aapai pidugiyathu kurangu tamilstory
ஆப்பைப் பிடுங்கியது குரங்கு
ஓரிடத்தில் பெரிய கட்டிடம் ஒன்று கட்டும் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
மதிய உணவு உண்ணுவதற்காக வேலைக்காரன் வெளியே சென்றிருந்த சமயம், சில குரங்குகள் அந்த இடத்திற்குக் வட்டமாக வந்தன.
கட்டிடத்திற்கான மர வேலை நடைபெற்று வந்த இடத்திற்குக் குரங்குகள் போய்ச் சேர்ந்தன.
அங்கே ஒரு பெரிய மரம் சிறிதளவு பிளக்கப்பட்டு அதில் ஆப்பு நன்று சொருகி அடித்து வைக்கப்பட்டிருந்தது.
அந்தப் பக்கம் பார்த்த ஒரு குரங்கு மற்றொரு குரங்கிடம், அதோ பார், அர்த்தமில்லாமல் ஒரு மரப் பிளவில் யாரோ ஆப்பைச் சொருகி வைத்திருக்கிறார்கள் என்று கூறிற்று.
இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே. அதனால் நமக்கென்ன நஷ்டம் என்று மற்றொரு குரங்கு கூறிற்று.
அனாவசியமான சொருகப்பட்டிருக்கும் அந்த ஆப்பைப் பிடுங்கி எறியப் போகிறேன் என்று கூறியவாறு முதல் குரங்கு அந்த மரத்தின்மீது ஏறி அமர்ந்து ஆப்பை சிறுகச் சிறுக அசைத்துப் பிடுங்கலாயிற்று.
ஆப்பு விடுபட்டதும் பிளவுபட்ட மரப் பலகை சடாரென்று ஒன்று சேர்ந்தது.
அதனுள் குரங்கின் விதைகள் சிக்கிக் கொள்ளவே குரங்கு துடிதுடித்துச் செத்தது.
தனக்குச் சம்பந்தப்படாத விவகாரத்தில் தலையிட்டதால்தான் குரங்கு வீணாக தன் உயிரைவிட நேர்ந்தது.

Reviewed by haru
on
August 22, 2016
Rating:
No comments