Ads Below The Title

SIVAPPU MALAI TAMIL STORY

சிவப்பு மலை!

பல வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரைச் சுற்றியுள்ள கடல்பகுதியில் பயங்கரமான வாள் மீன்கள் நிரம்பியிருந்தன. இவற்றின் மூக்குப் பகுதி நீளமாக வாள் போல இருக்கும்.

மீன் பிடிக்க கடலுக்குள் செல்லும் மீனவர்களையும் படகுகளையும் வாள் மூக்கால் குத்தி, கடலில் இருந்து விரட்டும். கடற்கரைகளில் அமரும் மக்களையும் சும்மா விடாது. அந்த நேரத்தில் சிங்கப்பூரின் அரசராக இருந்தவர் ராஜா இஸ்கந்தர். தனது படைவீரர்களிடம் வாள் மீன்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்.பெரிதாக வந்த ஓர் அலையில் கடலுக்குள் அடித்துச் செல்லப் பட்ட வீரர்கள், ஈட்டியால் வாள் மீன்களைக் கொல்ல முயன்றனர். ஆனால், ஜெயித்தது என்னவோ வாள் மீன்கள்தான்! பல வீரர்களைத் தங்கள் வாள் முக்கால் காயப்படுத்தி துரத்தி அடித்தன.

வீரர்களின் ரத்தத்தால் கடல் செந்நிறமாக மாறியது.போர்வீரர்களில் பலர் இறந்ததால் பயந்துபோனார் அரசர். சோகமாக கடற்கரை மணலில் நடந்துகொண்டு இருந்தார். இந்தப் பயங்கரமான வாள் மீன்களை எப்படிக் கொல்வேன் என்று கத்தினார். வழி இருக்கிறது என்றது ஒரு குரல். திரும்பிப் பார்த்தார் அரசர். அருகில் இருந்த பாறையில் ஒரு சிறுவன் அமர்ந்து இருந்தான். அவனே தொடர்ந்து, நீரில் வாழைமரங்களால் ஒரு சுவர் எழுப்புங்கள். அலையில் வாள் மீன்கள் வரும்போது அவற்றின் வாள் மூக்கு கூர்மையாக இருப்பதால் வாழை மரத்தில் குத்தி மீன்கள் சிக்கிவிடும்! என்றான்.அதன்படியே நாடு முழுவதும் இருந்து வாழை மரங்களை எடுத்து வந்து கடலில் சுவர் எழுப்பினார் கள்.

அடுத்து வந்த பெரிய அலையில் வாள் மீன்கள் வாழை மரத்தில் சிக்கிக்கொண்டன. அவற்றை அரசரின் வீரர்கள் கொன்று குவித்தனர்.ஒரு வீரன்கூட இறக்கவில்லை. அதே நேரம், ஒரு வாள் மீன்கூட தப்பிக்கவில்லை! இறந்து கிடந்த மீன்களை எடுத்து சமைத்துப் பெரிய திருவிழாவாகவே கொண்டாடினர்.ஆனால், அரசருக்கு ஒரு வருத்தம் இருந்தது.

தனது தளபதியிடம் அந்த சிறுவன் மிகவும் புத்திசாலி. என்னைவிட சக்தி வாய்ந்தவனாக ஒரு நாள் வருவான் என்றார்.அன்று இரவு அந்தச் சிறுவனைக் கொல்ல நான்கு வீரர்களை அனுப்பினான் தளபதி. அவர்கள் அந்த மலைக்குச் சென்றனர். அங்கே பயங்கர உருவத் தோடு ஒரு கிழவி நின்றிருந்தாள், ஏமாற்றுக்காரர் களே என்று கத்திய அவள், உங்களுக்கு உதவி செய்த சிறுவனையே கொல்லப் போகிறீர்களா? நான் உங்களுக்குத் தண்டனை தருவேன். என்றாள்.பயந்துபோன வீரர்கள் ஓட்டம் பிடித்தார்கள்.

திடீரென அவர்கள் முன் இருந்த தரைப் பகுதி பிளந்தது. அதில் விழுந்து இறந்து போனார்கள் வீரர்கள். அவர்களது ரத்தம் ஆறாக ஓடி மலையையே ரத்த நிறமாக்கியது. அதிலிருந்து அதற்கு சிவப்பு மலை என்று பெயர் வந்தது.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அந்தக் கிழவியோ, சிறுவனோ காணப்படவில்லை. எப்போது அந்தச் சிறுவன் திரும்பி வரு கிறானோ அதுவரை மலை சிவப்பாகத்தான் இருக்கும்.

பல உயிர்களைக் காப்பாற்றிய அப்பாவி சிறுவனைக் கொல் வதற்காகப் போட்ட வஞ்சகத் திட்டத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் இது சிங்கப்பூர் மக்களின் நம்பிக்கை!
SIVAPPU MALAI TAMIL STORY SIVAPPU MALAI TAMIL STORY Reviewed by haru on August 21, 2016 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]