ராஜாவும் மந்திரிகளும் | The Little King

Ads Below The Title
ராஜாவும் மந்திரிகளும்

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தான். அவன் படிக்காதவன். உலக அறிவு என்பது சிறிதும் கிடையாது. 

King ராஜா Cartoon

மழைக்குக் கூட பள்ளிக்கூடத்துப் பக்கம் ஒதுங்கியது இல்லை. இவன் தன்னை எல்லா புலவர்களுமே வாழ்த்திப் பாடணும் என்று நினைப்பான். பாடிய புலவர்களின் பாட்டுச் சுவடியினுடைய எடைக்கு எடை பொன் கொடுப்பான்.

பாட்டின் நயமோ, நிலையோ தெரியாத இவன் இவ்வாறு பரிசளிப்பது வேடிக்கையாகவும் விநோதமாகவும் புலவர்க்களுக்கு இருந்தது. இறுதியில் ஒரு புலவன் அரசனுக்குப் புத்தி புகட்ட விரும்பினான். அரசன் தராதரம் இல்லாமல் எல்லா பாடல்களையும் மதிப்பது கண்டு கோபம் கொண்டான்.

இந்தப் புலவன் நேராக மன்னனிடம் சென்றான். "நான் தங்களைப்பற்றி ஒரு பாடல் புனைந்துள்ளேன்," என்றான்.

"எங்கே பாடு பார்க்கலாம்," என்றார் மன்னர். புலவர் இனிமையாக ஒரு பாடலைப் பாடி முடித்தான். மன்னனுக்குப் பொருள் புரியாவிட்டாலும் பாடலைக் கேட்க சுகமாக இருந்தது.

பின்னர் அரசர் மந்திரியைக் கூப்பிட்டு, "சரி இந்தப் புலவருக்கு எடைக்கு எடை பொன் கொடுத்து அனுப்பு," என்றார். அவ்வாறு பொன் கொடுக்க முன்வந்தார் அமைச்சர்.

"உன் பாட்டைக் கொண்டு வாப்பா," என்றார் மந்திரி.

"அதை என்னால் தூக்கி வர முடியவில்லை. தயவு செய்து இரண்டு பேரை அனுப்புங்கள்," என்றார் புலவர்.

மந்திரி வெளியே வந்து பார்த்தார். ஒரு வண்டியில் ஒரு கரும் பாறைக்கல் ஏற்றி வரப்பட்டிருந்தது. அக்கல்லில் அப்பாடல் வெட்டப்பட்டிருந்தது. பின்னர் வேலைக்காரர்கள் மூலம் பாறைக்கல்லைத் தூக்கி எடை போட்டு பொன் கொடுக்க முனைந்தனர் முடியவில்லை. அன்றிலிருந்து ராஜா அந்த வழக்கத்தை விட்டு விட்டார்.

அத்துடன் தான் கல்வி அறிவு அற்றவனாக இருப்பது நல்லதல்ல என உணர்ந்து ஒரு குருவை அமர்த்தி கல்வி அறிவு பெற்றான். அதன் பின் அவனது ஆட்சியில் அவன் நாட்டு மக்கள் சுபிட்சம் அடைந்தனர்.

உலகிலயே கல்விச் செல்வமே சிறந்த செல்வம்!

ராஜாவும் மந்திரிகளும் | The Little King ராஜாவும் மந்திரிகளும்  | The Little King Reviewed by haru on March 12, 2014 Rating: 5

No comments