வலைபதிவர் திருவிழா 2015 நன்றி மற்றும் பாராட்டு பதிவு | தமிழ் அறிவு கதைகள்
மின்னூல் வடிவில் காண இங்கே சொடுக்கவும்
https://drive.google.com/open?id=0B9JYBBmIY3qbSDlFcmx2eEllZkE
வலைபதிவர் திருவிழா 2015. நன்றி மற்றும் பாராட்டுப் பதிவு
https://drive.google.com/open?id=0B9JYBBmIY3qbSDlFcmx2eEllZkE
வலைபதிவர் திருவிழா 2015. நன்றி மற்றும் பாராட்டுப் பதிவு
எல்லோருக்கும் வணக்கம்
வலைபதிவர் திருவிழா மிகச் சிறப்பாக, நினைக்க முடியாத அளவுக்கு, கற்பனைக்கு எட்டாத அளவில், தன் வீட்டு விழாவைக்கூட இப்படி நடத்தி இருக்க முடியாத அளவுக்கு வெகு சிறப்பான ஏற்பாடுகளை ஐயா நா. முத்துநிலவன் முன்னிலையில் விழா குழு அமைத்து எல்லோரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்து, அடுத்த நிகழ்வு எப்போது வரும் என ஏங்க வைத்துவிட்டார்கள். வரவேற்ப்பில் இருந்து, நிகழ்வின் முடிவின் வரை எல்லாம் மிக மிக சிறப்பு.
ஆன்றோர்கள், சான்றோர்கள், இளைஞகர்கள் எல்லோரும் தங்களது அனுபவங்களை கருத்துகளை எல்லோருக்கும் வாரி வழங்கிவிட்டுப் போய் இருக்கிறார்கள்.
காலை உணவு முதல் கவனிப்போ கவனிப்பு...! சூடான சூப் வேணுமா?...! அது உங்களை தேடி வருகிறது, இருக்கையிலேயே இருங்கள் என அன்பான உபசரிப்புகள். சூப் கீழே கொட்டி விடுவார்கள் என் தெரிந்தும் அதை துடைப்பதற்கு கூட ஒரு குழு அமைத்து மிக மிக சிறப்பாக நடத்திவிட்டார்கள். அவர்களை பாராட்ட எனக்கு வயதில்லை என்றாலும் கூட அவர்களின் உபசரிப்புக்கு ஒரு மிக பெரிய, பெருமையான வணக்கம்.
அவையில் சிறப்பு விருந்தினர்களாக அழகப்பா பல்கலைகழக துணை வேந்தர் திரு எஸ் சுப்பையா அவர்கள், விக்கிபீடியா இந்திய ஒருகினைப்பாளர் திரு ரவிசங்கர் அவர்கள், தமிழ் இணைய கல்வி கழக உதவி இயக்குனர் தமிழ்பரிதி அவர்கள், கணினி தமிழ் சங்க நிறுவனர் திரு அருள்முருகன் அவர்கள் மற்றும் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
விழாவின் இடையிடையே முத்தமிழ் பாடல்கள், சினிமா கலவாத தமிழ் பாடல்கள் என சங்கீதத்திலும் மூழ்கடித்துவிட்டார்கள்.
முதியோர்கள் எல்லோரும் நாங்கள் எப்படி வலைதளத்திற்கு வந்தோம், எப்படி புகழ் பெற்றோம் என்கின்ற அனுபவத்தையும் பகிர்ந்து கொன்றார்கள்.
விழாவில் ஐயா திண்டுகள் தனபாலன் அவர்களுக்கு "வலை சித்தர்" என்கின்ற பட்டமும் வழங்கப்பெற்றது. இன்று முதல் ஐயா DD அவர்களை "வலை சித்தர்" என அன்போடு அழைப்போமாக...!
சென்னை வலைபதிவர் சார்பாக ஐயா (பெயர் ஞாபகம் வரவில்லை) அவர்களை விழாவில் சிறபித்த போது ஒரு விஷயத்தை சொன்னார், அவையில் ஒரே சிரிப்பு மழை.
முதன்முதலில் வலைபதிவர் சந்திப்புக்கு அனுமதி வாங்க காவல் நிலையம் சென்றபோது அங்கு காவலர்கள் "நீங்க எந்த மீனவ குப்பத்தை சேர்ந்த வலை செய்கிறவர்கள் என கேட்டுள்ளார்கள் " அரங்கத்தில் சிரிப்பலை...! பின் அவர்கள் ஒருவழியாக அந்த வலை இல்லை, இது இணைய வலை எனக்கூறி அனுமதி வாங்கி நடத்தி இருக்கிறார்கள்.
விழாவினை நேரலையில் காண சிறப்பு ஏற்பாடுகளை DD என்கின்ற "வலை சித்தர்" U K Info Tech மற்றும் "விதை KALAAM " குழுவினர் ஏற்படுத்தி இருந்தார்கள்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் , சிறப்பாக பணியாற்றிய நடுவண் குழுவுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டர்கள்.
இடையிடையே வலைபதிவர்கள் அறிமுகங்களும் நடைபெற்றது.
மதிய உணவு பரிமாறல் பொண்ணு வீட்டுல, மாப்ள வீட்டுல கூட இப்படி பரிமாறியது கிடையாது, அப்படி ஒரு கவனிப்பு, ஐயா என்ன வேணும்…!, இன்னும் வேணுமா….!? ன்னு பாசத்தை பொழிந்துவிட்டார்கள் இன்றைக்கெல்லாம் உறவினர் வீட்டு நிகழ்வுகளுக்கு சென்றால் யாரு பரிமாறுகிறார்கள் என்று தெரியாது, ஆனால் இங்கோ விழா குழுவினரே எல்லாம் செய்து முடித்திருகின்றனர்.
மதிய உணவு முடிந்ததும் முக்கனிகளை கொடுத்து திக்கு முக்காட வைத்தார்கள், தமிழ் விழாவில் தமிழ் கனிகளை கொடுத்து விழா குழுவினர் நம்மை நெகிழ்ச்சி பெற வைத்துவிட்டார்கள்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு புத்தக வெளீயீட்டு விழா நடைபெற்றது, திரு ஐயா கரந்தை ஜெயராம் அவர்களின் புத்தக வெளியீடு.
மலேசியா தவரூபன் அவர்களின் நூல் வெளியீடு.
மாலையில் குழி பணியாரம் (இனிப்பு/காரம்) கொடுத்து இன்னும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு போய்விட்டார்கள்.
பதிவு செய்த அனைவருக்கும் ஒரு வலைபதிவு கையேடும் ஒரு புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.
அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள் | மென்மேலும் வளர்க.
உங்களுடன்
பாபு நடேசன்
தமிழ் அறிவு கதைகள்
+91 9087499621
tamilarivukadhaikal@gmail.com
வலைபதிவர் திருவிழா 2015 நன்றி மற்றும் பாராட்டு பதிவு | தமிழ் அறிவு கதைகள்
Reviewed by haru
on
October 13, 2015
Rating:
No comments