முல்லா கதைகள் - பதிலுக்குப் பதில் | Mulla Stories in Tamil
முல்லா கதைகள் - பதிலுக்குப் பதில்
ஒரு நாள் முல்லா ஒரு துணிக் கடைக்குச் சென்றார். அங்கு தலைப்பாகைகளும் விற்கப்பட்டன. தமக்கு ஒரு தலைப்பாகை வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் முல்லா அங்கு சென்றார். அழகான ஒரு தலைப்பாகையைத் தேர்ந்தெடுத்து விலை பேசினார்.
பிறகு தலைப்பாகையைத் தலையில் அணிந்து கொண்டார்.

உங்கள் விருப்பம்போல எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார் கடைக்காரர்.
முல்லா தலைப்பாகையை கழற்றிக் கொடுத்து விட்டு சால்வையை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். ஐயா, நீங்கள் வாங்கிய சால்வைக்குப் பணம் கொடுக்கவில்லையே என்று கடைக்காரர் கேட்டார். நான் ஏன் பணம் கொடுக்க வேண்டும். தலைப்பாகைக்குப் பதிலாகத்தானே சால்வையை வாங்கிக் கொண்டேன் என்றார் முல்லா.

அப்படியானால் தலைபாகைக்கு பணம் கொடுங்கள் என்றார் கடைக்காரர். தலைப்பாகைக்கு ஏன் பணம் தரவேண்டும்? அதைத்தான் உங்களிடம் திருப்பி கொடுத்துவிட்டேனே? என்று கூறிவாறு கடையை விட்டுக் கம்பீரமாக வெளியே நடந்தார்.
கடைக்காரருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவருடைய மூளை குழம்பி விட்டது.
Click here for more Mulla Stories in Tamil
முல்லா கதைகள் - பதிலுக்குப் பதில் | Mulla Stories in Tamil
Reviewed by haru
on
August 24, 2013
Rating:

No comments