தெனாலிராமன் கதைகள் : கூன் வண்ணான்

Ads Below The Title
தெனாலிராமன் கதைகள் : கூன் வண்ணான்

ஒரு போலிச்சாமியார் ஒருவன் விஜயநகரத்துக்கு வந்துசேர்ந்தான். அவன் மக்களுக்கு போதைமருந்தை விற்று பணத்தை ஏராளமாகசம்பாதித்துக் கொண்டிருந்தான். போதை மருந்தை உட்கொண்டமக்கள் பலர் பைத்தியம் ஆனார்கள். பலர் மாண்டார்கள்.

இச்செய்திதெனாலிராமனுக்கு எட்டியது. ஆகையால் போலிச் சாமியாரைத்தொலைத்துக் கட்ட முடிவு செய்தான். அதன்படியே சாமியாரை சந்தித்து அவனுடன் நட்புக் கொண்டான். தகுந்த சமயம் பார்த்து சாமியாரைக்கொன்று விட்டான்.

இச்செய்திமன்னனுக்கு எட்டியது. தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பி அழைத்துவரச்செய்தார். ஏன் சாமியாரைக் கொன்றாய்என்று கேட்டார். அதற்குப் போதை மருந்தால் பலர்பைத்தியம் பிடித்து மாண்டனர். ஆகையால் தான் கொன்றேன்என்றான்.

போலிச்சாமியார்தவறு செய்து இருந்தாலும் அவனைக்கொல்ல உனக்கு ஏது அதிகாரம்? அதை என்னிடமல்லவா தெரிவித்திருக்க வேண்டும். அப்படி தெரிவித்திருந்தால் நானேஅந்தப் போலிச் சாமியாருக்குத் தக்கதண்டனை கொடுத்திருப்பேன்.

இவ்விஷயத்தில்நீ தன்னிச்சையாக செயல் பட்டதற்கு உனக்குமரணதண்டனை விதிக்கிறேன் என மன்னர் தீர்ப்புக்கூறினார்.

உடனே தன் ஆட்களை அழைத்துஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு குழியை வெட்டிஅதில் தெனாலிராமனை கழுத்தளவு புதைத்து யானையை விட்டு தலையைஇடறுமாறு பணித்தார்.

அவ்வாறேதெனாலிராமனும் குழியில் கழுத்தளவு புதைக்கப்பட்டான். பின் யானையைக் கொண்டுவர பணியாளர்கள் சென்று விட்டனர்.

அப்போதுசிலகழுதைகளை ஓட்டிக்கொண்டு ஒரு கூன் வண்ணான்வந்து கொண்டிந்தான்.

ஒரு மனிதன் பூமிக்குள் கழுத்தளவுபுதையுண்டு இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பின் தெனாலிராமனிடம் வந்துஐயா, தாங்கள் ஏன் இவ்வாறுபுதையுண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டான்.

அதற்குதெனாலிராமன் எனக்கு மிக நீண்டநாட்களாகவே முதுகு கூன் விழுந்துவிட்டது. அதனால் மிகவும் சிரமப்பட்டுநடந்து வந்தேன். நேற்று ஒரு வைத்தியரைஆலோசனை கேட்டேன். அவர்தான் ஒருநாள் முழுவதும் இவ்வாறுஇருந்தால் கூன் நிமிரிந்து விடும்என்று சொன்னார். நான் குழியில் புதையுண்டுஒருநாள் ஆகப் போகிறது. ஆகையால்மண்ணைத் தோண்டி என்னை மேலேஎடு என்றான்.

அதன்படியேகூன் வண்ணானும் மண்ணைத் தோண்டி தெனாலிராமனைமேலே தூக்கி விட்டான். இப்போதுதெனாலிராமனைப் பார்த்தான். அவன் முதுகு கூன்இல்லாமல் நேராக நிமிர்ந்து நின்றான். இதை உண்மை என்று நம்பியகூன் வண்ணான் அதே குழியில்அவனைக் கழுத்தளவு புதைக்கச் சொன்னான். தெனாலிராமனும் கூன் வண்ணானை அவ்வாறேசெய்தான்.

உடனே தெனாலிராமன் அவ்விடத்தைவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான். சிறிது நேரத்தில் பணியாட்கள்யானையுடன் அங்கு வந்தனர். யானையைவிட்டு குழியில் புதையுண்ட மனிதனின் தலையை இடறச் செய்தனர். கூன் வண்ணான் தலை சின்னாபின்னமாகியது.

அச்சமயத்தில்தன் அரண்மனை அதிகாரிகளும் போலிச்சாமியாரைக் கொன்றது நியாம்தான் அதனால்தெனாலிராமனைக் கொல்ல வேண்டாம் என்றுகேட்டுக் கொண்டனர்.

அந்நேரத்தில்பணியாட்களும் அங்கு வந்து "தெனாலிராமனின்தலையை யானையை விட்டு இடறிவிட்டோம்" என்று தெரிவித்தனர்.

தெனாலிராமனின்மரணத்துக்கு மன்னர் வருந்திக் கொண்டிருக்கையில்மனனர் முன் தெனாலிராமன்தோன்றினான். தெனாலிராமனைக் கண்ட மன்னர் மகிழ்ந்தார். நீ யானையால் இறந்ததாகப் பணியாட்கள் தெரிவித்தார்களே.. பின் எப்படி உயிரோடுவந்தாய் என்று வினவினார்.

அதற்குத்தெனாலிராமன் நடந்தவற்றை விவரமாகக் கூறினான். மன்னரும் அவனுடைய சாமர்த்தியத்துக்கு மனமாரப்பாராட்டி பரிசு வழங்கினார்.
 
தெனாலிராமன் கதைகள் : கூன் வண்ணான் தெனாலிராமன் கதைகள் : கூன் வண்ணான் Reviewed by haru on July 20, 2012 Rating: 5

No comments