சிறுவர் நீதிக்கதைகள் – நேர்மை 2
நேர்மை! -2
இலுப்பூர்என்ற ஊரில் ராமன், சோமன்என்று இரு நண்பர்கள் இருந்தனர். இருவரும் ஓரளவு படித்திருந்த போதிலும், எவ்வித உத்தியோகமும் கிடைக்காமல், தம் ஊரில் ஏதேதோவேலைகளைச் செய்து பிழைத்து வந்தனர்.
ராமன் தனக்குக் கிடைக்கும் வருமானம் போதாமல் போனதால் கோபம்கொண்டு அந்தக் கோபத்தைத் தன்மனைவி, மக்கள் மீது காட்டிவந்தான். சோமனோ தனக்குக் கிடைத்ததைக்கொண்டு திருப்தி அடைந்து வாழ்க்கை நடத்திவந்தான்.
ராமன் தனக்குக் கிடைக்கும் வருமானம் போதாமல் போனதால் கோபம்கொண்டு அந்தக் கோபத்தைத் தன்மனைவி, மக்கள் மீது காட்டிவந்தான். சோமனோ தனக்குக் கிடைத்ததைக்கொண்டு திருப்தி அடைந்து வாழ்க்கை நடத்திவந்தான்.
ஒருநாள் ராமன், சோமனிடம், “சோமா! நமக்கு திடீரென ஒரு புதையல்கிடைத்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்?'' என்று கேட்டான்.
“ராமா! இப்படியெல்லாம் நினைக்காமல் பாடுபட்டு நேர்மையாக இருந்து பணம் சேர்... அதுதான் நல்லது,'' என்றான் சோமன்.
சில நாட்களுக்குப் பிறகு ராமனும், சோமனும்ஏதோ ஒரு வேலையின் பொருட்டு, பட்டணத்திற்குக் கிளம்பினர். வழியில் ஒரு பைகிடந்ததைக் கண்ட ராமன் மகிழ்ச்சியுடன்அதனை எடுத்து வந்தான்.
அதில் ஐம்பது ஆயிரம் இருப்பதுகண்டவன், “ஆகா! என் அதிர்ஷ்டமேஅதிர்ஷ்டம். இதனால் எவ்வளவு சந்தோஷப்படுகிறேன் தெரியுமா? கடவுளே என் நிலையைப்பார்த்து இதை எனக்குக் கொடுத்திருக்கிறார். இதை நாம் இருவரும் சமமாகப்பங்கிட்டுக் கொள்ளலாம்,'' என்றான்.
சோமனோ, “வேண்டாம். இது யாரோ தொலைத்துவிட்ட பணம். நாம் இப்பையைகிராம அதிகாரியிடம் ஒப்படைத்து விட்டால், அவர் விசாரித்து இதைஉரியவரிடம் சேர்த்து விடுவார். அதனால், பணம் உரியவரிடம்சேர்ந்து விடும். மற்றவர் பணத்துக்குநாம் ஆசைப்படக் கூடாது. நாமே உழைத்துப்பணம் சம்பாதித்து கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடன் வாழ்வதுதான்நல்லது,'' என்றான்.
ராமனோ, “முடியாது... எனக்கு கிடைத்ததை நான்ஏன் கொடுக்க வேண்டும்? வழியில்எனக்கு கிடைத்தது. இது யாருக்குச் சொந்தம்என்பதும் எனக்குத் தெரியாது. பணம் கிடைத்த போதும், நீயும் என்னுடன் இருந்தாய் அதனால் உனக்கும் நான்பங்கு கொடுத்தே ஆக வேண்டும். அதனால், நீ பாதிப் பணத்தை வாங்கிக்கொள்,'' என்று இருபத்தைந்து ஆயிரத்தைஅவனது பையில் திணித்தான். சோமன்பதில் பேசாமல் இருந்தான்.
ராமன் பட்டணத்திற்கு சென்று தன் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் துணிகளை வாங்கினான். சோமன்எதுவும் வாங்கவில்லை.
இந்த சம்பவம் நிகழ்ந்த ஒருமாதத்திற்கு பின் சோமன், ராமனிடம்சென்று, “ராமா எனக்கு பட்டணத்தில்உத்தியோகம் கிடைத்துவிட்டது. நான் அதை ஏற்கப்போகிறேன்,'' என்றான்.
அதை கேட்டு ராமன் ஆச்சரியப்பட்டு, “உனக்கு எப்படி இந்த வேலைகிடைத்தது?'' என்று கேட்டான்.
சோமனும், “நீ கண்டெடுத்த பணத்தில்எனக்கு பாதி பணத்தை கொடுத்தாயேநினைவில் இருக்கிறதா? அதோடு என் மனைவிகொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்திருந்த இருபத்தைந்து ஆயிரத்தை சேர்த்து, நம் கிராம அதிகாரியிடம்கொடுத்து நடந்தைக் கூறினேன். மீதமுள்ள இருபத்தைந்து ஆயிரத்தை நானே சம்பாதித்து அவரிடம்கொடுத்து விடுவதாகவும் கூறினேன். அந்த அதிகாரியும் நான்சொன்னதை கேட்டு மகிழ்ந்து போனார்.
அவரும் விசாரித்து அந்த பணப்பை நம்ஊரில் காய்கறி வியாபாரம் செய்யும்நல்லசாமியின் பணம் என அறிந்து, அவனிடம் ஒப்படைத்து என்னைப் பற்றிச் சொன்னார். நல்லசாமிக்கு அரசாங்கப் பொக்கிஷ அதிகாரியைத் தெரியும்.
அரசாங்கபொக்கிஷத்தில் தினமும் லட்சம் ரூபாய்க்குக்குறையாமல் வரவு வந்து கொண்டேஇருக்கு. அதற்குக் கணக்கு எழுதி நாணயமாய்காத்து வர ஒருவன் தேவைஎன அவர் நல்லசாமியிடம் கூறினார். நல்லசாமி என்னைப் பற்றியும், நான்நேர்மையுடன் பணத்தை கிராம அதிகாரியிடம்ஒப்படைத்ததை பற்றியும் விவரமாகக் கூறி என்னைச் சிபாரிசுசெய்ததால் எனக்கு இந்த உத்தியோகம்கிடைத்தது,'' என்றான்.
“அப்படியானால்என்னை விட்டு விட்டு நீமட்டும் பட்டணத்திற்குப் போகப் போகிறாயா?'' என்றுபெருமூச்சு விட்டவாறே கேட்டான் ராமன்.
சோமனும், “இல்லை, உன்னையும் கூட்டிக்கொண்டுதான்போகப் போகிறேன். நல்லசாமியிடம் உன்னைப் பற்றிக் கூறிஉன் ஏழ்மைதான் உன்னை ஆசைகொள்ளச் செய்கிறதுஎன்றும், உன்னை அவனது வியாபாரத்தில்கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ளும்படியும் கூறினேன். அவனும் அதற்கு சம்மதித்தான். எனவே, நீயும் என்னோடு கிளம்பு,'' என்றான்.
“சோமா! நேர்மையாக நடந்தால் நிச்சயம் நல்ல பலன் என்பதைஉணர்ந்தேன். இனி உன்னைப் போலவேநானும் நடக்கிறேன்,'' என்றான் ராமன்.
இரு நண்பர்களும் பட்டணத்திற்குப் போய் தம் வேலைகளைச்செய்து கொண்டு சுகமாக வாழ்ந்தனர்.
Source : தினமலர்
சிறுவர் நீதிக்கதைகள் – நேர்மை 2
Reviewed by haru
on
August 11, 2012
Rating:
No comments