையில் சவுக்கு போலக் குச்சி இருந்தது.

தன் கணவனின் மேல் அது சவாரி செய்தபடி இருந்ததைப் பார்த்தது. அதனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அந்தக் காடே அதிரும்படி சிரித்தது.

மனைவி இப்படிச் சிரிப்பதைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்தது ஆண் புலி.

ஏன் சிரிக்கிறாய்? சொல்லிவிட்டுச் சிரி'' என்று எரிச்சலுடன் உறுமியது.

உங்கள் மேல் சவாரி செய்வதாகத்தான் இந்த ஆமை சொன்னது. அப்படிச் சொன்னதை உண்மையாக்கிவிட்டதே. உங்கள் மேல் சவாரி செய்து வந்துள்ளதே... நீங்கள் குதிரை போல அதைச் சுமந்து வந்துள்ளீரே. இந்தக் காட்சியைப் பார்த்ததும், என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை'' என்று சிரித்தது பெண் புலி.

ஆண் புலிக்குத் தான் ஏமாந்தது அப்போதுதான் புரிந்தது. ஆமையின் அறிவுக்கூர்மையை பார்த்து வியந்தது.

நீ உண்மையிலேயே புத்திசாலித்தான்!'' என்று ஆமையை பாராட்டியது ஆண் சிங்கம்.

சரி! சரி! கோச்சிக்காதீங்க... நானும் ஒரு ஜாலிக்குத்தான் இப்படிச் செய்தேன்!'' என்று சொல்லி சமாளித்தது ஆமை.

நன்றி தினமலர்! 
சிறுவர் கதைகள் - சவாலே சமாளி! சிறுவர் கதைகள் - சவாலே சமாளி! Reviewed by haru on April 04, 2013 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]