முல்லாவின் கதைகள் - முல்லா வழங்கிய தீர்ப்பு | Mulla Stories in Tamil
முல்லா வழங்கிய தீர்ப்பு
முல்லா நீதிபதி பதவி வகித்த சமயம் நிகழ்ந்த நிகழச்சி இது.
ஒரு நாள் வெளியூர்க்காரன் ஒருவன் முல்லாவிடம் வந்து "நீதிபதி அவர்களே, நான் இந்த ஊருக்குப் புதிது. நான் இரவு இந்தப் பக்கம் நடந்து சென்றபோது உங்களுர் ஆள் ஒருவன் என்மீது பாய்ந்து என்னிடமிருந்த பணம், தலைப்பாகை சட்டை ஆகிய எல்லாவற்றையும் திருடிக் கொண்டு போய்விட்டான், தயவு செய்து கண்டு பிடித்து என் உடமைகளை மீட்டுத் தரவேண்டும்" என்று வேண்டிக் கொண்டான்.
"நீர் சொல்வதைப் பார்த்தால் இது எங்கள் ஊர் திருடன் கை வரிசையாக எனக்குப்படவில்லை. இது வெளியூர்த் திருடனின் வேலைதான்" என்றார் முல்லா.
"இவ்வளவு தெளிவாக எவ்வாறு கூறுகிறீர்கள் ஐயா!" என்ற வெளியூர்க்காரன் வியப்போடு கேட்டான்.
"எங்கள் ஊர்த்திருடனாக இருந்தால் உமது இடுப்புத் துணியைக்கூட விட்டிருக்க மாட்டான். கௌபீனதாரியாக விட்டு விட்டு இடுப்புத் துணியையும் அவிழ்த்துக் கொண்டு போயிருப்பான்" என்று முல்லா கூறினார்.
முல்லாவின் கதைகள் - முல்லா வழங்கிய தீர்ப்பு | Mulla Stories in Tamil
Reviewed by haru
on
August 24, 2013
Rating:
No comments