pon muttaiyidum vaathu tamil story

Ads Below The Title

பொன் முட்டையிடும் வாத்து!

ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். அவன் ஒரு பேராசை பிடித்தவன். அவன் நிறைய வாத்துக்கள் வளர்த்து வந்தான். அந்த வாத்துக்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் ஒரு தங்க முட்டை இட்டு வந்தது. அந்த விவசாயி அந்த தங்க முட்டைகளை விற்றுப் பணக்காரன் ஆனான்.

வாத்து ஒவ்வொரு நாளும் ஒரு தங்க முட்டைதானே இடுகிறது. இதற்காக ஒவ்வொரு நாளாகக் காத்திருக்க வேண்டுமா? வாத்தின் வயிற்றுக்குள் தான் நிறைய தங்க முட்டைகள் இருக்கும் என யோசிக்க தொடங்கினான்.

எல்லாவற்றையும் ஒன்றாக எடுத்து விற்றால், ஒரே நாளில் மிகப் பெரிய பணக்காரன் ஆகலாம் என நினைத்தான்.

அடுத்தநாள், விவசாயி எல்லா தங்க முட்டைகளையும் ஒன்றாக எடுப்பதற்காக, ஒரு கத்தியை எடுத்தான்.

வாத்தின் வயிற்றைக் கீறினான். வாத்து துடிதுடித்து இறந்தது. அதன் வயிற்றினுள் அன்றைய தினம் போட வேண்டிய ஒரே ஒரு தங்க முட்டை மட்டும் இருந்தது.

வாத்து இறந்ததினால் ஒவ்வொரு நாளும் கிடைத்து வந்த தங்க முட்டையும் அவனுக்கு கிடைக்காமல் போய்விட்டது.

விவசாயி தான் செய்த முட்டாள்தனமான செயலை எண்ணி கவலைப்பட்டு வருந்தி "பேராசை பெரும் நஷ்டம் கொடுக்கும்" என உணர்ந்தான்.

பாடம் : பேராசை பெரும் நஷ்டம் கொடுக்கும்..
pon muttaiyidum vaathu tamil story pon muttaiyidum vaathu tamil story Reviewed by haru on September 04, 2016 Rating: 5

No comments