குழந்தைகள் என்றும் குழந்தைகளே! | தமிழ் அறிவு கதைகள்

Ads Below The Title

ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான், ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது. பையன் விடாமல் அழுதுகொண்டே இருந்தான்.வீட்டில் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள்.

ஒன்றும் நடக்கவில்லை. அழுகையும் நின்றபாடில்லை.

பிறகு ஒரு மனோதத்துவ டாக்டரிடம் அழைத்துப் போய் கவுன்சிலிங் செய்யச் சொன்னார்கள்.


அவரும் பல ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு கடைசியில் அவனிடம், 'இதோ பார் இந்த சின்ன விஷயத்திற்காக ஏன் இப்படி அழுகிறாய்? எங்க தாத்தா கூட போன வாரம் செத்துப் போனார். நான் என்ன அழுகிறேனா பார்' என்றார்.

உடனே அந்தப் பையன் "நீங்க என்ன, என்னை மாதிரி குட்டியில இருந்தா உங்க தாத்தாவை வளர்த்தீங்க?" என்றான் கோபத்தோடு.

டாக்டர் வாயே பேசவில்லை.

குழந்தைகள் என்றும் குழந்தைகளே!
குழந்தைகள் என்றும் குழந்தைகளே! | தமிழ் அறிவு கதைகள் குழந்தைகள் என்றும் குழந்தைகளே! |  தமிழ் அறிவு கதைகள் Reviewed by haru on June 15, 2014 Rating: 5

No comments