Tenali Raman Stories in Tamil
Tenali Raman Stories in Tamil:
தெனாலிராமன் கதைகள் (Tenali Raman Kathaigal) - Read collection of fun and adventurous of Tenali Raman short stories (kathaigal) with pictures, PDF in Tamil language for Kids online.
வரலாறு:-
சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிராமத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் தெனாலிராமன் (Tenali Raman) பிறந்தார். இராமலிங்க சுவாமியின் நினைவாக இவருக்கு இராமலிங்கன் என்றே பெயரிடப்பட்டது.
இளமையிலேயே இவரின் தந்தை மரணமடைய குடும்பம் வறுமையில் வாடியது. இதனால் இவருடைய தாயார் தெனாலியில் இருந்த அவருடைய சகோதரனுடைய வீட்டில் வைத்தே வளர்த்தார். தாய்மாமன் ஆதரவில் தான் இராமலிங்கம் வளர்ந்தார்.
மற்றவர்களைச் சிரிக்க வைக்கும் ஆற்றல் இவரிடம் இயற்கையாகவே இருந்தது. இதன் விளைவாக உரிய பருவத்தில் பள்ளியில் இவர் சேர்ந்தாலும் படிப்பில் கவனம் செல்லவில்லை. அகடவிகட கோமாளித் தனங்களில் தான் இவருடைய அறிவும் ஆற்றலும் ஜொலித்தன. நாட்கள் கடந்தன. தனது ஆறாம் வயதிலேயே விகடமாகப் பேசுவரில் வல்லமை பெற்றார். அதனால் அவன் பிற்காலத்தில் தெனாலிராமன் "விகடகவி" என்னும் பெயர் பெற்று பெரும் புகழுடன் விளங்கினார்.
இவருடைய நகைச்சுவைக்காக மன்னர் அவ்வப்போது ஏராளமான பரிசுகளை அளித்து ஊக்குவித்தார்.
பின் விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசன் கிருஷ்ணதேவராயரின் அரண்மனை "விகடகவி"யாக இருந்து மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தான். இவர் விஜயநகரத்தை ஆண்ட அரசர் கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அரசவைப் புலவர்களுள் (அஷ்டதிக் கஜங்கள்) ஒருவர்.
இந்திய மொழிகளில் இவரைப் பற்றிய பாடக் குறிப்புகள் இல்லாத மொழியே கிடையாது என்னும் அளவுக்குப் பிரபலமானவர்.
தெனாலிராமன் அரண்மனை விகடகவியானது எவ்வாறு என்பது பற்றியும் இவரது வாழ்கையில் நடைபெற்ற சில நகைச்சுவை நிகழ்வுகளை இங்கே உள்ள கதைகளால் அறியலாம்.
List of Tenali Raman Stories:
Tenali Raman Stories in Tamil
Reviewed by haru
on
March 05, 2014
Rating:
No comments