பெற்றோர் சொல் கேளீர் | சிறுவர் கதைகள்
புதுத்தெரு என்றொரு கிராமம், சின்னசாமி ஆடு மேய்ப்பவர், வழக்கமாக ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. சின்னசாமிக்கு புல்லாங்குழல் வாசிப்பது என்றால் அவ்வளவு பிரியம், ஆடுகள் மேயத்தவாறு மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசிக்க ஆரம்பித்தான்.
அந்த புல்வெளியைச்சுற்றி முள்வேலி போடப்பட்டிருற்தது. வேலியின் அருகே ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது.
வேலியின் மறுபுறம் ஒரு ஓநாய் ஒன்று வேட்டைக்கு காத்திருந்தது. ஓநாய் ஆட்டுக்குட்டியை பார்த்ததும், எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது
அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, சற்று ஆச்சரியமாக பார்த்தது, ஓநாயை முதல் முறையாக பார்த்ததினால் அதன் நோக்கம் ஆட்டுக்குட்டிக்கு தெரியாமல் “உனக்கு என்னவேண்டும்?” என்று பாசமாக கேட்டது.
ஓநாயோ “நண்பா, நண்பா… நீ பார்க்க ரொம்ப அழகா இருக்கீங்க, இங்கே இளம் புல் எங்கே கிடைக்கும் என்று கேட்டது, இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று, தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் தெரியுமா?! உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை…..” என்றது பாவமாக.
“ஓ...! அப்படியா! நீ புல் சாப்பிடுவாயா? நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி.
“சேச்சே…அதெலாம் சுத்தப் பொய்!” என்றது ஓநாய்.
ஓ அப்படியா “சரி அங்கேயே இருங்கள். நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய் ஜாலியா அதைச் சாப்பிட்டுவிட்டு, நன்பர்களாக சுற்றலாம்!” என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று.
ஓநாயின் திட்டம் தெரியாமலும், ஆடு சிநேகத்துடன் செற்றது, ஓநாயின் பக்கம் சென்றதும் அது சட்டென அதன் காலை பிடித்து கொண்டது.
ஆடு சத்தமாக கத்த தொடங்கியது, சின்னசாமியும், தாய் ஆடும் சத்தம் வந்த இடத்தை நோக்கி ஓடியது. ஓநாய் அதற்குள் ஆட்டுக்குட்டியின் கழுத்தை பிடிக்கும் நேரத்தில் அவர்கள் ஓநாயை அடித்து விரட்டிவிட்டார்கள்.
அந்த ஆட்டுக் குட்டிக்குத் தானாகத் தெரியவில்லை. அனுபவம் நிறைந்த அம்மா, அப்பா பேச்சை கேட்டிருந்தால், இந்த மாதிரி ஆபத்தில் மாட்டி கொள்ளாமல் இருந்திருக்கலாம், மதிப்பு வாய்ந்த தன் உயிரை காப்பாற்றிய சின்னசாமிக்கும் பெற்றோர்க்கும் நன்றியோடு நடந்து கொண்டது அந்த ஆட்டுக்குட்டி.
பெற்றோர் சொல் கேளீர் | சிறுவர் கதைகள்
Reviewed by haru
on
August 25, 2015
Rating:
No comments